img
img

மலேசிய குடும்பத்திற்காக (Keluarga Malaysia) இதோ 5ஜி (5G) வந்துள்ளது
புதன் 15 டிசம்பர் 2021 13:35:31

img

மலேசிய குடும்பத்திற்காக (Keluarga Malaysia) இதோ 5ஜி (5G) வந்துள்ளது

டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி பின் யாக்கோப், மலேசிய பிரதமர்

மலேசியா ஒரு உயர் வருவாய் மற்றும் உயர் தொழில்நுட்ப நாடாக உருவாவதற்கு, நாம் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை ஏற்றுக்கொண்டு, நமக்கான தொழில்நுட்பத்தை உருவாக்கவும் மேம்படுத்தவும் பாடுபட வேண்டும்.

டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ பங்லிமா ஹாஜி அனுவார் பின் மூசா, தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர்

முதல் கட்டச் சலுகை புத்ராஜெயா, சைபர்ஜெயா மற்றும் கோலாலம்பூரின் சில பகுதிகளில் உள்ள அனைத்து 5ஜி நேரடி தளங்களுக்கும் பொருந்தும். அடுத்த ஆண்டு இரண்டாம் கட்டமாக பினாங்கு, ஜோகூர் பாரு, சபா மற்றும் சரவாக் உள்ளிட்ட பிற மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் கவனம் செலுத்தப்படும்.

செனட்டர் தெங்கு டத்தோஸ்ரீ உத்தாமா ஜஃப்ருல் பின் தெங்கு அப்துல் அஜீஸ், மலேசிய நிதி அமைச்சர்

5ஜி சேவைக்கான கட்டணங்கள் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு (டெல்கோஸ்) ஒவ்வோர் ஜிகாபைட் அளவுக்கும் 20 காசுகளுக்கும் குறைவான கட்டணம் இருக்கும். இதனை ஒப்பிடுகையில், இது ஒரு ஜிபிக்கு 45 முதல் 55 சென்கள் என்ற விகிதத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்களால் தயாரிக்கப்படும் 4ஜி சேவையின் தற்போதைய அதிகரிக்கும் செலவை விட மிகவும் மலிவானது.

உங்கள் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்கும் 5ஜி திட்டங்கள் குறித்து இன்றே தெரிந்து கொள்ளுங்கள்!

 

5ஜியின் நன்மைகள் என்ன?

துரிதமான இணைப்பு - வொயர்லஸ் இணைப்புகளின் மூலம், நிகழ்நேரத்தில் 10 மடங்கு துரிதமான பரிமாற்ற வேகத்தை அனுபவியுங்கள்

தாமதம் குறைக்கப்படுகிறது - கண் இமைக்கும் நேரத்தை விட வேகமான இணைப்பைத் தரும் ஆற்றல் உள்ளது. மிகப்பெரிய தொழில்நுட்ப புத்தாக்கங்களுக்கு தயாராகிவிட்ட தடையற்ற இணைப்பு இதுதான்.

அதிகத் திறன் - பயன்பாட்டின் அதிகரிப்பால் ஏற்படும் சிக்கல் இனியும் ஒரு பிரச்சினையாக இருக்காது. லட்சக்கணக்கான கருவிகளுக்கு இதன் பயன்பாடு கிடைக்கும் என்பதால் இதன் நன்மைகள் கணக்கில் அடங்கா.

 

தொலைத்தொடர்புத் துறையில் புதிய பரிணாமம்

* 2024 க்குள் அதிகமான மக்கள் தொகை உள்ள 80 விழுக்காட்டு இடங்களுக்கு இச்சேவை சென்றடையும்.  

* 2021 டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் புத்ராஜெயா, சைபர்ஜெயா மற்றும் கோலாலம்பூரின் சில பகுதிகள் முழுவதும் தயாராக இருக்கும் அனைத்து 5ஜி நேரலை தளங்களிலும் இச்சேவையினை பெறலாம்.

* 2022 மார்ச் 31 ஆம் தேதி வரையில் இச்சலுகை அமலில் இருக்கும்.

* 5ஜி பயன்பாட்டுக்குத் தேவையான சாதனங்களைப் பெற்றுள்ள இதன் இறுதிப் பயனர்கள் அல்லது வாடிக்கையாளர்கள் 100 Mbps  மற்றும் அதற்கும் அதிகமான வேகத்தை அனுபவிக்கலாம்.

 

5ஜி நன்மைகளின் அறிமுகம் மற்றும் அது ஏன் உடனடியாக அவசியமானது

எதிர்காலத்துடன் மக்களை இணைப்பது

இணைப்பு என்பது எதிர்கால உற்பத்தித் திறனின் மையமாகும், மேலும், டிஜிட்டல் மயமாகும் உலகளாவிய நிலையை நோக்கி அதன் நகர்வின் ஒரு பகுதியாக மாறுவதற்கு மலேசியர்கள் தயாராக உள்ளனர். இன்று, நாம் 5ஜி புரட்சியின் உச்சத்தில் இருக்கிறோம், நாடு முழுவதும் துரித வேகத்திலான இணைய இணைப்பு கிடைப்பதுடன் இதுவே டிஜிட்டல் முறையில் இயங்கும் ஆற்றல் மற்றும் போட்டித்திறனின் எதிர்காலத்தை வழிநடத்தும்.

