பண்டார் ஸ்ரீ பகவான், பிப். 16-
இரண்டு நாள் அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டு பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நேற்று முன்தினம்இரவு புரூணை தலைநகர் பண்டார் ஸ்ரீ பகவான் சென்றடைந்தார்.
கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் நாட்டின் 9ஆவது பிரதமராக பதவியேற்ற பிறகு அவர் புரூணைக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். பண்டார் ஸ்ரீ பகவான் அனைத்துலக விமான நிலையம் சென்றடைந்த சப்ரிக்கு அங்கு ராணுவ மரியாதை வரவேற்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை 10.45 மணியளவில் இஸ்தானா நூருல் இமான் அரண்மனையில் அவர் புரூணை ஆட்சியாளர் சுல்தான் ஹஸ்னால் போல்கியாவை சந்தித்தார்.
அப்போது சப்ரியின் துணைவியார் டத்தின்ஸ்ரீ முஹாய்னி, வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் அப்துல்லா, கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ ஷஹிடான் காசிம், புரூணைக்கான மலேசியத் தூதர் டத்தோ ராஜா ரெஸா ஆகியோர் உடனிருந்தனர்.
அரை மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றது. அதன் பிறகு புரூணை ஆட்சியாளர் வழங்கிய அரச விருந்துபசரிப்பில் பிரதமரும் மலேசிய பேராளர்களும் கலந்து கொண்டனர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்