கிள்ளான், மார்ச் 1-
இங்குள்ள ஜி.எம். கிளாங் மொத்த வியாபாரத்தலம் மீண்டும் பரபரப்பாகச் செயல்படத் தொடங்கும் என அதன் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சுமார் ஈராண்டு இடைவெளிக்குப் பிறகு தாங்கள் முழுமையாக செயல்படுவதற்கு அரசாங்கம் அனுமதித்திருப்பதாலும் மீண்டும் வாடிக்கையாளர்களை அதிகமாக ஈர்க்கும் வாய்ப்பு இருப்பதாலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தங்களால் அதிகமாகப் பங்காற்ற முடியும் என்று ஜி.எம். மொத்த வியாபார வர்த்தக மையத்தின் தொடர்பு துறை நிர்வாகி நோர் சுஹாய்டா ஒஸ்மான் கூறினார்.
வாடிக்கையாளர்களின் வாங்கும் சக்தி மற்றும் தொழில் முனைவர்கள் அதிகரிப்பின் அடிப்படையில் இனிவரும் சில மாதங்களுக்கு பொருளாதாரத் துறையின் வளர்ச்சி மிகவும் சாதகமாக இருக்கும் என அவர் கருத்துரைத்தார். ஜி.எம். கிளாங் வர்த்தக மையத்தைப் பொறுத்த வரையில் வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்களிடையே வணிக பரிவர்த்தனைகள் எப்போதும் பரபரப்பாக இருப்பதை அது உறுதி செய்து வருகிறது.
இங்கு வரக்கூடிய சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஜி.எம். கிளாங் வளாகத்தில் வாடகைக்கு கிடைக்கக்கூடிய கடைகளை பற்றியும் வணிகர்களிடமிருந்து ஆக்ககரமான கோரிக்கைகள் கிடைக்கப்பெற்று வருகின்றன. இங்கு தங்களின் வணிகத்தை விரிவாக்கம் செய்வதில் அவர்களுக்கு உள்ள நம்பிக்கையை இது காட்டுகிறது.
இதற்கு முன்பிருந்த சூழ்நிலையுடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டு வணிக இட வாடகைக்கான கோரிக்கை 30 விழுக்காடு அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் நோர் சுஹாய்டா கூறினார். மேலும் தற்போது இருக்கக்கூடிய அடிப்படை வசதிகள் உள்ள இதர வசதிகளுடன் நாள் ஒன்றுக்கு 20,000 வாடிக்கையாளர்களை ஈர்க்கக்கூடிய வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்