img
img

டிங்கில் தமிழ்ப்பள்ளியில் ஆறு அடி உயரத்திற்கு வெள்ளம்! அடுத்த ஆண்டுக்கான புதிய பாடப்புத்தகங்கள் அழிந்தன!
வியாழன் 23 டிசம்பர் 2021 15:02:14

img

டிங்கில், டிச. 24-

கடந்த வாரம் பெய்த அடை மழையின்போது ஏறக்குறைய ஒரு மணி நேரத்தில் இங்குள்ள டிங்கில் தமிழ்ப்பள்ளியில் ஆறு அடி உயரத்திற்கு வெள்ளம் ஏற்பட்டதில் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. 290 மாணவர்களைக்கொண்ட இப்பள்ளியில் ஏற்பட்டிருந்த ஆறு அடி உயரத்திலான வெள்ளத்தினால் கீழ் தளத்தில் உள்ள பன்னிரண்டு வகுப்பறைகளில்  10 வகுப்பறைகள் மற்றும் இங்குள்ள இரண்டு பாலர் வகுப்புகள் யாவும் கடந்த ஐந்து நாட்களாக நீரில் பாதிக்கப்பட்டிருந்தன.

இது குறித்து விளக்கமளித்த டிங்கில் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் புஸ்பா, இப்பள்ளியில் ஏற்பட்டிருந்த வெள்ளத்தின் காரணமாக வகுப்பறைகளில் வைக்கப்பட்டிருந்த பாடம் தொடர்பான புத்தகங்கள் உள்பட தளவாடப் பொருட்கள், மின்சாரப் பொருட்கள் யாவும் சேதமுற்றுள்ளதுடன் அறிவியல் கூடத்திலுள்ள பொருட்களுடன் பல ஆயிரம் வெள்ளி செலவிட்டு சீரமைக்கப்பட்டிருந்த இரு பாலர் பள்ளிகளில் இருந்த எல்லாப் பொருட்களும்  மீண்டும் பயன்படுத்த முடியாத அளவிற்கு முற்றாக  சேதமுற்றுள்ளதாக கூறினார்.

மூன்று வாரகால பள்ளி விடுமுறை முடிந்து அடுத்த மாதம் இரண்டு அல்லது மூன்றாம் தேதியன்று  மாணவர்கள் மீண்டும் பள்ளி திரும்புவதற்கு முன்பாக பள்ளியில் தற்போது ஏற்பட்டுள்ள மோசமான சூழ்நிலையினை மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகள் யாவும் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் முதல் கட்டமாக வெள்ளத்தின் காரணமாக வகுப்பறைகளில் படிந்துள்ள  சேற்றுடன் கூடிய சகதிகளை வாரியெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நடவடிக்கைக்கு இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர், சிப்பாங் நகராண்மைக்கழக உறுப்பினர் சந்திரன் தலைமையிலான  குழுவினர், ம.இ.கா  புத்ரா பிரிவினர்,  சைபர் ஜெயா கார்டன் ரெசிடன்  குழுவினர், பெற்றோர்கள் என பலரும் நேற்று முன்தினம் தொடங்கி உதவி வருவதுடன் மேலும் பலர் எங்களுக்கு தன்னார்வ முறையில் உதவிட முன்வர உள்ளனர் என தெரிவித்தார்

இதனிடையே இப்பள்ளியில் ஏற்பட்டுள்ள சேத நிலவரம் குறித்து சிப்பாங் மாவட்ட கல்வி இலாகாவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதன் அதிகாரிகளும் இங்கு பார்வையிட்டு சென்றுள்ளதாக மேலும் குறிப்பிட்ட புஷ்பா  பள்ளி திறப்பதற்கு முன்பாக அடிப்படை தேவைக்குரிய பொருட்கள் யாவும்  கல்வி இலாகாவின் மூலமாக கிடைக்கும் என தாம் நம்புவதாக கூறினார். 

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img