img
img

கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் Click, Pay & Earn 2022 பி.டி.பி.டி.என். புதிய வியூகம்
திங்கள் 14 பிப்ரவரி 2022 15:12:50

img

கோலாலம்பூர், பிப். 12-

உயர் கல்விக்காக பெறப்பட்ட கடனைத் திருப்பிச் செலுத்துவதில் தேசிய உயர் கல்வி நிதியுதவிக் கழகம் (பி.டி.பி.டி.என்.) 2022 ஆம் ஆண்டில் மேலும் பல்வேறு வியூகங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது.

Shopee, BESTPay, SpayGlobal (SarawkPay) ஒத்துழைப்புடன் Click, Pay & Earn 2022  எனும் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான இயக்கத்தை அக்கழகம் இவ்வாண்டு மேற்கொண்டு வருகிறது.

இவ்வியக்கத்தில் பங்கேற்கும் தரப்பினர் ஏற்பாடு செய்துள்ள, கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான வழிகளின் வாயிலாக பி.டி.பி.டி.என். கடனை திருப்பிச் செலுத்துவதை எளிதாக்கும்  பொருட்டும் அதனை ஊக்குவிக்கும் வகையிலும் இதனை தாங்கள்  தொடக்கியிருப்பதாக அதன் தலைமை நிர்வாகி அஹ்மட் டாசுக்கி அப்துல் மாஜிட் கூறினார்.

BESTPay, SpayGlobal (SarawkPay)  ஆகிய செயலிகளை பயன்படுத்தி பி.டி.பி.டி.என். கடனை திருப்பிச் செலுத்தும் அனைவரும் இந்த Click, Pay & Earn 2022இயக்கத்தில் பங்கேற்கலாம்.

இம்மாதம் 8 ஆம் தேதி தொடங்கி வரும் ஏப்ரல் (2022) 30 ஆம் தேதி வரையில் இது அமலில் இருக்கும். இதன் மூலம் கிடைக்கக்கூடிய சலுகைகளுக்கு தகுதிபெற வேண்டுமானால் பி.டி.பி.டி.என். கடன் பெறுநர்கள் குறைந்தபட்ச மதிப்பிலான தொகையைச் செலுத்தினால் மட்டும் போதுமானதாகும்.

இவ்வியக்கம் பற்றிய மேல் விவரங்களை அறிவதற்கு www.ptptn.gov.my  என்ற அகப்பக்கத்தை வலம் வரலாம்.   

 

 

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img