4ஜி அளவை விட 100 மடங்கு வேகத்தில் செயல்படக்கூடியது. அதிகத் திறன் வாய்ந்தது. தாமதம் என்பது கிட்டதட்ட பூஜ்யம்தான். டிஜிட்டல் பொருளாதாரத்தில் புதுமைகளின் அறிமுகம் மற்றும் சமூக உள்ளடக்கத்திற்கான பல்வேறு தீர்வுகளை 5ஜி புரட்சி வழங்குகிறது.

வரம்பற்ற சாத்தியக் கூறுகளை உள்ளடக்கி, நாடு தழுவிய நிலையில் தடையற்ற இணைப்பை வழங்க முடியும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். Augmented Reality (AR); செயற்கை நுண்ணறிவு -Artificial Intelligence (AI); மிகப்பெரிய அளவில்கான இயந்திர வகை தொடர்பு Massive Machine Type Communication (mMTC); மற்றும் தீவிர நம்பகமான தாமதத்தைக் குறைக்கும் தொடர்பு -  Ultra Reliable Low Latency Communication (URLLC) ஆகியன இவற்றுள் அடங்கும். புதிதாக மேம்படுத்தப்பட்ட தொழில் நடைமுறைகளின் செயல்பாட்டை இது உயர்த்தவல்லது.

ஆகவே, உலகளாவிய நிலையில் ஒவ்வொரு நாட்டிலும் போட்டா போட்டித்தன்மையும் ஆற்றலும் துரிதமாக வரையறுக்கப்படும் நிலையில் காலம் தாழ்த்தாமல் 5ஜி தொழில்நுட்பம் மற்றும் சேவைகளை மேம்படுத்தி,  பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான அவசரத் தேவை மலேசியாவுக்கு உள்ளது.

 

வாய்ப்புகளின் எதிர்காலம்: உலகளாவிய போட்டியாளராக மலேசியாவை மேம்படுத்துதல்

எவ்வளவு விரைவில் நாடு முழுவதும் 5ஜி பயன்பாட்டை மலேசியா அடைய முடிகிறதோ அவ்வளவு விரைவில் கணிசமான பொருளாதார ஆதாயங்களை அது பெற முடியும். அடுத்த 10 ஆண்டுகளில் வெ.650 பில்லியன் மதிப்புள்ள ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP)   அடைய முடியும் என 5ஜி-யின் சாத்தியமான பொருளாதாரத் தாக்கம் மீதிலான அண்மையை EY ஆய்வு காட்டுகிறது. 2031 இல் மட்டும் இதன் அளவு வெ.150 பில்லியனாக இருக்கும்.  2030 ஆம் ஆண்டுக்குள்  சுமார் 750,000 புதிய உயர் திறன் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது, அண்டை நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது நமக்கு சாதகமாக அமையும்.

இதனிடையே, சாத்தியமான பயனபாடுகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கான நன்மைகள் ஆகியன  தினசரி வாழ்க்கையின் ஒவ்வோர் அம்சத்தையும் உள்ளடக்கியிருக்கும். வாழ்க்கைத் தர குறியீடுகளை மேம்படுத்துவதற்கான தரவுகளின்  வழி: மேம்படுத்தப்பட்ட இணைய தொடர்பு, விரைவான தொடர்பு நேரம்,  உகந்த பயன்பாட்டு நுகர்வு, கழிவுகள் மறுசுழற்சி, அவசரகாலத்தில் விரைவான பதில்  அவசரகால பதில் இன்னும் பல நன்மைகள் கிடைக்கும்.

அதிவேக AR அம்சங்களுடன் சில்லறை சூழ்நிலைகள் கூட உகந்ததாக அமையும் என்பதால்  ஷாப்பிங் கூட உங்களுக்கு  வித்தியாசமான அனுபவத்தைத் தரலாம். உண்மையாகவே, 5ஜி இணைப்பு நிறைய சாத்தியங்கள் அளிக்கின்றது.

 

5ஜி இல்லாத ஒவ்வொரு நொடியும் ஒரு வாய்ப்பை இழந்ததற்கு சமம்

4ஜி -  நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளின் ஒரு கண்ணோட்டம்

நீங்கள் எதிர்பார்த்த வேகத்தை விட கோப்புகளின் பதிவிறக்கம் மெதுவாக இருப்பதால் எத்தனை தடவை நீங்கள் விரக்தி அடைந்திருக்கிறீர்கள்? இது போன்ற நேரங்களில் நாம் செலுத்தும் கட்டணத்திற்கு ஏற்ற  வேகமும் ஆற்றலும் இல்லாததால் நமக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளால்   ஏமாற்றம் அடைகிறோம்.

