கோலாலம்பூர், டிச. 7-
ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 31 ஆம் தேதி அனுசரிக்கப்படும் உலக சேமிப்பு தினத்தை முன்னிட்டு 2021 அக்டோபர் மாதம் முழுவதும் சிம்பான் எஸ்.எஸ்.பி.என். (பி.எம்.எஸ்.) (Simpan SSPN - BMS) சேமிப்பு மாதமாக தேசிய உயர்கல்விக் கழகம் (பி.டி.பி.டி.என்.) ஏற்பாடு செய்தது.
பி.டி.பி.டி.என். சமூகவலைத்தளத்தின் வழி இயங்கலை வாயிலாக தேசிய மற்றும் மாநில அளவில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதன் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளில் பெற்றோர்களும் பிள்ளைகளும் பங்கேற்று மகிழ்ந்தனர்.
பி.எம்.எஸ். ஏற்பாடு செய்யப்பட்டது இவ்வாண்டு 4 ஆவது முறையாகும். நாடு முழுவதும் அனைத்து இன மக்களுக்கும் இதன் பயன்கள் சென்றடைவதை உறுதி செய்வதற்கு பி.டி.பி.டி.என்.னின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில் இத்திட்டம் ஒவ்வோர் ஆண்டும் தொடரும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
உயர்கல்விக்கான தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை உறுதி செய்யும் வகையில் அவர்களின் இளம் வயதிலேயே சேமிப்பில் கவனம் செலுத்துவதற்கு பெற்றோர்களை ஊக்குவிக்கும் ஒரு திட்டமான 2021-2025 பி.டி.பி.டி.என். வியூகத் திட்டத்தின் இலக்கை அடையும் வகையில் இது அமைந்துள்ளது.
2021 அக்டோபர் முதல் தேதி தொடங்கி 2021 அக்டோபர் 31 வரரையில் நீடித்த பி.எம்.எஸ். 2021 திட்டம், எஸ்.எஸ்.பி.எம். சேமிப்பு முதலீட்டிற்காக இதற்கு முன்னதாக இலக்கிடப்பட்ட 110 மில்லியன் வெள்ளியை விட 175 மில்லியன் பெறப்பட்டது மிகப்பெரிய வெற்றியாகும் என பி.டி.பி.டி.என். கூறியுள்ளது. இதற்கான முழுமையான அர்ப்பணிப்புக்காக மலேசிய சமூகத்தினர் அனைவருக்கும் பி.டி.பி.டி.என். நன்றி தெரிவித்துக்கொண்டது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்