கோலாலம்பூர், மார்ச் 23-
ஒரு விழுக்காடு விகிதத்தில் Ganjaran Kesetiaan Simpan SSPN Prime 2.22 என்ற வெகுமதி திட்டத்தை பி.டி.பி.டி.என். மீண்டும் அமல்படுத்துகிறது. விசுவாசத்திற்கான இவ்வாண்டு வெகுமதி பிரச்சார இயக்கம் என்பது ஒரு விசேஷமான திட்டம் என்று பி.டி.பி.டி.என். தலைவர் டத்தோ வான் சைபுல் வான் ஜான் தெரிவித்தார்.
நீண்ட காலத் திட்டத்தின் அடிப்படையில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு பி.டி.பி.டி.என். சிறப்பு செய்கிறது. இந்தப் பிரச்சார இயக்க காலகட்டத்தின் போது குறைந்தபட்சம் 500 வெள்ளியினை சேமிப்பில் வைக்கும் Simpan SSPN Prime முதலீட்டாளர்கள் இத்தகைய விசுவாச வெகுமதி திட்டத்தின் அனுகூலங்களை அனுபவிக்கலாம்.
திட்டத்தை பிரபலப்படுத்தும் பிரச்சார இயக்கம் இவ்வாண்டு பிப்ரவரி மாதம் 22ஆம் தேதியன்று துவங்கப்பட்டு ஏப்ரல் மாதம் 30ஆம் தேதிவரை நீடிக்கும். 2004ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம்தேதிவரை Simpan SSPN Prime சேமிப்பில் கணக்கு வைத்திருக்கும் முதலீட்டாளர்கள் இந்த விசுவாச வெகுமதித் திட்டத்தில் பங்கேற்கும் தகுதியினை பெற்றுள்ளார்கள். இத்திட்டம் அமலுக்கு வருவது இது நான்காம் ஆண்டு. வழக்கமான வருடாந்திர மூன்று விழுக்காடு டிவிடண்டுடன் சேர்த்தால் இது ஒரு கூடுதல் அனுகூலமாகும். கூடுதல் பட்ச வெகுமதித் தொகையாக 8,000 வெள்ளி கணக்கில் சேர்க்கப்படும்.
மூன்று விழுக்காடு டிவிடண் வழங்குவது பற்றி குறிப்பிட்ட வான் சைபுல் Simpan SSPN என்பது சந்தையில் நிலவும் இதரத் திட்டங்களோடு ஒப்பிடுகையில் இது ஒரு தலைசிறந்த திட்டம் என்பது வெள்ளிடைமலை. Simpan SSPN என்பது முற்றிலும் பொருத்தமானத் திட்டம். பொருளாதார நிச்சயமற்ற நிலையில் 8,000 வெள்ளி வரை வரிவிலக்கு உட்பட பல்வேறு சிறப்பு அனுகூலங்கள் வழங்கப்படுவதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
விசுவாச வெகுமதித் திட்டத்திற்கான விதிமுறைகளும் நிபந்தனைகளும்
தேவைப்பட்டால் பிரச்சார இயக்கத்தின் காலகட்டத்தை மாற்றவோ அல்லது அதில் திருத்தம் செய்யும் முழு உரிமையினை பி.டி.பி.டி.என். பெற்றுள்ளது. இதன் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தில், ஊடகங்களில் மற்றும் கிளை அலுவலகங்கள் வாயிலாக முன்கூட்டியே இதற்கான அறிவிப்பு வெளிவரும்.
பிரச்சாரக் காலகட்டம் அமலில் இருக்கும்போது முதலீட்டாளர் தமது கணக்கிலிருந்து எந்தவொரு பணத்தையும் மீட்டும் கொள்ளமுடியாது. இந்த காலகட்டத்தின்போது முதலீட்டாளர் ஒருவர் இறந்து விட்டால் இவரின் சேமிப்புக் கணக்கின் சார்பில் விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த வெகுமதித் திட்டத்தின்கீழ் அனுகூலங்களை பெற தகுதியுடைய வெகுமதித் திட்ட அனுகூலங்களை பெறும் உரிமையினை முதலீட்டாளர் மற்றவருக்கு மாற்றிவிட முடியும்.
முதலீட்டாளர்களுக்கு விசுவாச வெகுமதித் திட்டம் வழங்கும் பி.டி.பி.டி.என்.னின் முடிவே இறுதியானது. இது சம்பந்தமாக இதர தரப்புகள் கேள்வி எழுப்பும் என்றால் அதுகுறித்து பரிசீலிக்கப்படாது. அவ்வப்போது பி.டி.பி.டி.என். அகப்பக்கத்தை வலம் வருமாறு முதலீட்டாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் துல்லியமாக அறிந்து கொள்வதற்கு இது உதவும். முதலீட்டாளர் இணையதளத்தின் வழி தமது சேமிப்பை மேலும் அதிகரித்துக் கொள்ளலாம். மேல் விவரங்களுக்கு : https://lovesspn.com/GanjaranKesetiaan2022 என்ற அகப்பக்கத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்