கோலாலம்பூர், ஜன. 21-
நாட்டு மக்கள் தொகையில் 42.7 விழுக்காட்டு பெரியவர்களுக்கு அதாவது ஒரு கோடியே 2 ஆயிரத்து 472 பேருக்கு மூன்றாவது தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் 2 லட்சத்து 58 ஆயிரத்து 337 பெரியவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசி போடப்பட்டதாக சுகாதார அமைச்சின் கோவிட் நவ் அகப்பக்கம் தெரிவித்தது.
கடந்தாண்டு பிப்ரவரி 24ஆம் தேதி தடுப்பூசி போடும் பணி ஆரம்பமானது. அதன்படி நேற்று வரையில் 99.1 விழுக்காட்டு பெரியவர்கள் அல்லது 2 கோடியே 31 லட்சத்து 89 ஆயிரத்து 939 பேர் ஒரு தடவை தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். அதேசமயத்தில் 97.9 விழுக்காட்டு பெரியவர்கள் அதாவது 2 கோடியே 29 லட்சத்து 11 ஆயிரத்து 629 பேர் இரண்டு தடவை தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
இந்நிலையில் 12 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறார்களில் இதுவரை 90.9 விழுக்காட்டினர் அல்லது 28 லட்சத்து 62 ஆயிரத்து 422 பேர் முதல் தடவையும் 88.2 விழுக்காட்டினர் அல்லது 22 லட்சத்து 76 ஆயிரத்து 832 பேர் இரண்டு தடவையும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். நேற்று முன்தினம் ஒரே நாளில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 635 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன. அவர்களில் 1981 பேர் முதல் தடவையும் 4,317 பேர் இரண்டாவது தடவையும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்