உண்மையாக நமக்கு என்ன கிடைக்கிறது என்று நினைக்கும் சூழ்நிலை வரும்போது இன்னும் அதிகமாக வேண்டும் என விரும்புகிறோம். நிலைமையை இன்னும் மோசமாக்கும் வகையில்,  சீரற்ற தரவு வேகம், மற்றும் பயன்பாடுகளில் இடையூறுகள் ஏற்படும்போது இப்போது, இங்குள்ள நமது சூழ்நிலைகளை மட்டும் இது பாதிக்காது, ஆனால்,  நமது வாழ்வாதாரமும் வணிகங்களும் பாதிக்கக் கூடிய அளவிற்கு இது அதிகமாகும்.

மலேசியாவின் தற்போதைய 4ஜி பயன்பாட்டில் உள்ள சவால்களையும் கூறுகளையும் பார்க்கும்போது, இந்தப் பிரச்சினை பரவலாக உள்ளது என்பது தெரிய வரும். கடந்த ஆண்டு மட்டும், மலேசியர்களின் கைப்பேசி தரவுகள் பயன்பாடு 2020 முதல் 2021 வரைக்குமான ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 35.2 விழுக்காடு என ஆசியானில்  மிக உயர்ந்த மட்டத்திற்கு அதிகரித்துள்ளது.

பிரச்சினை 1: குறையும் நெட்வொர்க் தரம்

இன்னும், கடந்த ஆண்டு பயன்பாடு உச்சத்தை எட்டியபோதும், கைப்பேசி சேவைகள் மீதான புகார்கள் முந்தைய ஆண்டை விட 433% அதிகரித்தன. இப்புகார்களில் 90% நெட்வர்க் தரம் தொடர்பானவை.

பிரச்சினை 2: தரத்துடன் ஒப்பிடும்போது அதிக விலை

இருந்தபோதிலும், அண்டை நாடுகளுடன் ஒப்பிடும்போது தங்கள் கைப்பேசி சேவைகளுக்காக மலேசியர்கள் உயரிய சராசரி பயனீட்டாளர் விலைகளைக் கொடுக்கின்றனர். இது தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.5% அல்லது சராசரியாக மாதத்திற்கு 50 வெள்ளி. 

பிரச்சினை 3: பிராந்திய மற்றும் உலகளாவிய அளவில் மலேசியா  பின்தங்கியுள்ளது

இதன் விளைவாக, 4ஜி கைப்பேசி தரவு வேகம் சம்பந்தப்பட்டதில் இக்கேந்திரத்தில் மலேசியாவின் 4ஜி-யின் உண்மை நிலை அதன் தரம் குறைந்ததால் பாதிக்கப்பட்டுள்ளது. உலகளவில் நாம் இன்னும் பின்தங்கியிருக்கிறோம். தரமான கைப்பேசி இணைப்பு ரீதியில் 81 ஆவது இடத்திலும், ஆசியான் நாடுகளின் வரிசையில் 9 ஆவது இடத்திலும் இருக்கிறோம் என உலக கைப்பேசி அனுபவம் என்பது மீதிலான அண்மைய ஆய்வு காட்டுகிறது.

பிரச்சினை 4: நகர்ப்புற - கிராமப்புற டிஜிட்டல் பிரிவினை

மேலும், தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கைகளில், குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட குடியிருப்புகள் மற்றும் கிராமப்புற பகுதிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இது ஒரு மிகப்பெரிய டிஜிட்டல் பிரிவினையை ஏற்படுத்தியுள்ளது. நகர்ப்புறங்களுக்கு வெளியே 44 விழுக்காட்டினர் வரை மட்டுமே தங்கள் 4ஜி இணைப்பை பெற முடிகிறது. ஆனால், நகர்ப்புறங்களில் 83.7 விழுக்காட்டினருக்கு இந்த வசதி உள்ளது. அதனால்தான் அரசாங்கம் முன்னேற்றம் மற்றும் செழிப்பை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது

 

 

 

 

மலேசியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தை உயர்த்த அரசாங்கம்   உறுதியளிக்கிறது

அதிக கைப்பேசி சேவை செலவு, உலக - வட்டார அளவிலான கைப்பேசி இணைப்பு தரவரிசை ஏமாற்றமளிக்கிறது. குறைந்த நெட்வோர்க் தரம், புதிய மலேசிய டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான பார்வையை முன்னோக்கிச் செல்வதற்கான பாதையை செயல்படுத்த அரசாங்கத்திற்கு உந்து சக்தியாக இருந்தது. எனவே, நாடு முழுவதும் 5ஜி வரிசைப்படுத்தல் மற்றும் தத்தெடுப்பை விரைவுபடுத்துவதற்காக ஒரு நிறுவனத்தை நிறுவ அரசாங்கம் முடிவு செய்துள்ளது. டிஜிட்டல் பொருளாதாரத்தில் வட்டாரத் தலைவராக மலேசியாவின் மாற்றத்தை ஆதரிக்கும் நோக்கத்துடன் கூடுதல் சமூகத்தை மேம்படுத்துதல்.

