வியாழன் 12, டிசம்பர் 2024  
img
img

மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள பி.டி.பி.டி.என். வருமான வரி விலக்கு சலுகை!
வெள்ளி 10 டிசம்பர் 2021 14:15:38

img

 கோலாலம்பூர், டிச. 10-

 தேசிய உயர் கல்வி நிதிக்கழகமான பி.டி.பி.டி.என் மாணவர்களின் எதிர்காலத் தேவைகளுக்காக பல்வேறு முதலீடு மற்றும் சேமிப்புத் திட்டங்களை வழங்கும் நிலையில்,  பி.டி.பி.டி.என் வருமான வரி விலக்கு சலுகைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இது மாணவர்களின் கல்விக் கடனை திருப்பிச் செலுத்துவதில் பெற்றோர்களுக்கு பேருதவியாகத் திகழும். இந்த முதலீடு மற்றும் சேமிப்புகளின் வாயிலாகக் கிடைக்கக்கூடிய லாப ஈவுகள் கடனை திருப்பிச்செலுத்துவதை எளிமையாக்கும் என்பது பெற்றோர்களுக்கு உண்மையில் ஒரு நற்செய்திதான்.  காரணம், உயர் கல்வியை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு  கடனுதவிகளை வழங்குவது பி.டி.பி.டி.என்.னின் தலையாய நோக்கம் என்றாலும் கடன் பெறுவோருக்காக முதலீடுகளையும் சேமிப்புகளையும் வழங்குவதில் அதன் செயலாக்கத்தை அக்கழகம் மறுசீரமைப்பு செய்துள்ளது.

பி.டி.பி.டி.என் கழகத்தின் எஸ்.எஸ்.பி.என். சேமிப்புத் திட்டங்கள் மக்களுக்கு பெருமளவில் நன்மைகளை ஏற்படுத்தி தருகிறது. குறிப்பாக தங்கள் பிள்ளைகளின் நன்மைக்காக எஸ்.எஸ்.பி.என். பிரைம் சேமிப்பில் முதலீடு செய்யும் பெற்றோர் அல்லது அதிகாரப்பூர்வ பராமரிப்பாளர்கள் இவ்வரி விலக்குச் சலுகைக்கு தகுதி பெறுகின்றனர். 

ஓராண்டுக்கு அவர்களின் முதலீட்டுத் தொகையின் அடிப்படையில்  அதிகபட்சம் 8,000 வெள்ளி வரையில் வரி விலக்குச் சலுகை வழங்கப்படுகிறது. வரி விலக்குச் சலுகைக்கான தகுதிகள் கீழ்வருமாறு:-* வெவ்வேறான வரி விலக்கு - தனிநபருக்கு ஓராண்டுக்கு 8,000 வெள்ளி வரையில் வரி விலக்குச் சலுகை வழங்கப்படுகிறது. * கூட்டு வரி விலக்கு - 8,000 வெள்ளி வரையில் வரி விலக்குச் சலுகை வழங்கப்படுகிறது.

எனினும், தங்களின் எதிர்காலத்திற்காக சேமித்து வருபவர்களுக்கு இந்த வரி விலக்குச் சலுகை வழங்கப்படாது. ஓர் ஆண்டிற்காக சேபிப்பை அடிப்படையாகக் கொண்டே இந்த வரி விலக்குச் சலுகைகள் வழங்கப்படும். குறிப்பாக பணம் மீட்கப்பட்டால் அதற்கு பின்பு தான் வரி விலக்குச் சலுகை வழங்கப்படும். சேமிப்பவர்கள் அதற்கான சலுகைகளை பி.டி.பி.டி.என். அகப்பக்கத்தில் எஸ்.எஸ்.பி.என். பிரைம் (SSPN Prime) வாயிலாக அறிந்து, தங்களின் கணக்குகளை சரிபார்த்துக் கொள்ளலாம்.

எஸ்.எஸ்.பி.என். பிளஸ் (SSPN Plus) மற்றும் எஸ்.எஸ்.பி.என். பிரைம் (SSPN Prime) ஆகிய இரு திட்டங்களில் சேமிப்பவர்களுக்கும் இந்த 8 ஆயிரம் வெள்ளி வரி விலக்குச் சலுகை வழங்கப்படும். அதே வேளையில் இரண்டு கணக்குகளில் சேமிப்பவர்களுக்கு 15 ஆயிரம் வெள்ளி வரி விலக்குச் சலுகை வழங்கப்படும்.

