வெள்ளத்தில் மீண்டு கண்ணீரில் தத்தளிக்கும் மக்களுக்கு உதவிகள்
நிற, மத, சமய போதமின்றி
ஒரு தாய் மக்களாக மலேசியர்கள்
கோலாலம்பூர், டிச. 24-
ஒரு துயரம் என்று வந்து விட்டால் அதில் பங்கு கொள்ள அனைத்து மலேசியர்களும் தயங்குவது கிடையாது. இப்போது நாட்டை புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கின்ற வெள்ளத்திலிருந்து மக்களை மீட்பதற்காக அவர்கள் ஒன்றிணைந்து பாடுபடுவது மிகவும் பாராட்டத்தக்கது.
டிசம்பர் 17ஆம் தேதி ஆரம்பமான அடைமழை மூன்றுநாட்களுக்கு நீடித்தது. சிலாங்கூர், பகாங் போன்ற மாநிலங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டன. சிலாங்கூரிலுள்ள ஷா ஆலம் அருகே தாமான் ஸ்ரீ மூடா குடியிருப்புப் பகுதி முற்றாக வெள்ளத்தில் மூழ்கியது. இங்கு மட்டும் 10க்கும் அதிகமானோர் வெள்ளத்தில் பலியாகினர். இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பல நாட்களுக்கும் மேலாக உணவின்றி வாடுகின்றனர். சுத்தமான குடிநீர் கிடைக்காமல் தவிக்கின்றனர். அவர்களுக்கு உதவுவதற்காக பல தொண்டூழிய அமைப்புகள் உணவுப் பொருட்களை விநியோகித்து வருகின்றனர்.
பெட்டாலிங் ஜெயாவிலுள்ள ஒரு கோயில் நிர்வாகத்தினர் உணவுப் பொருட்களை வழங்கிக் கொண்டிருக்கின்றனர். சைவ உணவை சமைத்து பொட்டலமாகக் கட்டி அனுப்பிக் கொண்டிருக்கின்றனர். இனம், மதம், மொழி, நிறம் என பாகுபாடு காட்டாமல் பல தரப்பைச் சேர்ந்த மக்களெல்லாம் இந்தக் கோவிலுக்கு வந்து தங்கள் ஆதரவை தெரிவித்துக் கொண்டு வருகின்றனர்.
இரவு பகலாக உணவை சமைத்துக் கொண்டிருக்கின்றனர். மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கின்ற தாமான் ஸ்ரீ மூடா வட்டார மக்களுக்கு சமைத்த உணவை அனுப்பி வருவதில் அவர்கள் மிகுந்த அக்கறையை காட்டி வருகின்றனர். இந்நிலையில் இதே ஸ்ரீ மூடா வட்டாரத்தைச் சேர்ந்த டி.புகழேந்தி என்பவரும் தொண்டூழியப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இவர் கணினித் துறையில் அதிக அனுபவம் கொண்டவர். வெள்ளம் காரணமாக பல்கலைக்கழக மாணவர்கள், நிறுவன அதிகாரிகள், பல்கலைக்கழகங்கள், மருந்தகங்கள், கிளினிக்குகள் போன்றவை பாதிக்கப்பட்டிருக்கின்றன.
அங்குள்ள கணினிகள், மடிக்கணினிகள் போன்றவை எல்லாம் வெள்ளத்தில் பழுதாகி விட்டன. அவற்றை இலவசமாக பழுது பார்க்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் புகழேந்தி. இந்த வட்டாரத்தில் நான் 25 ஆண்டுகளாக கணினிச் சேவை நடத்திக் கொண்டிருக்கிறேன். ஏராளமானோர் எனக்கு வாடிக்கையாளர்கள். அவர்களில் பலர் தொலைபேசி வாயிலாக அழைத்து உதவி கேட்கின்றனர். நானும் ஒவ்வொரு நாளும் அவர்களின் இல்லங்களுக்கும் அலுவலகங்களுக்கும் செல்கிறேன். வெள்ளத்தால் பழுதடைந்து விட்ட கணினிகளை பழுது பார்த்துக் கொடுக்கிறேன். இதற்காக நான் எந்தக் கட்டணத்தையும் வசூலிப்பது கிடையாது என்றார் புகழேந்தி.
இதனிடையே ஸ்ரீ மூடா மற்றும் பந்திங் ஆகிய பகுதிகளில் வாகன பழுதுபார்ப்பு பட்டறையை வைத்திருக்கிறார் மஸ்தினா என்பவர். வெள்ளத்தினால் சேதமடைந்த வாகனங்களை இலவசமாக கழுவி சுத்தம் செய்யும் பணிகளை அவர் மேற்கொண்டு வருகிறார். நாளொன்றுக்கு 20க்கும் அதிகமான வாகனங்கள் எங்கள் பட்டறைக்கு வருகின்றன. சேறும் சகதியும் கொண்டிருக்கின்ற அந்த வாகனங்களை நாங்கள் கழுவித் தருகிறோம் என்றும் அவர் கூறினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்