img
img

எம்.ஏ.சி.சி தலைவரின் விவகாரத்தை மூடி மறைக்க வேண்டாம் பிரதமருக்கு கோபிந்த் அறிவுறுத்தல்
வெள்ளி 21 ஜனவரி 2022 11:15:00

img

கோலாலம்பூர், ஜன. 21-

டான்ஸ்ரீ அஸாம் பாக்கி மீதான தனது விசாரணையை தொடர்ந்து மலேசிய பங்கு ஆணையம் (எஸ்.சி) வெளியிட்ட முடிவுகளை  ஏற்றுக் கொள்ளும்படி அனைத்து தரப்பினரையும் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கேட்டுக் கொண்டிருப்பது தலைமைத்துவத்தின் மொத்த தோல்வியை காட்டுகிறது என்று  கோபிந்த் சிங் டியோ கூறினார்.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய (எம்.ஏ.சி.சி) தலைவர் அஸாம் பாக்கி மீதான பிரதமரின் அறிக்கை நாட்டின்  மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நிறுவன பிரச்சினைகளை கையாளுவதில் அரசாங்கம் முழுதோல்வி கண்டுவிட்டதை குறிப்பிடுகிறது என்று சிலாங்கூர் ஜ.செ.க. தலைவரும்  பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினருமான கோபிந்த் சிங் நேற்று அறிக்கை யொன்றில்  தெரிவித்தார்.

அனைத்து மக்களுக்கும் கேள்வி கேட்கும்  உரிமை இருக்கிறது என்ற உண்மையை பிரதமர் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும். குறிப்பாக அதிகாரிகளால் எடுக்கப்படும் முடிவுகள் தொடர்பில் ஏற்படும் கவலைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்களில் இது மிக அவசியம். இத்தகைய முடிவுகளை வாயை மூடிக்கொண்டு  ஏற்றுக் கொள்ளும்படி மக்களிடம் அவர் கூற முடியாது என்றார் கோபிந்த்.

இந்த சம்பவத்தில் 25(4) ஆவது பிரிவு மீறப்பட்டுள்ளது என விசாரணையின் போது முடிவெடுக்க முடியாமல் போனது ஏன் என்பதற்கு  காரணங்கள் ஏதும் கூறப்படவில்லை. அழுத்தம் கொடுத்த போது  இரண்டாவது அறிக்கையொன்றை எஸ்.சி.வெளியிட்டது என்று கோபிந்த் கூறினார். இதற்கு விளக்கமளிக்கும்படி  பிரதமரை கேட்டுக் கொள்கிறேன். இதனை அவரால் செய்ய இயலாவிட்டால் இம்மாதிரியான ஒரு முடிவை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என வலியுறுத்த அவர் யார் என்று அவர் வினவினார்.

அஸாமிற்கு எதிராக எந்த குற்றமும் இல்லை என எஸ்.சி. தீர்மானித்து விட்டதாகவும் அனைத்து தரப்பினரும் இந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இஸ்மாயில் கூறியதாக பெர்னாமா  தெரிவித்திருந்தது.

                                      

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img