கோலாலம்பூர், டிச. 22-
தொடர் மழையின் காரணமாக மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட ஷா ஆலம், தாமான் ஸ்ரீமூடா பகுதியில் மருத்துவ உதவிகள் ஏதும் இல்லாமல் மக்கள் தத்தளித்தனர். வெள்ளம் ஏற்பட்ட முதல் நாள் அங்கு பலரும் தாங்களாகவே வீடுகளிலிருந்து வெளியேறிய நிலையில் மருத்துவ உதவிகளும் அவர்களுக்குத் தேவைப்பட்டது. எனினும், உடனடியாக மருத்துவ உதவிக்கான ஏற்பாடுகள் எதுவும் அங்கு செய்யப்படவில்லை.
சம்பவ இடத்திற்குச் சென்ற மருத்துவர்கள் குழு ஒன்று தங்கள் சொந்த முயற்சியின் பேரில் ஸ்ரீமூடா வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மருத்துவ முகாமை ஏற்படுத்தி தங்களால் இயன்ற உதவிகளைச் செய்தனர். வெள்ளத்தில் சிக்கி, மீண்டு வந்த பலரும் வெட்டுக் காயங்களுக்காக தங்களிடம் சிகிச்சை பெற்றனர் என மருத்துவர்கள் தீபா, விஸ்வன், கவின், டெரன் சிங்கம் ஆகியோர் மலேசிய நண்பனிடம் தெரிவித்தனர்.
மின்சார விநியோகம் கூட இல்லாத நிலையில் கார் விளக்குகளின் உதவியுடன் தாங்கள் பலருக்கு சிகிச்சை அளிகக நேர்ந்த அவலத்தையும் அவர்கள் குறிப்பிட்டனர். அம்புலன்ஸ் இல்லாத நிலையில் கும்மிருட்டில் நிறைமாத கர்ப்பிணி ஒருவரை தாங்கள் தங்களின் சொந்த வாகனத்திலேயே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும் அவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
இதுபோன்ற இயற்கை பேரிடர் சமயத்தில் பாதிக்கப்பட்ட இடத்தில் முதலில் மருத்துவ முகாமை அமைப்பது மிகவும் முக்கியம் என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள தவறியுள்ளது என்று அவர்கள் மேலும் கூறினர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்