 

மலேசியாவின் 5ஜி இயக்கியாக டிஎன்பிஐ அரசாங்கத்திற்கு சொந்தமாக்குவது

மலேசியாவிற்கு 5ஜி அமல்படுத்த சிறப்பு  பரிந்துரை வாகனமாக கடந்த மார்ச் முதலாம் தேதி நிதி அமைச்சு DNB தோற்றுவித்தது.  டிஎன்பி முற்றிலும் நிதி அமைச்சுக்கு (இணைக்கப்பட்டது) சொந்தமானது. நாட்டில் 5ஜி சேவையை வழங்கவும் இந்த சட்டத்தின் கீழ் மற்ற உரிமங்களை உட்படுத்தவும் 1998ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடக சட்டத்தின் கீழ் அதற்கான லைசென்ஸ் வழங்கப்பட்டது. 10 ஆண்டுகளில் டிஎன்பி 16.5 பில்லியன் வெள்ளி மதிப்பிலான சேவையை வழங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இது டிஎன்பி வர்த்தக அடிப்படையையொட்டி உள்நாட்டு நிதி நிறுவனங்களால் முதலீடு செய்யப்படும்.

மேற்கோள்: டாக்டர் ஃபார்டுலுல்லா சுஹாய்மி அப்துல் மாலிக், தலைவர், மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையம் 

 

மலேசியாவின் போட்டித்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு 5ஜி பொருளாதார தேவைக்கு மிகவும் முக்கியமானது.

மலேசியாவின் உள்கட்டமைப்பு மற்றும் நெட்வோர்க்கைப் பயன்படுத்துவதை துரிதப்படுத்துங்கள்

பொருளாதார நடவடிக்கைகளைத் தூண்டுவதற்கு 5ஜி திறனை உணருங்கள்

டிஜிட்டல் தெய்வீகத்தை இணைத்து உள்கட்டமைப்பின் தற்போதைய நிலையை மேம்படுத்தவும்

உள்கட்டமைப்பின் நகல்களைத் தவிர்த்து பற்றாக்குறை வளங்களின் பயன்பாட்டை மேம்படுத்தவும்

தகவல் தொடர்புத் துறையில் சேவை சார்ந்த போட்டியை ஊக்குவிக்கவும்

 

ஒற்றை மொத்த நெட்வோர்க் மூலம் மக்களுக்கு 5ஜி சேவைகளின் விலை குறையும்

வரும் 2024ஆம் ஆண்டில் நாட்டின் 80 விழுக்காடு பகுதிகளில் 5ஜி சேவையை அமல்படுத்த, 5ஜி தொழில்நுட்பத்தைக் கொண்டு வர சாத்தியாமான, விரிவான முதலீடு தேவை. இதன் காரணமாகவே நல்ல நோக்கத்திற்காக ஒற்றை மொத்த நெட்வோர்க் வழங்கும் முறை தேர்வு செய்யப்பட்டது. இந்த ஒற்றை மொத்த நெட்வோர்க்கின் முதலீடாக விளங்கும் டிஜிட்டல் நேஷனல் பெர்ஹாட் (DNB) புறநகர் பகுதிகளிலும் அதிகமான நெட்வோர்க் சேவையை வழங்க வழிவகுக்கும். இது தொலைத் தொடர்பு நிறுவனங்களின் 4ஜி வெளியீட்டின் தேவை மற்றும் லாபம் சார்ந்த விவகாரத்தில் இது மாறுபட்டது. டிஎன்பி தற்போதுள்ள உள்கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலம் தனது செயல்திறனில் கவனம் செலுத்துகிறது.

DNB போன்ற ஒற்றை நடுநிலை நிறுவனத்தின் 5ஜி ஸ்பெக்ட்ரம் ஒருங்கிணைக்கப்படுவது அதிக சிறப்பு திறனை அனுமதிக்கும் (ஸ்பெக்ட்ரம் என்பது பல தரப்பினருக்கிடையே ஓர் அற்ப வளமாக பிரிக்கப்படுவதற்கு எதிரானது) இதன் மூலம் குறைந்த விலையில்

 

5ஜி மொத்த சேவைகளை வழங்கும் திறனை டிஎன்பி அனுமதிக்கிறது.

மேற்கோள்: இம்ரி மொக்தார், குரூப் தலைமை செயல்முறை அதிகாரி, டெலிகோம் மலேசியா பெர்ஹாட்

நாட்டு மக்களுக்கு 5ஜி சேவையை வழங்குவதில் அரசாங்கத்தின் விருப்பத்தை நிறைவேற்ற நாங்கள் தொடர்ந்து முழு ஆதரவு வழங்குவோம். நாட்டுக்கு 5ஜி சேவையை வழங்க எங்களின் ஆதரவை நிலைநிறுத்தியுள்ளோம் என நாங்கள் நம்புகிறோம்.

