img
img

Aspirasi #KeluargaMalaysia கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்
திங்கள் 06 டிசம்பர் 2021 12:54:17

img

கோலாலம்பூர், டிச. 6 -

அரசாங்கத்தின் 100 நாள் Aspirasi #Keluarga Malaysia எனும் நிகழ்ச்சி மிகவும் பிரமாண்டமான வகையில் இம்மாதம் 9 ஆம் தேதி தொடங்கி 12 ஆம் தேதி வரையில் கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெறவிருப்பதை முன்னிட்டு பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய எஸ்.ஓ.பி. விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சி அந்நான்கு நாட்களுக்கும் காலை 9.00 மணி தொடக்கம் இரவு 10.00 மணி வரையில் நடைபெறும்.  மலேசியக் குடும்பதினர் அனைவரும் திரளாகக் கலந்து கொள்ள அழைக்கப்படுகின்றனர்.

எஸ்.ஓ.பி.விதிமுறைகள் கீழ்வருமாறு:

* ஒவ்வொரு முறையும் முகக்கவரி அணிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

* நுழைவாயிலில் கடைப்பிடிக்க வேண்டியவை:

    - மை செஜாத்ரா செயலியைக் கொண்டு ஸ்கேன் செய்ய வேண்டும்;

    - முழுமையான (இரு முறை)  தடுப்பூசியைப் பெற்றிருக்க வேண்டும்;

    - உடல் உஷ்ண அளவை எடுக்க வேண்டும்;

    - கைத்தூய்மியைப் பயன்படுத்த வேண்டும் மற்றும்

     - நுழைவாயிலில் கிருமி நாசினி தெளித்துக்கொள்ள வேண்டும்.

* சமூக இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். பணியில் ஈடுபட்டிருக்கும் சுகாதார அதிகாரி இது பற்றி உங்களுக்கு நினைவுறுத்துவார்.

* ஒவ்வொரு நாளும் நிகழ்ச்சிகள் முடிவடைந்ததும்  இரவு 11.00 மணிக்கு மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் மண்டபத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபடுவர்.

* தனிமைப்படுத்துவதற்கான அறையும் அவசர சிகிச்சைக்கான அறையும் தயார் நிலையில் இருக்கும். சுகாதாரப் பணியாளர் அமர்த்தப்படுவார்.

* எஸ்.ஓ.பி. விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது பற்றி அவ்வப்போது அறிவிப்புகள் செய்த வண்ணம் இருக்கும்.

* அனைத்து பணியாளர்களுக்கும் உணவு பாக்கெட்டுகள் தயார் செய்யப்படும்.

 

 

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img