கோலாலம்பூர், டிச. 23-
வெள்ளப் பேரிடரிலிருந்து மக்களை காக்கும் நடவடிக்கையில் சுணக்கமும் தாமதமும் ஏற்படுவதற்கு இந்த விவகாரத்தில் அரசியல் ஊடுருவல் காரணமா என்ற கேள்விகள் பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பிலும் பார்வையாளர்கள் மத்தியிலும் எழுந்தவண்ணம் இருக்கின்றன. அரசு நிறுவனங்களுக்கு இடையே ஓர் ஒருங்கிணைப்புத் தன்மை இல்லாமல் போனதும் மத்திய மாநில அரசுகளுக்கு இடையில் நிலவுகின்ற ஓர் இடைவெளியும் கட்சி அரசியலும் இதற்கு காரணமாக அமைந்திருக்கிறதா என்ற வினாக்கள் பலரின் மத்தியில் எழுந்து வருகின்றன.
வெள்ள மீட்பில் பலவீனம்
அரசாங்கத்தின் செயல்பாடுகள் முற்றாக தோல்வியடைந்திருக்கின்றன என்று முன்னாள் அமைச்சர் டான்ஸ்ரீ ரபிடா அஸிஸ் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியிருக்கிறார். ஒரு பேரிடர் வரும்போது துரிதகதியில் களத்தில் இறங்காத அரசாங்கத்தின் செயல்பாடு அதன் பலவீனத்தின் உச்சத்தை காட்டுகிறது என்று அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
உப்புச்சப்பு இல்லாத அரசாங்க பிரச்சார நடவடிக்கைகளுக்கு காட்டும் முக்கியத்துவம் தண்ணீரில் தவழ்ந்து கண்ணீரில் மூழ்கியிருக்கும் மக்களை காப்பாற்றுவதில் காட்டப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். வெள்ளம் அதிகமாக பாதித்துள்ள ஸ்ரீமூடாவை உள்ளடக்கும் சிலாங்கூர் மாநிலம் பக்காத்தான் ஆட்சியில் இருக்கிறது. மாநில முதல்வராக அமிருடின் ஷாரி விளங்குகிறார். மாநில அம்னோ தலைவராக நோ ஒமார் விளங்குகிறார்.
மாநில பேரிடர் நிவாரண இலாகா பொறுப்பு நோ ஒமாரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. பல விஷயங்கள் அவரது உத்தரவின் பேரில்தான் செயல்பட வேண்டும் என்னும் நிலையில் இருக்கிறது. பிரதமர் துறை, போக்குவரத்து அமைச்சு, தற்காப்பு அமைச்சு, தீயணைப்பு இலாகா, பேரிடர் மீட்பு இலாகா என பல்வேறு பிரிவுகள் இருந்தும் அவற்றுக்கு இடையில் ஓர் ஒருங்கிணைப்பு இல்லாமல் போனதால் எல்லாத் துயரமும் மக்கள் தலையில் விழுந்தது.
நட்மாவின் புதிய வியாக்கியானம்
நட்மா எனப்படும் தேசிய பேரிடர் நிர்வாக நிறுவனம் வெள்ள நிவாரணங்கள் தங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. மாறாக வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பு இழப்புகளுக்கு மட்டுமே தாங்கள் பொறுப்பு என்றுகூறியது மக்களை வெறுப்பின் உச்சத்திற்கே கொண்டு சென்றது.
அதற்கு பொறுப்பான அமைச்சரையும் அதன் அதிகாரிகளையும் உடனடியாக பதவி நீக்கம் செய்யுங்கள் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. மக்களவையில் இது தொடர்பாக ஓர் அவசரத் தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சி எம்பிக்களின் கோரிக்கையை சபாநாயகர் தமது ரத்து அதிகாரத்தால் முழுவதுமாக நிராகரிக்கிறார்.
வெள்ளம் பரவி பசி, பட்டினியாலும் தூக்கமின்மையாலும் பிள்ளைகளையும் வயதானவர்களையும் நோயில் நலிந்தவர்களையும் வைத்துக்கொண்டு மக்கள் படாதபாடு பட்டுக் கொண்டிருந்த வேளையில் மீட்புப் பணிகள் மிக மிக தாமதமாக நடந்தது, மக்களின் துன்பத்தை மேலும் மேலும் அதிகரித்தது. பிரதமர் மட்டும் பாதிக்கப்பட்ட மக்களை சென்றுகாண ஒட்டுமொத்த அமைச்சரவை என்ன செய்து கொண்டிருக்கிறது என்ற கேள்வியும் எழுகிறது. பேரிடர் என்பது இயற்கையின் ஒரு சீற்றமாகும். மழையும் வெள்ளமும் புயலும் எப்போது வரும், எப்படி வரும் என்று யாருக்கும் தெரியாது.
அரசியல் ஊடுருவியுள்ளதா?
ஆனால் ஓர் ஆபத்து அவசர தயார்நிலைத் திட்டம் இங்கே அவசியம். ஆனால் அந்த ஆபத்தை உணர்ந்து துரித கதியில் இயங்க முடியாத படி மத்திய, மாநில, மாவட்ட மற்றும் வட்டார நிலையில் ஊடுருவிய அரசியல் ஒரு காரணமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
மத்திய அரசாங்கத்தில் அம்னோவும் பெர்சத்தும் உள்ளடங்கிய பெரிக்காத்தானும் இருந்தாலும் பாரிசான் , பெரிக்காத்தான் மோதல் பல இடங்களில் நடந்துகொண்டிருக்கிறது. அதன் எதிரொலியால் இது நடக்கிறதா என்ற கேள்விகள் எழுந்தாலும் மாநில மந்திரிபுசார்என்ற முறையில் அதை தாம் திட்டவட்டமாக மறுப்பதாக சிலாங்கூர் மந்திரிபுசார் கூறியிருக்கிறார்.
இந்த பேரிடருக்கு முன்பே பிரதமரையும் தற்காப்பு அமைச்சரையும் தாம் அழைத்து பேசியதாகவும் தேவையான உதவிகளை செய்யுமாறு கோரியிருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்