 

5ஜி விவேக எதிர்காலத்தை அடைய டிஜிட்டல் சிறப்பு நெடுஞ்சாலை

நாட்டிலுள்ள அனைத்து இணையப் பயனீட்டாளர்களும் எந்தவித இடையூறும் இன்றி பயணத்தின்போது சுதந்திரமான முறையில் தரவுகளைப் பயன்படுத்த இந்த அகன்ற நெடுஞ்சாலை விளங்கும் என கற்பனை செய்து கொள்ளுங்கள். இது பல்முனை முக்கிய நெட்வோர்க் நடத்துநராக செயல்படும் (MOCN). தடையற்ற ஒற்றை டிஜிட்டல் நெடுஞ்சாலையை அமைப்பது, இந்த பாதுகாப்பான நெட்வோர்க் அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களையும் மொத்த விற்பனை அடிப்படையில் சமமாக ஆதரிக்கும். தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தாங்களாகவே 5ஜியைப் பயன்படுத்துவதற்கு செலவிடும் பணத்தில் பாதிக்கும் குறைவாகவே இருக்கும்.

இந்த எம்ஓசிஎன் மாடல் 5 தொலைத் தொடர்பு நிறுவனங்களின் ஆதரவோடு கடந்த நவம்பர் 10ஆம் தேதி வெற்றிகரமான முறையில் நிரூபிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தொடர்பு, பல்லூடகத்துறை அமைச்சர் டான்ஸ்ரீ அனுவார் மூசா உட்பட பல துறைகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இந்த 5ஜி அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கும் ஒரு ஜிபிக்கு 20 காசுக்கும் குறைவாகவே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொலைத் தொடர்பு நிறுவனங்கள் 4ஜி சேவையை வழங்குவற்கு செலவிட்ட பணத்தில் பாதிக்கும் குறைவாகும். இந்த விலைக்குறைப்பு அத்துறைகளின் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் வகையில் பல்வேறு நன்மைகளை ஏற்படுத்திக் கொடுக்கும். இது அவை தனது சேவையை மேலும் விரிவாக்கம் செய்வதற்கும் புதிய துறைகளில் முதலீடு செய்வதோடு வருவாய் வளர்ச்சி வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுக்கும். இதன்வழி பயனீட்டாளர்களும் பயனடைவர். நாட்டிலுள்ள தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கைப்பேசி சேவைகளுக்கான 5ஜி சேவைக்கு குறைந்த கட்டணத்தையே விதிக்கும்.

 

மக்களின் சிறந்த நலன்களை உறுதிப்படுத்துவது

5ஜி குறித்து உங்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பி வரும் கேள்விகள்

கேள்வி: 5ஜி நடைமுறையை துரிதப்படுத்துவதற்கான முடிவின் அடிப்படை என்ன?

பதில்:

5ஜி நெட்வர்க் கிடைக்கும் தன்மையில் நமது அண்டை நாடுகளை விட மலேசியா ஏற்கெனவே பின்தங்கியுள்ளது. சிங்கப்பூர், இந்தோனேசியா, தாய்லாந்து, வியட்னாம், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் எல்லாம் 2019 ஆம் ஆண்டிலேயே தங்கள் 5ஜி நெட்வர்க் தொடர்பை தொடங்கியுள்ளன. 5ஜி நெட்வர்க் தொடர்பை ஏற்படுத்துவதை நாம் இன்னும் தாமதப்படுத்தினால் நமது பொருளாதார போட்டாபோட்டியின் தன்மையை இது பாதிக்கும். மேலும், நமது தேசிய மேம்பாட்டு செயல்முறைக்கும் இது இடையூறுகளை ஏற்படுத்தும்.

கேள்வி: 5ஜி திட்டத்தை அமல்படுத்தும் பணி தனியார் துறைக்கு அல்லாமல் அரசாங்கத்திற்கு முழுமையாகச் சொந்தமான ஒரு நிறுவனத்திற்கு ஏன் வழங்கப்பட்டது?

பதில்:

டிஜிட்டல் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்காக இணையத் தொடர்பு முக்கியமான பங்கினை ஆற்றுவதால், அதை உணர்ந்து மலேசிய டிஜிட்டல் பொருளாதார திட்ட வரைவை (மைடிஜிட்டல்) அறிவிப்பதற்காக 2021 பிப்ரவரி மாதம் ஒரு தீர்க்கமான முடிவை அரசாங்கம் எடுத்தது. மைடிஜிட்டலின் கீழ் எடுக்கப்பட்டுள்ள பிரதான நடவடிக்கைகளில் ஒன்றாக, 5ஜி அமலாக்கத்தை துரிதப்படுத்தும் நோக்கத்தில் டிஜிட்டல் நேஷனல் பெர்ஹாட் (டி.என்.பி.) எனும் நிறுவனம் சிறப்பாக அமைக்கப்பட்டது.  செலவுகளை மீட்டெடுக்கும் மாதிரியின் அடிப்படையில் இது செய்யப்பட்டது.

