செவ்வாய் 10, டிசம்பர் 2024  
img
img

தொழில் முனைவோர், தொழில் துறை வளர்ச்சிக்கான அத்தியாவசிய திறன்களுடன் மலேசிய இந்தியர்களுக்கு சித்தப்படுத்தும் NCER பயிற்சித் திட்டங்கள்.
திங்கள் 22 நவம்பர் 2021 11:56:01

img

கோலாலம்பூர், நவ. 21-

மலேசிய பிரதமர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்  வலியுறுத்தி வரும் “கெலுவார்கா மலேசியா”உணர்வுக்கு ஏற்ப, மக்களின் சமூகப் பொருளாதார மேம்பாட்டை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட, உள்ளடக்கிய, முழுமையான மற்றும் மக்களை மையமாகக் கொண்ட மனித  மூலதனத் திட்டத்தை வடக்கு கோரிடோர் அமலாக்க ஆணையம் (NCIA)தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. உள்நாட்டுத் தொழில் முனைவோரின் ஈடுபாட்டை அதிகரிப்பதன் மூலம் சமூகத்தின் சமூகப் பொருளாதார மேம்பாட்டை இது வலுப்படுத்துகிறது.

பல ஆண்டுகளாக, வடக்கு கோரிடோர் பொருளாதாரப் பகுதியில் (NCER)உள்ள உள்நாட்டு சமூகங்கள்  எதிர்கொள்ளும் நிதிச் சவால்களை  சமாளிப்பதற்கு பல்வேறு முழுமையான மற்றும் ஒருங்கிணைந்த  திட்டங்களை NCIAவடிவமைத்துள்ளது. தற்போதுள்ள சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதன் மூலம் மக்களின் நல்வாழ்வையும் செழுமையையும்  மீட்டெடுப்பதற்கும், கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிந்தைய மீட்சியில் வாழ்வாதார நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கும் இந்தத் திட்டங்கள் முக்கியமானவை.

பெர்லிஸ், கெடா, பினாங்கு மற்றும் பேரா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய  NCER,உயர் வருமானம் கொண்ட வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்ற லட்சியத்திற்கு ஏற்ப,  நாடு முழுவதும் சமமான செல்வப் பங்கீட்டை உறுதி செய்வதற்காக நிறுவப்பட்டது. NCIAஎன்பது NCERஇன் சமூகப் பொருளாதார மேம்பாடு  தொடர்பான  வழிகாட்டுதலை நிறுவுவதற்கும், கொள்கைகள், வியூகங்களை  வகுப்பதற்குமான ஒரு பொறுப்பான சமூக பொருளாதார மேம்பாட்டு ஆணையமாகும்.

இந்தத் திட்டங்கள்  மிகவும் சமநிலையான  சமுதாயத்தை உருவாக்கவும், எதிர்காலத்தில் வறுமையைத் தடுக்கவும், வருமான நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் இளைஞர்கள், பெண்கள், வேலையற்றோர், குறிப்பாக இலக்குக் குழுவில்  உள்ளவர்களை உள்ளடக்கிய வணிகத் துறையை  மேம்படுத்தவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. மக்கள் மற்றும் வணிக சமூகங்கள் மீதான கோவிட்-19  தொற்று நோயின்   தாக்கத்தை நிவர்த்தி செய்ய NCIAஉறுதியான நடவடிக்கைகளை எடுத்து செயல்படுத்தியுள்ளது. 

