தெமர்லோ, டிச. 23-
பல பத்தாண்டுகளில் காணப்படாத படுமோசமான வெள்ளத்தால் மெந்தகாப் நகர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் , 24 மணி நேர கடைகள், கிளினிக்குகள், நிதி நிறுவனங்கள், துரித உணவு விற்பனை மையங்கள் என அனைத்தும் நீரில் மூழ்கிக் கிடக்கின்றன.
கடந்த ஞாயிற்றுக் கிழமையில் இருந்தே நகர மையமே வெள்ளத்தால் முடங்கிக் கிடக்கிறது. நகரை நோக்கிச் செல்லும் அனைத்து பிரதான சாலைகளும் முற்றிலும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. அசம்பாவிதங்கள் ஏதும் நிகழ்வதை தவிர்க்க சில பகுதிகளில் தெனகா நேஷனல் பெர்ஹாட் மின் விநியோகத்தை துண்டித்துள்ளது. குடியிருப்பாளர்கள் மின்சார விநியோகம் இல்லாமல் இருந்து வருகிறார்கள்.
இந்த வெள்ளம் 1971 பேரிடருக்கு ஒப்பாக அமைந்துள்ளது என்று மெந்தகாப் சட்டமன்ற உறுப்பினர் வூசி வான் வருணித்துள்ளார். 1971 இல் ஏற்பட்ட வெள்ளம் போன்று உள்ளது இது. 2014 இல் அல்லது இவ்வாண்டு ஜனவரியில் ஏற்பட்ட வெள்ளத்தை விட இது மோசமாக இருக்கிறது. மெந்தகாப் நகருக்கு படகில் செல்ல முடிகிறது. நீரோட்டம் மோசமாக உள்ளது. கிட்டத்தட்ட நகரின் 90 விழுக்காடு மூழ்கி விட்டது என்றார் அவர்.
சில குடியிருப்பாளர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தங்களுடைய வீடுகளில் இன்னமும் சிக்கியுள்ளனர். பக்கத்திலுள்ள துயர் துடைப்பு மையங்களுக்கு அவர்களை அழைத்து செல்ல எனது சேவை மையம் ஏற்பாடுகளை செய்துள்ளது என்று அவர் கூறினார். பெரும்பாலான பகுதிகளில் ரொட்டி, டின்னிலடைக்கப்பட்ட உணவு, உட்பட உணவுப் பொருட்கள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளது என்று வூ தெரிவித்தார்.
உயர்வான பகுதிகளில் உள்ள மக்களால் நகருக்கு செல்ல இயலவில்லை. அத்தியாவசிய பொருட்களை வாங்க தங்களுடைய வீடுகளுக்கு பக்கத்திலுள்ள மளிகைக் கடைகளையே அவர்கள் முற்றிலும் நம்பியுள்ளனர் என்றார் அவர். இதனிடையே மழை நின்ற பின்னரும் வெள்ள நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதாக குடியிருப்பாளர் பி.கலையரசு கூறினார். நிலைமை மேலும் மோசமடையும் என்ற அச்சத்தில் ஏராளமனோர் தங்களுடைய வீடுகளிலிருந்து வெளியேறி வருகின்றனர் என்றார் அவர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்