கேள்வி: டி.என்.பி. ஒரு புதிய நிறுவனம். அப்படியிருக்க இத்தொழிலில் நீண்ட கால அனுபவம் கொண்ட மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுடம் ஒப்பிடுகையில் இதற்கு என்ன அனுபவம் உள்ளது?

பதில்:

டி.என்.பி. தோற்றுவிக்கப்பட்ட முதல் நாளிலிருந்து இத்தொழில்துறையில் பழுத்த அனுபவம் உள்ளவர்களாலும் தனியார் துறை நிபுணர்களாலும் இந்நிறுவனம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

கேள்வி: தற்சமயம் ஏன் எந்த ஒரு தொலைத்தொடர்பு நிறுவனமும் டி.என்.பி.யுடன் பதிவாகவில்லை?

பதில்:

டி.என்.பி.யுடன் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பதிவாவதற்கு, நுழைவுக்காக கட்டாய தரநிலைகளுக்கு ஏற்ப Reference Access Offer (RAO)  எனும் அணுகல் சலுகை குறியீடு வெளியிடப்பட வேண்டும்.

எப்படி இருப்பினும், 2021 டிசம்பர் முதல் தேதி டி.எம். பெர்ஹாட் (TM Berhad) நிறுவனம் டி.என்.பி. (DNB) யுடன்  5ஜி நெட்வர்க் பரீட்சார்த்த உடன்பாட்டில் கையெழுத்திட்டது. மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களும் கூடிய விரைவில் டி.என்.பி.யுடன் 5ஜி நெட்வர்க் பரீட்சார்த்த உடன்பாடுகளில் கையெழுத்திடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேள்வி: 5ஜி நெட்வர்க்கின் அமலாக்கம் ஒரு பிரத்தியேக உரிமையாக இருந்து, போட்டா போட்டியை கட்டுப்படுத்துமா?

பதில்:

அந்த தொலைத்தொடர்பு நிறுவனம் மலேசிய போட்டி ஆணையத்தின் 2020 ஆம் ஆண்டு போட்டா போட்டி சட்டத்திற்கு (சட்டம் 712) உட்பட்டது அல்ல. அது போலவே, போட்டித்தன்மைக்கு எதிரான அல்லது பிரத்தியேக நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அச்சட்டத்திற்கு இணங்கிப் போகும் அல்லது சந்தை அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் பிரச்சினைக்கு இங்கு இடமில்லை. தொலைத்தொடர்பு தொழில்துறையில் போட்டி என்ற விவகாரம் சட்டம் 588 இன் கீழ் நெறிப்படுத்தப்படுகிறதே தவிர சட்டம் 712 இன் கீழ் அல்ல. தொலைத்தொடர்பு துறைக்கான ஒருங்கிணைப்பு நிறுவனம் என்ற முறையில் எம்.சி.எம்.சி. மட்டுமே கடுமையான விதிமுறைகளை விதிக்கின்றது. இதன் தொடர்பில், 1998 ஆம் ஆண்டு தொலைத்தொடர்பு, பல்லூடகச் சட்டம் டி.என்.பி. நடவடிக்கைகளை  ஒருமுகப்படுத்துவதற்கான போதுமான கட்டமைப்பை வழங்குகிறது. இவற்றில் கீழ்க்காண்பவை அடங்கும்:

1. நியாயமான, சமமான அடிப்படையில், சட்டம் 588 இன் கீழ்  உரிமங்களுக்கு 5ஜி மொத்த விற்பனை திறனை வழங்குவது டி.என்.பி.க்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது;

2. சில்லறை நடவடிக்கைகளில் ஈடுபட டி.என்.பி. க்கு அனுமதி கிடையாது. சில்லறை சந்தையானது தங்கள் சொந்த வலிமையின் அடிப்படையில் போட்டி போடும் தொலைத்தொடர்பு நிறுவனங்களைச் சார்ந்துள்ளது.

3. தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு விற்கப்படும் 5ஜி மொத்த விற்பனை திறன் அந்தந்த நிறுவனங்களின் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப அமையும். தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கான 5ஜி திறன் சலுகையை உறுதி செய்ய டி.என்.பி, அனுமதிக்கப்படாது.

4. டி.என்.பி. மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடனான பேச்சுவார்த்தை முடிவடைந்ததும் 5ஜி மொத்த விற்பனைக்கான விலையை எம்.சி.எம்.சி. அங்கீகரிக்கும். பிறகு வெளியிடப்படவிருக்கும் RAO ஆவணத்தில் இதன் விலை குறிப்பிடப்பட்டிருக்கும். மற்றும்

5. அதே RAO ஆவணத்தில் வெளியிடப்படவிருக்கும் சேவை அளவு உடன்பாட்டின் வாயிலாக சேவையின் தரம் என்ற ரீதியில் SWN னின் செயலாக்கத்தை எம்.சி.எம்.சி. எப்போதும் நெறிப்படுத்தும்.

