கோலாலம்பூர், ஜன. 21-
பள்ளியின் கூடுதல் உணவு திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் என்று சமூக வலைத்தளத்தில் வலம் வந்த வண்ணம் உள்ளது. கூடுதல் உணவு திட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்படும் வெறும் வெள்ளை சோறும் குழம்பும் தான் என்று குறைகூறப்பட்டுள்ளது.
இவ்விவகாரம் கல்வியமைச்சின் கவனத்திற்கு சென்றது. இது சம்பந்தமாக அமைச்சு விசாரணை நடத்தி வருகிறது. எந்தப் பள்ளி இதில் சம்பந்தப்பட்டுள்ளது என்ற விவரத்தை கண்டறியுமாறு கல்வியமைச்சர் ரட்சி ஜிடின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனை ஒரு கடுமையான விவகாரமாக தாம் எடுத்துக் கொள்வதாகவும் இது சம்பந்தமாக தொடர்ச்சியான விசாரணை மேற்கொள்ள வண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மாணவர்களின் நலன் விஷயத்தில் மலேசிய கல்வியமைச்சு எந்தவொரு சமரசமும் செய்து கொள்ளாது என்று அமைச்சர் முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.
தனது பேரப்பிள்ளைக்கு பள்ளியின் கூடுதல் உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட உணவு வகைகள் குறித்து ஒருவர் படத்துடன் முகநூலில் பதிவேற்றம் செய்திருந்தார். கூடுதல் உணவு திட்டத்திற்கான ஒதுக்கீடு குறைவாக இருந்ததால் இத்தகைய நிலையா என்று இவர் கேள்வி எழுப்புகிறார்.
தூக்குத் தண்டனையை ரத்துச்செய்ய வேண்டும் என மலேசியாவில் குரல்
மேலும்டான்ஸ்ரீ அஸாம் பாக்கி மீதான தனது விசாரணையை தொடர்ந்து மலேசிய பங்கு ஆணையம்
மேலும்இணையவழி சந்திப்பு ஏற்பாட்டு முறையை (எஸ்.டி.ஓ.) ரத்து செய்யவிருக்கும்
மேலும்எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து புதிய கூட்டணியை அமைக்க
மேலும்அண்மையில் பி.டி.பி.டி.என். 25ஆம் ஆண்டு அதிர்ஷ்டக் குலுக்கல் Kempen Cabutan Wow 25 Tahun PTPTN என்ற
மேலும்