NCERமனித மூலதன  திட்டங்களும் வள உத்திகளும் இக்கேந்திரத்திற்கு குறிப்பிடத்தக்க உத்வேகத்தை கொண்டு வந்துள்ளன. மேலும், கோவிட்-19 தொற்றுப் பரவலின்போது மக்களின் தினசரி  சுமைகளைக்  குறைக்க உதவியது. மக்கள் மற்றும்  வணிக சமூகத்தால் வரவேற்கப்படும் நடவடிக்கைகளில் ஒன்று, சமூகப் பொருளாதார  மீட்சியை  அதிகரிப்பதற்கும், மக்கள் மற்றும் வணிகங்கள் மீது கோவிட்-19  இன் தாக்கத்தை எதிர்கொள்வதற்கும் உடனடியாகச் செயல்படுத்தப்பட்ட JomKerja@NCERமற்றும் JomNiaga@NCERஆகிய NCIA இன் துரிதத் திட்டங்கள் ஆகும். 

empowerNCER திறன் பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் திட்டங்கள் சமூகங்களின் சமூகப் பொருளாதார நிலைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டவை.  இது வேலை  வாய்ப்புகள் அல்லது மைக்ரோ வணிகங்களைத் தொடங்குவதன் மூலம்  கூடுதல்  வருமான வாய்ப்புகளை வழங்குகிறது. பல்வேறு ஏஜென்சிகள் மற்றும் நிறுவனங்களுடனான  ஒத்துழைப்பின் மூலம், இத்திட்டத்தின் பங்கேற்பாளர்கள் வேலை வாய்ப்புடன் பயிற்சி மற்றும் அதன் தொடர்புடைய சான்றிதழைப் பெறுவார்கள். 

 

இளவரசி சண்முகம்

பேரா, பத்தாங் பாடாங் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் பேக்கரி  பேஸ்ட்ரி பயிற்சியின் பங்கேற்பாளர்.  empowerNCER இல் சேருவதற்கு முன்பு மாதம் வெ.500 மட்டுமே சம்பாதித்தவர், இப்போது வருமானத்தில் 2.4 மடங்கு அதிகமாக சம்பாதிக்கிறார்.

empowerNCERபயிற்சியில் பங்கேற்பதன் பயனாக, அவர் உற்சாகமாக தனது தொழிலை மேற்கொண்டு வருகிறார்.  குறிப்பாக பண்டிகை காலங்களில் பாரம்பரிய கேக்குகளை தயாரிப்பதிலும் ஈடுபட்டார். இப்போது அவரது வருமானம் அதிகரித்துள்ளது, மேலும் அவரது வணிகம் பிரபலமடைந்து வருகிறது.

 

அமுதா சின்னையா

கெடா, கூலிமில் சொந்தமாக பேக்கரி வைத்து நடத்துகிறார் 41 வயது அமுதா. இவர் பி40 பிரிவைச் சேர்ந்தவர். என்.சி.இ.ஆர். மேம்பாட்டுத் திட்டத்தில் பங்கேற்பதற்கு முன்னதாக இரு பிள்ளைகளுக்குத் தாயான இவருக்கு எந்த வருமானமும் கிடையாது. இவரின் கணவர் பினாங்கு, பிறையில் உள்ள ஒரு தொழிற்சாலையில் மேற்பார்வையாளராகப் பணியாற்றுகிறார்.

2021 ஜூலை 30 முதல் இப்போது வரையில் காலேஜ் கம்யூனிட்டியில் பேஸ்ட்ரி மற்றும் ரொட்டி தயாரிக்கும் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். கணவருக்கும் குடும்பத்திற்கும் உதவும் வகையில் கூடுதல் வருமானம் பெற வேண்டும் என்பதே எனது இலக்கு என அமுதா கூறுகிறார்.

 

பூஜா சாமராசி பச்சையப்பன்

எந்த வருமானமும் இல்லாத ஒரு சாதாரண குடும்பப்பெண்ணாக நான் இருந்தேன். ஆனால், இன்று என் கணவரின் பொருளாதாரச் சுமைகளை குறைக்கும் வகையில் நானும் 1,900 வெள்ளி வரையில் வருமானம் பெறுகிறேன் என்று கூறுகிறார் பினாங்கு, செபெராங் பிறை தெங்காவைச் சேர்ந்த பூஜா சாமராசி.

