கோலாலம்பூர், டிச. 10-
தொலைத்தொடர்பு துறையில் 5ஜி அறிமுகத்திற்கு நாடு தயாராக உள்ளது. தற்போது அதிகமாக பேசப்பட்டு வரும் 5ஜி என்றால் என்ன? தேசிய 5 ஆவது தலைமுறை தொடர்புமுறை அமலாக்கத்தையே இது குறிக்கின்றது. இணையத் தொடர்பு வேகத்தை அதிகரிக்கும் முறையாகும். இதன் அமலாக்கத்தை துரிதப்படுத்தும் பொறுப்பை டி.என்.பி. எனும் டிஜிட்டல் நேஷனல் பெர்ஹாட் (DNB) ஏற்றுள்ளது.
வரும் 15 ஆம் தேதி முதல் வர்த்தக ரீதியில் 5ஜி (5G) சேவைகள் கிடைக்கப்பெறும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. முதல் கட்டமாக புத்ராஜெயா, சைபர்ஜெயா மற்றும் கோலாலம்பூரின் சில பகுதிகளில் இச்சேவை கிடைக்கும். 2024 க்குள் அதிகமான மக்கள் தொகை உள்ள 80 விழுக்காட்டு இடங்களுக்கு இச்சேவை சென்றடையும் என அது தெரிவித்தது.
4ஜி அளவை தயாரிப்பதற்கான செலவுகளை விட கணிசமான குறைந்த விலையிலேயே தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மொத்தமாக 5ஜி சேவையை டி.என்.பி. வழங்குகிறது. இதன் வழி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் கைப்பேசி சேவைகளை வழங்க முடியும்.
இறுதிப் பயனர்களுக்கு 5ஜி அனுபவத்தை வழங்கும் ஒரு முயற்சியாக உள்நாட்டு தொலைத்தொடர்பை சார்ந்தவர்களுடன் வழக்கமான பேச்சுவார்த்தைகளை இந்நிறுவனம் நடத்தி வருகிறது. இதன் அடிப்படையில் டி.என்.பி. நெட்வர்க் உடன் ஒருங்கிணைந்துள்ள அனைத்து கைப்பேசி நெட்வர்க் நடத்துநர்களுடனும் எந்த செலவும் இல்லாமல் மொத்த 5ஜி சேவைகளை டி.என்.பி. வழங்கும் என அது மேலும் கூறியது. 2021 டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் புத்ராஜெயா, சைபர்ஜெயா மற்றும் கோலாலம்பூரின் சில பகுதிகள் முழுவதும் தயாராக இருக்கும் அனைத்து 5ஜி நேரலை தளங்களும் இச்சேவையினை பெறலாம். 2022 மார்ச் 31 ஆம் தேதி வரையில் இச்சலுகை அமலில் இருக்கும்.
இச்சேவையைப் பெறக்கூடிய பகுதிகளில் அதற்கான பொருத்தமான சாதனங்களைப் பெற்றிருக்கும் தங்களின் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கைப்பேசி நெட்வர்க் நடத்துநர்கள் இச்சேவையை கிடைக்கச் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, ஆர்.ஏ.ஓ. எனும் குறிப்பு அணுகல் சலுகை கூடிய விரைவில் மலேசிய தொலைத்தொடர்பு பல்லூடக ஆணையத்தால் அங்கீகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கிடைத்ததும் நீண்ட கால ஒப்பந்தம் கையெழுத்திடுவது தொடர்பில் கைப்பேசி நெட்வர்க் நடத்துநர்களுடன் ஏ.என்.பி. பேச்சுவார்த்தை நடத்தும். 2020 மார்ச் 31 ஆம் தேதிக்குள் இந்த நிறுவனங்கள் இந்த ஒப்பந்தத்தின் கீழ் செயல்படும். அந்நிறுவனங்களுக்கு மேலும் கூடுதலான 5ஜி பயன்பாட்டுக்கான இலவச அணுகல் கிடைக்கும்.
5ஜி பயன்பாட்டுக்குத் தேவையாக சாதனங்களைப் பெற்றுள்ள இதன் இறுதிப் பயனர்கள் அல்லது வாடிக்கையாளர்கள் 100 Mbps மற்றும் அதற்கும் அதிகமான வேகத்தை அனுபவிக்கலாம் என டி.என்.பி. மேலும் கூறியது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்