கோலாலம்பூர், ஜன. 21-
அமைச்சர்களுக்கு எல்லாம் ஆயிரக்கணக்கில் சம்பளம் கொடுக்கிறோம். ஆனால் ஒரு துயரமான காலகட்டம் வந்தபோது இவர்கள் எல்லாம் காணாமல் போய் விட்டார்கள் என்று பார்ட்டி வாரிசான் சபா கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ ஷாபி அப்டால் கடுமையாக சாடினார்.
நேற்று நாடாளுமன்ற மக்களவையில் சிறப்புக் கூட்டம் நடைபெற்ற போது செம்பூர்ணா நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான ஷாபி அப்டால் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் தொடர்பாக கடுமையாக பேசினார். நாட்டில் பருவநிலை மாறிக் கொண்டிருக்கிறது. எப்போது மழை பெய்யும், வெள்ளம் ஏற்படும் என்று கணிக்க இயலாது. வெள்ளப் பேரிடர் என்பது மலேசியாவில் ஒன்றும் புதிது அல்ல. நீண்ட காலமாகவே இங்கு வெள்ளப் பிரச்சினை நீடிக்கிறது.
கடந்தாண்டு பிற்பகுதியில் நாட்டை உலுக்கிய வெள்ளப் பேரிடரில் 50க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று உதவிகளை வழங்குவதில் அமைச்சர்கள் அக்கறை காட்டவில்லை. இவர்களுக்கு எல்லாம் ஆயிரக்கணக்கில் சம்பளம் வழங்குகிறோம். அதனால் எந்த நன்மையும் கிடைக்காமல் போய் விட்டது. வெள்ளத்தின் போது பொதுமக்கள்தான் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்திருக்கின்றனர். இந்த வெள்ளப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் அரசாங்கம் தோல்வி கண்டு விட்டது.
இனிமேலும் ஏராளமானோர் வெள்ளத்தில் பலியாவதை அனுமதிக்க முடியாது. எனவே இதற்கு எப்படி தீர்வு காண்பது என்பது குறித்து அமைச்சர்களுடன் கலந்து பேச வேண்டும். அவர்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்று பிரதமர்தான் உத்தரவிட வேண்டும் என்றும் ஷாபி அப்டால் கேட்டுக் கொண்டார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்