என்.சி.இ.ஆர். பயிற்சித் திட்டங்கள் வாயிலாக முதலில் உறைந்த உணவுப் பொருட்களையும் கெரெப்பேக் போன்றவற்றை விற்றேன். கேட்டரிங் தொழிலையும் செய்தேன். இந்த பயிற்சிகளின் வாயிலாக நான் பெற்ற அறிவாற்றல் மற்றும் அனுபவத்தைக் கொண்டு என் தொழிலை மேலும் மேம்படுத்திக் கொண்டேன். இப்போது இங்குள்ள மக்களுக்கு நான் மிகவும் பிரபலமான ஒரு தொழில் முனைவராக விளங்குகிறேன். இந்தியர்கள் சார்ந்த அமைப்புகளின் ஆதரவும் நிறைய உள்ளது என பூஜா குறிப்பிட்டார்.

 

விக்னேஸ்வரன் குணசேகரன்

பினாங்கு, செபெராங் பிறையைச் சேர்ந்த விக்னேஸ்வரன் மின்கம்பிகள் (இலெக்ட்ரிக் ஒயரிங்) துறையில் சிறப்புப் பயிற்சியைப் பெற்றுள்ளார். என்.சி.இ.ஆர். மேம்பாட்டுத் திட்டத்தில் நான் ஈடுபட்ட காலம் முழுவதும் நிறைய அனுபவங்கள் எனக்கு கிடைத்தன. மின் ஒயரிங் மற்றும் குளிரூட்டி பராமரிப்பு போன்ற வேலைகளில் எனக்கு தனித்திறமை உள்ளது. இதன் வழி அதிகமான வருமானம் பெறவும் இத்திட்டம் எனக்கு உதவியுள்ளது என விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இவ்வாறு பல்வேறு திட்டங்களின் வாயிலாக மலேசிய இந்தியர்கள் பயன்பெறும் வாய்ப்புகளை என்.சி.இ.ஆர். வழங்கியுள்ளது. இதன் மனித மூலதன மேம்பாட்டுத் திட்டங்கள் நமது சமூகத்திற்காக நேர்மறையான நன்மைகளைக் கொண்டு வரும் என்பதில் ஐயமில்லை . இதன் வழி, உயரிய குடும்ப வருமானம், அதிக ஆற்றல் மிகுந்த தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தி ஆற்றல் ஆகியவற்றைப் பெற முடியும்.

 

ஹேமரூபேன் கிருஷ்ண மூர்த்தி

கெடா, பீடோங், சுங்கை லாலாங்கைச் சேர்ந்த ரூபன் (24) பார்வையற்றவர். கோவிட்-19 தொற்றின்போது வேலை இழந்தவர், வீட்டில் பாட்டியின் உதவியுடன் சிறிய அளவில் கேக், ரொட்டி, பிஸ்கட், பேஸ்ட்ரி வியாபாரம் செய்தார். நெருங்கிய நண்பர்களின் உதவியுடன் அவர் தமது தயாரிப்புகளை சந்தைப்படுத்துகிறார். JomNiagaNCERதிட்டத்தில் சேர்ந்த பிறகு, ரூபன் தனது தயாரிப்புகளை விளம்பரப்படுத்த Facebookலைவ் தளத்தை தீவிரமாக பயன்படுத்துகிறார்.

குறிப்பாக தன் மாநிலம் முழுவதிலுமிருந்து பல்வேறு ஆர்டர்களின் வாயிலாக வருமானத்தை 10 மடங்கு அதிகரிக்கச் செய்துள்ளார். தீபாவளி பண்டிகையின்போது 500 ஜார் பிஸ்கட் மற்றும் 60 வகையான கேக்குகளுக்கான ஆர்டர்கள் அவருக்கு கிடைத்தன. இந்த வணிகத்தின் விளைவாக, அவர் தனது பாட்டியை ஆதரிக்கவும், வீட்டில் ஆஸ்ட்ரோ சேவையை நிறுவவும் முடிந்தது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுடன் இணைந்து லேட்டஸ்ட் தயாரிப்பை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளார்.

