img
img

எஸ்.எஸ்.பி.என். சேமிப்பு திட்டத்திற்கான லாப ஈவு பி.டி.பி.டி.என் அறிவிப்பு
புதன் 23 பிப்ரவரி 2022 15:39:43

img

பி.டி.பி.டி.என் என்ற தேசிய கல்வி கடனுதவி கழகம் எஸ்.எஸ்.பி.என். என்ற கல்வி சேமிப்பு  திட்டத்திற்கான லாப ஈவு  விகிதத்தை  நேற்று  அறிவித்தது. இது 2021 ஆம் ஆண்டுக்கான ஒன்று. அதோடு எஸ்.எஸ்.பி.என். அனுகூலம் திட்டம் சம்பந்தமான  பிரச்சார இயக்கமும் துவங்கப்பட்டது. கோலாலம்பூர் மெனாரா  பி.டி.பி.டி.என். அரங்கில் இந்நிகழ்வு நடத்தப்பட்டது.

எஸ்.எஸ்.பி.என். சேமிப்பு லாப ஈவு 3 விழுக்காடு

எஸ்.எஸ்.பி.என்.  சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்தவர்களுக்கான 2021 ஆம் ஆண்டுக்கான லாப ஈவு மூன்று விழுக்காடு என்ற பி.டி.பி.டி.என்.  தலைவர் டத்தோ வான்  சைப்புல்  வான் ஜான் அறிவித்தார். பி.டி.பி.டி.என்.  தலைமை செயல்முறை அதிகாரி அகமது டாசுக்கி அப்துல் மஜித் உடன் இருந்தார்.

லாப ஈவு வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட தொகை 206.25 மில்லியன். இது 5.24 மில்லியன் முதலீட்டாளர்களுக்கு நன்மை  பயக்கும் எஸ்.எஸ்.பி.என். சேமிப்பு திட்டம் அறிமுகம் ஆனதிலிருந்து லாப ஈவு வழங்குவதற்கான ஆக மொத்த தொகை 1.06 பில்லியன். முதலீட்டாளருக்கு வழங்கப்படும் லாப ஈவு என்பது போட்ட முதலீடு மூலம் பெறப்பட்ட வருமானத்தை அடிப்படையாக கொண்டது.

நடப்பு கணக்கு மற்றும் நிரந்தர வைப்புத் தொகை வழி வரும் லாபத்துடன் ஒப்பிடுகையில் பி.டி.பி.டி.என். வழங்கும்  லாப ஈவு கவர்ச்சியானது என்று பி.டி.பி.டி.என்.  தலைவர் வான் சைப்புல்  வான் ஜான் சுட்டிக்காட்டினார். பேங்க நெகாரா வழங்கும் விகிதம்  1.75 விழுக்காடு நிலையில் உள்ளது.

2021 ஆம் ஆண்டுக்கான உள்நாட்டு வங்கிகள் வழங்கும் விகிதம் 1.50 விழுக்காட்டிலிருந்து 2.20  விழுக்காடு வரை.  எனவே  எஸ்.எஸ்.பி.என்  வழங்கும் அனுகூலமான  சிறந்த ஒன்று என்று குறிப்பிடலாம். லாப ஈவு  மட்டுமின்றி எஸ்.எஸ்.பி.என். சேமிப்பு திட்டமானது பல்வேறு  அனுகூலங்களை முதலீட்டாளர்களுக்கு ஏற்படுத்தி தருகிறது. வருடத்தில் எட்டாயிரம் வெள்ளி வரை வரி விலக்கு சலுகை  உண்டு. தக்காபுல் காப்புறுதி  பாதுகாப்பும் உண்டு. வெறும் லாப ஈவு மூன்று  விழுக்காடு என்பதோடு அனுகூலம்  முற்றுப்பெறுவதில்லை. மாறாக  முதலீட்டாளர்கள் பல மடங்கு அனுகூலங்களை அனுபவிக்கும் அருகதையுடையவர் என்று  வான்   சைப்புல்  வலியுறுத்தினார்.

சந்தையில்  காணப்படும் வேறு பல சேமிப்பு திட்டங்களோடு  ஒப்பிடுகையில்  மூன்று விழுக்காடு லாப ஈவு என்பது  எஸ்.எஸ்.பி.என். சேமிப்பு திட்டமானது  போட்டியாற்றலை கொண்டுள்ளது என்பதனை எடுத்துரைப்பதாக இருக்கிறது. நாட்டின் பொருளாதார நிச்சயமற்ற நிலையில்  இருக்கும் தறுவாயில் எஸ்.எஸ்.பி.என். சேமிப்பு  திட்டம்  நல்லதொரு டிவிடென்  தொகையினை வழங்கவிருப்பது இதன்  செயல்பாட்டிற்கு சான்று பகருகிறது. மூன்று  விழுக்காடு டிவிடன் மற்றும் ஒரு விழுக்காடு அனுகூலம்  ஆகியவை  மலேசிய  சமுதாயத்தின்  ஆர்வத்தை  தூண்டும்  ஒன்றாகும்.

மேலும்  தங்களின் பிள்ளைகளுக்கான கல்வி சேமிப்பிற்காக எஸ்.எஸ்.பி.என் சேமிப்பு திட்டமானது மலேசிய சமூகத்தின் முதன்மை தேர்வாக இருக்கும். சமுதாயம் மற்றும் முதலீட்டாளர்கள் ஆதரவுடன் பி.டி.பி.டி.என். மேற்கொண்ட முயற்சி காரணமாக 2021 ஆம்  ஆண்டுக்கான ஆக மொத்த சேமிப்பு தொகை 3.01 பில்லியன்.  2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான  எஸ்.எஸ்.பி.என். சேமிப்பின் ஆக மொத்த தொகை 10.88 பில்லியன். 2021 ஆம் ஆண்டுக்கான சேமிப்பு முதலீட்டின் வழி வந்த லாபம் 267.61 மில்லியன்.

வருடத்திற்கு 400,000 புதிய கணக்குகள் திறக்கப்பட வேண்டும் என்பதே  எங்களின் இலக்கு. எனினும்  இலக்கினை மிஞ்சிவிட்டோம். ஆக மொத்தம் 421,281 புதிய கணக்குகள் 2021 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. எஸ்.எஸ்.பி.என். சேமிப்பு திட்டத்தில் முதலீட்டாளர்கள் லாப ஈவு சம்பந்தமான விவரங்களை பெற www.ptptn.gov.my  என்ற வலைத்தளத்தை இம்மாதம் 25 ஆம்  தேதி முதல் வலம்  வரலாம்.

இதே நிகழ்வில்  பி.டி.பி.டி.என்.  எஸ்.எஸ்.பி.என். அனுகூலம் திட்டம், என்ற  பிரச்சார இயக்கத்தை தொடக்கி வைத்தது. ஒரு விழுக்காடு அனுகூலம் என்பது முதலீட்டாளர்களுக்கு வழங்கும் சிறப்பு வெகுமதியாக கருதப்படுகிறது.

 

 

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img