கேள்வி: டி.என்.பி. எவ்வாறு நிர்வகிக்கப்படும்?

பதில்:

* ஏழு உறுப்பினர்களைக் கொண்ட இயக்குநர்கள் வாரியத்தால் டி.என்.பி. நிர்வகிக்கப்படுகிறது. இவர்களில் அரசாங்க தரப்பில் இரு உறுப்பினர்கள், தனியார் துறையைச் சார்ந்த 5 உறுப்பினர்கள் அடங்குவர். இவர்கள் அனைவரும் தொலைத்தொடர்பு நடவடிக்கைகள், இணைய பாதுகாப்பு, சட்டம் மற்றும் நிதி ஆகிய துறைகளில் வலுவான நிபுணத்துவத்தைக் கொண்டவர்கள்.

* நிதி அமைச்சுக்கு முழுமையாகச் சொந்தமான ஓர் அமைச்சு என்ற வகையில், அதன் நடவடிக்கைகள் மற்றும் நிதி செயலாக்க விவகாரங்களில் டி.என்.பி நேரடியாக நிதி அமைச்சுக்கு பதில் கூறும்.

* 1998 ஆம் ஆண்டு தொலைத்தொடர்பு, பல்லூடகச் சட்டத்தின் கீழ் உரிமம் பெற்றிருப்பதால், தொலைத்தொடர்பு பல்லூடக அமைச்சின் கீழ் எம்.சி.எம்.சி. இதனை கண்காணிக்கின்றது.

* கூடுதலாக, தனியார் துறையின் நிதியுதவியினை டி.என்.பி. பெறும் என்பதால் நிதிக் கழகங்கள் மற்றும் முதலீட்டாளர்களிடமிருந்து வரும் நிதிகளைப் பெறுவதுடன் வரும் அனைத்து உதவியாளர் பொறுப்புகளையும் அது ஏற்றிருக்கும்.

* ஆதலால், நேர்மை மற்றும் உரிமையோடு டி.என்.பி. நிர்வகிக்கப்படுவதை அரசாங்கத்தின் 4 நிலைகள் உறுதி செய்யும்.

கேள்வி: இதனால் மக்களுக்கு ஏற்படும் செலவுகள் பற்றி எங்களுக்குச் சொல்ல முடியுமா?

பதில்:

டி.என்.பி. அரசாங்கத்திற்கு சொந்தமானது. அதே சமயம் எம்.சி.எம்.சி.யினால் நெறிபடுத்தப்படுகிறது. டி.என்.பி. வர்த்தக முறைகளின் கீழ் ஒப்புக்கொள்ளப்பட்டபடி தனியார் துறை நிதிக்கழகங்கள் இதற்கு நிதி உதவிகளை வழங்குகின்றன. ஆகையால், அரசாங்க துறை அல்லது அரசாங்கத்திடமிருந்து எந்த நிதி உதவியும் இதற்குத் தேவை இல்லை.

கேள்வி: இந்த நிதி எங்கிருந்து வரும்? மக்களின் பணத்தில் அரசாங்கம் எவ்வளவு செலவு செய்யும்?

பதில்:

வரும் 10 ஆண்டுகளுக்கு 5ஜி நெட்வர்க்கின் அமலாக்கத்திற்கு வெ.16.5 பில்லியன் செலவாகும். விற்பனையாளர்களுக்கான கட்டணங்களை ஒத்திவைப்பது, வணிகம் மற்றும்  செயல்பாடு மூலதன நிதிகளின் வாயிலாக இதற்கான நிதிகள் பெறப்படும். உள்நாட்டுக் கடன் மூலதன சந்தையில் எழுப்பப்படும் சுக்குக் திட்டத்தின் வாயிலாகவும் நிதி திரட்டப்படும். வங்கிகள் உட்பட நிதிச் சேவை துறையிலிருந்து நிதியை டி.என்.பி. பெறும். மொத்த விற்பனை வாயிலாகப் பெறப்படும்  வருமானத்திலிருந்து பின்னர் இது திருப்பிச் செலுத்தப்படும். ஆதலால், இதன் அமலாக்கத்திற்கு அரசாங்க நிதி, உத்தரவாதம் மேம்பாட்டுச் செலவினம் எதுவும் தேவைப்படாது.

கேள்வி: நமது 4ஜி வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படாத நிலையில், இப்போதைக்கு 5ஜி நமக்குத் தேவையா?