 

திருமதி சரஸ்வதி

சரஸ்வதி மூர்த்தி கெடா மாநிலம் சுங்கை பட்டாணியைச் சேர்ந்த இல்லத்தரசி. அவர் தனது நான்கு பள்ளி செல்லும் குழந்தைகளை கவனித்து வருகிறார். பிழைப்புக்காக குடும்பத்தை ஆதரிக்கவும், உணவக உதவியாளராக பணிபுரியும் தன் கணவரின் வருமானத்தை ஈடுகட்டவும் அவர் உறுதியாக இருந்தார். empowerNCERதிட்டத்தின் மூலம், சரஸ்வதி, துணிகள், திரைச்சீலைகள் இவற்றைத் தைக்க ஆர்டர்கள் எடுத்து தனது சொந்த தொழிலைத் தொடங்குவதற்குத் தேவையான ஊக்கத்தையும் வழிகாட்டுதலையும் பெற்றார். இவரின் ஆர்டர்கள் பயிற்சிக்குப் பிறகு, குறிப்பாக பண்டிகைக் காலங்களில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளன. இப்போது, அவர் தன் கணவருக்கு உதவ கூடுதல் வருமானத்தை ஈட்டுகிறார், மேலும் தன் குழந்தைகளின் கல்வியை ஆதரிக்க முடிகிறது!

empowerNCER- கல்வித் திட்டம், கல்விச் சாதனைகளை வலுப்படுத்தவும், மாணவர்களின் ஆளுமையை வலுப்படுத்தவும், முழுமையான வளர்ச்சியை நோக்கிய ஒரு நடவடிக்கையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.  மலேசிய கல்வி அமைச்சின் முழு ஆதரவைப் பெற்றுள்ள இந்தத் திட்டம், கடந்த 2020 SPMதேர்வில் 97% தேர்ச்சி மற்றும் 82% உயர்கல்வியை மேற்கொள்வதற்கு B40 குடும்ப மாணவர்கள் சிறந்த தேர்வு முடிவுகளை அடைய உதவுவதில் வெற்றி பெற்றுள்ளது.

2021 ஆம் ஆண்டில், 900 பூர்வகுடி மாணவர்கள் உட்பட 6,000 பங்கேற்பாளர்களுக்காக 30 மாவட்டங்களில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

 

சரவணன் அசோகன்

பேராக், கோலகங்சார், SMKதோக் மூடா அஜிஸைச் சேர்ந்த SPM2021 மாணவர் சரவணன், empowerNCER & Academicதிட்டம் சிறந்த ஒன்றாகும் என்றார். அவர்கள் எங்களுக்கு பாடக் கூறுகள், வீடியோ மற்றும் வழிகாட்டுதல் மற்றும் டேப்லெட்டை வழங்கினர். இது  நெகிழ்வான கற்றலுக்கு அனுமதித்தது.

 

குமரவேலன் ரமேஷ்

பேரா, கிரியான் மாவட்ட முசாபார் ஷா தேசிய இடைநிலைப்பள்ளியின் 5 ஆம் ஆண்டு முன்னாள் மாணவர். ஆலாங் இஸ்கண்டார் தேசிய இடைநிலைப் பள்ளியில் 6 ஆம் படிவம் தொடர்வதே எனது லட்சியமாகும்.

என்.சி.இ.ஆர். மற்றும் ஐ.யு.கே.எல். (Infrastructure University Kuala Lumpur)ஆகியவற்றுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். என்.சி.இ.ஆர். கல்வித் திட்டத்தில் என்னை சேர்த்துக் கொண்டதே இதற்கு காரணமாகும். குறிப்பாக, கூடுதல் வகுப்புடன் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் முறைகளை எனக்கு கற்றுக்கொடுத்தார்கள். இத்திட்டம் கடந்த 2020 இல் எஸ்.பி.எம். தேர்வில் நான் சிறப்புத் தேர்ச்சியைப் பெறுவதற்கு பெருமளவு உதவியது.

