புத்ரா ஜெயா, டிச. 10-
வரும் சில நாட்களில் நடைபெறும் மலேசிய குடும்பத்தின் 100ஆவது விழாவில் கலந்து கொள்ளவிருக்கும் பொதுமக்கள் அவசியம் அரசாங்கத்தின் எஸ்.ஓ.பி. எனப்படும் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என தேசிய பாதுகாப்பு மன்றத்தின் (பாதுகாப்பு) துணைத் தலைமை இயக்குநர் டத்தோ ரோட்ஷி முகமட் சாஆட் கேட்டுக் கொண்டார்.
தேசிய மீட்சி திட்டத்தின் நான்காவது கட்டத்தில் நுழைந்துள்ள மாநிலத்தில் அந்த 4 நாள் நிகழ்ச்சி நடத்தப்பட்டாலும்கூட, நாட்டில் கோவிட் - 19 தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த இந்த நடைமுறைகள் மிகவும் அவசியம் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது என்றார்.
நாட்டில் இப்போது ஒமிக்ரோன் எனும் புதிய தொற்று கவலையளிக்கும் வகையில் பரவி வருவதால், நாட்டில் மீண்டும் மற்றொரு புதிய தொற்று உருவாவதற்கு யாரும் காரணமாகி விடக் கூடாது என தேசிய பாதுகாப்பு மன்றம் நினைவுறுத்த விரும்புவதாகவும் அவர் சொன்னார்.
நேற்று தேசிய பாதுகாப்பு மன்றத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இவ்வாறு கேட்டுக் கொண்டார். இதற்காக மிகவும் கடுமையான முறையில் எஸ்.ஓ.பி. விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதில் என்ன முக்கியம் என்றால், அந்நிகழ்ச்சிக்கு வரும் அனைத்து தரப்பினரும் பொறுப்பான முறையில் அதன் விதிமுறைகளை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும். விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.
அவற்றில் அவசியம் சுவாசக் கவசம் அணிந்திருப்பது, நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ள முகப்பில் சுகாதாரப் பரிசோதனையை மேற்கொள்வது, அடிக்கடி கைகழுவும் திரவத்தை பயன்படுத்துவது, ஒரு மீட்டர் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது ஆகியவையும் அடங்கும் என்றார். அந்த விழாவில் ஒரு நேரத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர் என்ற அவர், 13 வயதுக்கும் மேற்பட்ட பதின்ம வயதினர் அங்கு செல்ல விரும்பினால், தேவையான தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்ள வேண்டும் என்றார்.
12 வயதுக்கும் குறைவான சிறுவர்கள் தடுப்பூசி எதனையும் போட்டுக் கொள்ள தேவையில்லை. ஆனால், அவர்களுடன் செல்லும் பெற்றோருக்கு அவசியம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். அவர்களை மருத்துவ அதிகாரிகள் அணுக்கமாகக் கண்காணிப்பார்கள் என்ற அவர், தீயணைப்பு - மீட்புப் படையினர் நள்ளிரவில் அங்கு கிருமி நாசினிகளையும் தெளிப்பார்கள் என்றார்.
ஆபத்து அவசர வேலைகளுக்காக மருத்துவருடன் அங்கு தனி அறை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார். எஸ்.ஓ.பி. விதிமுறைகள் குறித்து அங்கு அடிக்கடி அறிவிப்புகள் செய்யப்படும் என்ற அவர், அங்கு பணிபுரியும் அதிகாரிகளுக்கு மட்டுமே உணவு பொட்டலங்கள் வழங்கப்படும் எனவும் அவர் விவரித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்