பதில்:

கோவிட்-19 தொற்றுப் பரவலானது டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் இணைப்பிற்கான தேவைகளின் முக்கியத்துவத்தை நமக்கு நன்கு உணர்த்தியுள்ளது. கடந்த ஆண்டு பயனர்கள் மத்தியில் தரவுகளுக்கான தேவை பெருமளவு அதிகரித்தது. நடப்பு நெட்வர்க் வழி இதனை நிறைவு செய்ய இயலவில்லை. காலத்தோடு இதற்கான தேவை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தத் தேவைகளை நிறைவு செய்யும் ஆற்றலை மலேசிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பெற்றிருக்க வேண்டும்.

கேள்வி: டெண்டர் முறைகள் வெளிப்படையாக மேற்கொள்ளப்பட்டனவா? அப்படியானால் யாருக்காக அது திறக்கப்பட்டது?

பதில்:

டி.என்.பி. யின் டெண்டர் செயல்முறைகளை Ernst & Young Consulting Sdn. Bhd. (EY Consulting) எனும் சுயேச்சையான நிபுணத்துவ சேவை நிறுவனம் மேற்கொண்டது. இது உலகளாவிய தரத்திற்கு ஏற்ப மேற்கொள்ளப்பட்டுள்ளது. 5ஜி அமலாக்க அனுபவம் பெற்றுள்ள 10 நாடுகளிலிருந்தும் உள்நாட்டையும் சேர்ந்த 50 நிபுணர்களைக் கொண்ட 4 குழுக்கள் இதில் சம்பந்தப்பட்டன. தொடக்கக் கட்டமாக, 14 நெட்வர்க் உபகரண வழங்குநர்கள் மதிப்பிடப்பட்டனர். அதன் பிறகு, எண்மர் பட்டியலிடப்பட்டு, டெண்டருக்கு ஏலமிட அழைக்கப்பட்டனர். இறுதியாக 4 ஏலங்கள் பெறப்பட்டன. 5ஜி நெட்வர்க் தேவைகளுக்கு ஏற்ப இத்தொழில்துறையைச் சார்ந்தவர்களிடமிருந்து கருத்துகள் பெறப்பட்டு கடுமையான நடைமுறைகளின் வாயிலாக டெண்டர் தேவைகளுக்கான தகுதிகள் அடையாளம் காணப்பட்டு, தேர்வு செய்யப்பட்டன.

கேள்வி: இயங்கலை வாயிலாக அண்மையில் GSMA உடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டது. SWN மாதிரி குறித்து பலவாறாக கவலைகள் தெரிவிக்கப்பட்டன. இது பற்றி ஏதேனும் கருத்து உள்ளதா?

பதில்:

மலேசியாவைப் பொறுத்த வரையில், தொலைத்தொடர்பு தொழில்துறை மற்றும் வாடிக்கையாளர்களின் நன்மைக்காக சாத்தியமானவரை குறைந்த செலவில் 5ஜி மொத்த விற்பனை சேவைகளை வழங்குவதற்கு டி.என்.பி. நிறுவனத்திற்கு அரசாங்கம் அதிகாரம் வழங்கியுள்ளது.

1. முதலில், மொத்த விற்பனை 5ஜி சேவைகளின் விநியோகிப்பாளர் என்ற வகையில், இறுதிப் பயனர்களுக்கு 5ஜி சில்லறை சேவைகளை வழங்குவதில் இத்தொழில்துறையினருடன் போட்டி போடாது. அதற்கு பதிலாக, நாட்டில் 5ஜி ஏற்றுக்கொள்ளப்படுவதை துரிதப்படுத்தும் நோக்கத்துடன் மலேசிய நெட்வர்க் நடத்துநர்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும்;

2. இரண்டாவதாக, 5ஜி நெட்வர்க் முறையை மேம்படுத்துவதற்கு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் அடிப்படை வசதி வழங்குநர்களுடன் டி.என்.பி. ஒத்துழைக்கும். சாத்தியமான வரை நடப்பு அடிப்படை வசதிகள் பயன்படுத்தப்படும். இதன் வழி நகலை தவிர்ப்பதுடன் செலவுகளையும் குறைக்க முடியும்;

3. மூன்றாவதாக, டி.என்.பி. போன்ற ஒரே நடுநிலையான நிறுவனத்திற்குள் 5ஜி அலைவரிசையை ஈர்ப்பதுடன் அலைவரிசை ஆற்றலை அதிகரிக்கச் செய்ய முடியும். இதன் வாயிலாக, குறைவான செலவில் 5ஜி மொத்த விற்பனை சேவைகளை வழங்குவதற்கு டி.என்.பி. க்கு வகை செய்யும்.

ஒரு நிலையான துரித வேக இணையத் தொடர்புடன் ஆரம்பித்து, 5ஜி உபகரணங்கள் மற்றும் சேவைகளை அமல்படுத்தி, அவை கிடைக்கச் செய்வதை விரைவுபடுத்துவதற்கு SWN மாதிரி மிகச்சிறந்த, தகுதியான தொழில்நுட்பமாகத் திகழ்கின்றது.      

 

             

 

 

 

 

 

 

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img