 

சியாமளா சுந்தரேசன்

பேரா, லாருட் மாத்தாங் -செலாமா மாவட்டத்தில் உள்ள லாடாங் பாஞ்சாங் தேசிய இடைநிலைப் பள்ளியின் 5 ஆம் படிவ முன்னாள் மாணவி. பாலிக் புலாவ் போலிடெக்னிக் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பத் துறையில் டிப்ளோமா பெறுவதே எனது குறிக்கோள். என்னை இத்திட்டத்தில் இணைத்துக் கொண்ட என்.சி.இ.ஆர். மற்றும் ஐ.யு.கே.எல். ஆகியவற்றுக்கு நன்றி கூறுகிறேன். அப்பள்ளியில் நடைபெற்ற என்.சி.இ.ஆர். மேம்பாட்டுத் திட்டத்தில் பங்கேற்றதன் வழி நான் டிப்ளோமா கல்வியை மேற்கொள்ள வாய்ப்புக் கிடைத்தது.

 

கங்கேஸ்வரி முருகன்

பினாங்கு, செபெராங் பிறை, உத்தாரா மாவட்டத்தில் உள்ள பொக்கோ செனா தேசிய இடைநிலைப் பள்ளியின் முன்னாள் 5 ஆம் படிவ மாணவர். மலாக்காவில் உள்ள ஆசிரியர் கல்விக் கழகத்தில் தொழில்நுட்பக் கல்வி கற்பதே இவரின் லட்சியமாகும். இத்திட்டம் மாணவர்களுக்கு வசதியை மட்டும் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. மாறாக என் கல்விக்கும் எதிர்கால திட்டத்திற்கும் இது மிகவும் உதவி புரிந்தது. எஸ்.பி.எம். சோதனையில் இவை உறுதுணையாக இருந்தன. அதில் சிறப்புத் தேர்ச்சி பெற்றதும் நான் ஆசிரியராவதற்குத் தேவையான கல்வி உள்ளிட்ட ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்வதற்கான ஆர்வத்தையும் ஊக்கத்தையும் தந்தனர்.

2020 ஆம் ஆண்டில் NCIAசாதனைகள் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும் வணிக சமூகங்களுக்கு நிலையான பொருளாதார நடவடிக்கைகளை வழங்குவதற்கும் எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு சான்றாகும். உடனடி சமூகப் பொருளாதார மீட்பு முயற்சிகள் மக்களுக்கு சாதகமான தாக்கத்தை அளிக்கின்றன மேலும் அவை கூட்டாட்சி மற்றும் மாநில மீட்பு முயற்சிகளுடன் இணைந்துள்ளன.

இன்றுவரை, 1,741 மலேசிய இந்தியர்கள் இந்த மனித மூலதனத் திட்டங்களால் பயனடைந்துள்ளனர். NCERஇல் வசிக்கும் தகுதியுள்ள மலேசியர்கள் இந்தத் திட்டங்களில் சேரவும், தொழில் முனைவோர் மற்றும் தொழில் துறை மேம்பாட்டிற்கான அத்தியாவசியத் திறன்களுடன் தங்களைத் தயார்படுத்திக்கொள்ளவும் அழைக்கப்படுகிறார்கள்.

NCIA மனித மூலதனத் திட்டங்கள் பற்றிய கூடுதல் தகவலுக்கு, தயவு செய்து NCIAஇணையதளமான www.ncer.com.my பார்வையிடவும் அல்லது உங்களுக்கு அருகிலுள்ள ஏதேனும் empowerNCER மையத்திற்கு வருகை புரியவும்.

 

 

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img