ஆண்டுக்கு 8,000 வெள்ளி வரைக்குமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இது நடப்பு மதிப்பீட்டு ஆண்டுக்கான சேமிப்புக்கானது.  ஊழியர் சேம நிதியைத் தேர்வு செய்யும் தனியார் துறை அல்லது அரசு ஊழியர்களாக இருந்தால் நடப்பு மதிப்பீட்டு ஆண்டில் ஆண்டுக்கு 3,000 வெள்ளி வரை வரி விலக்கு அளிக்கப்படுகிறது. அல்லது அரசாங்க ஓய்வூதியத்தை தேர்வு செய்யும் அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 7,000 வெள்ளி வரி விலக்கு அளிக்கப்படுகிறது. மாதம் ஒன்றுக்கு மிகவும் குறைவான அளவாக 30 வெள்ளியை சேமிக்கலாம். இச்சேமிப்புத் திட்டங்களில் பங்களிப்பவர்கள் மரணமடைந்தால் அச்சலுகைகள் மற்றவர்களுக்கு வழங்கப்படாது. அந்த கணக்கு மூடப்படும். சலுகைகளும் முடிவுக்கு கொண்டு வரப்படும்.

சிம்பான் எஸ்.எஸ்.பி.என். பிரைம் சேமிப்பை பொறுத்த வரையில் 2004 ஆம் ஆண்டு முதல் 2021 மே 31 ஆம் தேதி வரையில் அதன் கணக்கு உரிமையாளர்களின் எண்ணிக்கை 4,306,415 ஆகும். அதே சமயம் சிம்பான் எஸ்.எஸ்.பி.என். பிளஸ் திட்டத்தின் கீழ் 2015 முதல் 2021 மே 31 ஆம் தேதி வரையில் 678,243 கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன.

2021 ஆம் ஆண்டுக்கான வரி விலக்கு சலுகைகளைப் பெறுவதற்காக முதலீட்டை அதிகரிக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் அதற்கான வழிமுறைகள்:

* இணையம் வாயிலான விண்ணப்பம் - www.lovesspn.com என்ற அகப்பக்கத்தின் வாயிலாக ஒரு முதலீட்டாளர் தனது கணக்கில் கூடுதலாக செலுத்தலாம் அல்லது இன்னும் கணக்கு திறக்காதவர்களாக இருந்தால் புதிய கணக்கை திறக்கலாம்.

* பி.டி.பி.டி.என். நேரடிச் சேவை - சிம்பான் எஸ்.எஸ்.பி.என். கணக்கின் முதலீட்டாளர்கள் பி.டி.பி.டி.என். முகப்பில் நேரடியாக வந்து முதலீட்டுத் தொகையை அதிகரித்துக் கொள்ளலாம் அல்லது புதிய கணக்குகளை திறக்கலாம். பி.டி.பி.டி.என். விற்பனை நிர்வாகியின் மூலமாகவும் இதனை செய்யலாம்.

* நீங்கள் தேர்வு செய்யும் வங்கி வாயிலாக - சிம்பான் எஸ்.எஸ்.பி.என். பிரைம் கணக்குகளைத் திறக்க வேண்டுமானால் மேபேங்க், பேங்க் இஸ்லாம், அக்ரோ பேங்க், பேங்க் ராக்யாட், ஆர்.எச்.பி ஆகிய வங்கிகளின் வாயிலாக விரைந்து இதற்கான ஏற்பாடுகளை செய்யலாம்.

சிம்பான் எஸ்.எஸ்.பி.என். பிரைம் மற்றும் சிம்பான் எஸ்.எஸ்.பி.என். பிளஸ் ஆகியவற்றுக்கான எளிதான சேமிப்பு வழிகள்:

பி.டி.பி.டி.என். முகப்பு, சம்பளத்தில் பிடித்தம் செய்வது, இணையம் வழி வங்கிச் சேவை, பி.டி.பி.டி.என். FPX  அதிகாரப்பூர்வ அகப்பக்கம், நேரடி டெபிட், Mypay PTPTN, Shopee, kiplePay, BESTPay, KelantanPAY, JomPAY, e-pay, ATM/CDM/CICI  (பேங்க் இஸ்லாம்/பேங்க் ராக்யாட்), செவன் இலவன் உட்பட பல வழிகள் உள்ளன.

உங்கள் தேர்வு எது?

 

 

 

  

 

 

 

 

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img