காஜாங், டிச. 23-
வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட எங்களை காப்பாற்றும்படி உதவி கோரி அலறினோம். ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாருமே கண்டுகொள்ளவில்லை. இந்தோனேசியாவைச் சேர்ந்த சிலர் எங்களை உயிருடன் மீட்டனர் என்று ஒரு பெண்மணி குமுறுகிறார். கடந்த டிசம்பர் 17ஆம் தேதி தொடங்கிய பலத்த மழை அடுத்த /சில தினங்கள் நீடித்ததால் சிலாங்கூர் மாநிலத்தில் கிள்ளான், காஜாங், உலுலங்காட் போன்ற பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. உலுலங்காட் பகுதியில் நானும் என் பிள்ளைகளும் சிக்கிக் கொண்டோம் என்று ஒரு தாயார் கூறினார்.
வெள்ளத்தில் வீடு முற்றாக மூழ்கி விட்டது. நாங்கள் வீட்டின் கூரையில் ஏறி உதவிக்காக குரல் எழுப்பினோம். தீயணைப்புப் படையினர், ராணுவத்தினர், போலீசார் ஆகியோருக்கு கைப்பேசி வாயிலாக தொடர்பு கொண்டோம். ஆனால் அவர்கள் யாருமே உதவிக்கு வரவில்லை. அந்த சமயத்தில் எங்கள் வீடுகளுக்கு அருகில் வசித்துவந்த மூன்று இந்தோனேசியப் பிரஜைகள் உதவிக்கு வந்தனர். ஒரு சிறிய படகு மூலமாக அவர்கள் எங்களை காப்பாற்றி அருகிலுள்ள துயர் துடைப்பு மையத்திற்கு கொண்டு வந்தனர் என்றார் அவர்.
நேற்று உலுலங்காட்டிலுள்ள துயர்துடைப்பு மையத்திற்கு தொழில் முனைவர் மேம்பாட்டு கூட்டுறவு அமைச்சர் டான்ஸ்ரீ நோ ஒமார் நேரில் வருகை புரிந்து நிலவரத்தை கண்டறிந்தார். அப்போதுதான் அவரிடம் அந்தப் பெண் தன் உள்ளக் குமுறலை வெளிப்படுத்தினார். நான் மட்டுமல்ல உலுலங்காட் வட்டாரத்தில் ஆயிரக்கணக்கானோர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டனர். சம்பந்தப்பட்ட அரசாங்க இலாகாக்களைச் சேர்ந்தவர்கள் உடனடியாக உதவிக்கு வராதது வேதனையைத் தருகிறது என்றும் அவர் கூறினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்