கோலாலம்பூர், டிச.23-
வெள்ளம் போன்ற திடீர் பேரிடரில் முற்றாக சேதமடையும் வாகனங்களுக்கு காப்புறுதி நிறுவனங்கள் வழங்கும் பதிலும் தீர்வும் என்ன என்ற கேள்விகள் பரவலாக எழுந்திருக்கின்றன. ஒவ்வொரு முறையும் வெள்ளம் பரவும்போது சாலைகளில் பரவும் வெள்ளத்தால் வாகனங்கள் முற்றாக மூழ்கிப் போவது ஒரு தொடர்கதையாக இருக்கிறது.
உயிர் தப்பித்தால் போதும் என்ற அச்சத்தில் வாகனங்களை கைவிட்டு அதன் உரிமையாளர்கள் வெளியேறி விடுவதுண்டு. கிள்ளான் பள்ளத்தாக்கு உட்பட அண்மையில் நாடு தழுவிய நிலையில் பரவிய வெள்ளத்தின் போதும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கி பெரும் சேதமடைந்துள்ளன.
காப்புறுதி உண்டா இல்லையா?
வாகனங்களுக்காக எடுக்கப்படும் அதன் காப்புறுதி உத்தரவாதத்தில் இதுபோன்ற பேரிடர்களுக்கு இழப்பீடு இல்லை என்ற குற்றச்சாட்டு உண்மையா என்று பல முகவர்களை அணுகியபோது அது தவறு என்று தெரியவந்தது. ஒரு வாகனத்திற்கான அடிப்படை காப்புறுதியோடு ஓர் இணைப்பு காப்புறுதியாக இதுபோன்ற பேரிடர்களுக்கும் உரிய நிவாரணங்கள் வழங்கப்படுகின்றன.
ஆனால் வாகன உரிமையாளர்கள் பலர் அலட்சியத்தாலும் கூடுதல் தொகை வருகிறதே என்ற தயக்கத்தாலும் அந்த இணை காப்புறுதியை பெறுவதில்லை என்று அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். இந்தகாப்புறுதியை பெறாத பலர் வெறுமனே காப்புறுதி நிறுவனங்களை குற்றஞ்சாட்டுவதுண்டு.
எடுக்காமல் போனால் எப்படி கிடைக்கும்?
வெள்ளப் பேரிடரில் மூழ்கிய வாகனங்களுக்கு இந்த காப்புறுதியை எடுக்காமல் போனால் அதற்கான இழப்பீட்டை எந்த காப்புறுதி நிறுவனமும் வழங்காது. ஒரு விபத்து, இழுவை, பழுது பார்ப்பு, தீவிபத்து ஆகிய அடிப்படை அம்சங்களுக்கு பிரிமியத் தொகை கோரப்படுகிறது. இதையடுத்து மரம் விழுதல், புயலினால் சேதமடைதல், நிலச்சரிவில் சிக்குதல், வெள்ளத்தில் மூழ்குதல் போன்ற இயற்கைப் பேரிடர் பாதிப்புகளுக்கு ஸ்பெஷல் பெரில் என்ற ஓர் இணைப்பு காப்புறுதி உண்டு.
ஒவ்வொரு வாகனத்தின் காப்புறுதி மதிப்பீட்டிற்கு ஏற்ப 0.25 அளவில் கணக்கிடப்பட்டு இந்த தொகை வாங்கப்படும். உதாரணமாக 1 லட்சத்து 20,000 வெள்ளி மதிப்புள்ள காருக்கு 230 வெள்ளி பெறப்படும். அந்தந்த வாகனங்களின் தரத்திற்கேற்ப இது வேறுபடும். ஆனால் பலர் அலட்சியத்தால் இதை பெறுவதில்லை. அல்லது பிரிமியம் அதிகமாகிறதே என்று அதை தவிர்த்து விடுகிறார்கள்.
எனவே இதுபோன்ற பேரிடர் காலங்களில் அவர்களின் வாகனங்களுக்கு எந்த இழப்பீடும் கிடைப்பதில்லை என்று ஒரு முகவர் நண்பனிடம் விவரித்தார். இன்னும் சொல்லப்போனால் இதுபோன்ற ஆபத்து, அவசர வேளைகளில் சில முதன்மை காப்புறுதி நிறுவனங்கள் போலீஸ் புகார்களை கூட கேட்பதில்லை.அவற்றின் பாதிப்பை பரிசீலித்து இழப்பீட்டை வழங்குகின்றன என்றார் அவர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்