img
img

விலைக் கட்டுப்பாடா? கட்டுப்படுத்தப்பட்ட விலைகளா? பெருநாள் காலங்களில் அதிகப்பட்ச விலை அவசியமா?
புதன் 27 அக்டோபர் 2021 15:31:37

img

 விலைக் கட்டுப்பாடா? கட்டுப்படுத்தப்பட்ட விலைகளா? பெருநாள் காலங்களில் அதிகப்பட்ச விலை அவசியமா?

 மலேசியாவில் கொண்டாடப்படும் ஒவ்வொரு பெருநாளின் போதும், பெருநாளுக்கான அதிகப்பட்ச விலை (SHMMP) நிச்சயமாக அறிவிக்கப்படும். கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களின் விலை (SHMMP) பட்டியலிடப்படும். அப்பெருநாளுக்கான அதிகப்பட்ச விலையும் அதன் அமலாக்கத் தேதியும் அறிவிக்கப்படும்.

மேற்குறிப்பிட்ட பட்டியலில் எந்த பொருட்கள் உள்ளடங்கி யுள்ளன என்பதோடு, அப்பொருட்களின் அதிகப்பட்ச விலையை அறிந்து கொள்ள பயனீட்டாளர்களும் வியாபாரிகளும் மிகவும் ஆவலுடன் காத்திருப்பர். இதில் பயனீட்டாளர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கலாம், ஆனால், வியாபாரிகளுக்கு அந்த மகிழ்ச்சி இருக்காது. எத்தனை பொருட்கள் கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களாக அறிவிக்கப்படவுள்ளன. அது எத்தனை நாட்களுக்கு அமலில் இருக்கும் என அரசியல் தலைவர்கள் குறிப்பாக எதிர்க்கட்சி தலைவர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருப்பர்.

பயனீட்டாளர்களும் வியாபாரிகளும் பல்வேறு பிரச்சினை களுக்கு ஆளாகாமல் இருப்பதற்கு, இவ்விவகாரத்திற்கு விரிவான முறையில் உடனடி தீர்வு காண வேண்டும் என அரசாங்கம் விரும்புகிறது. கடந்த 2010ஆம் ஆண்டின் புள்ளிவிவரப்படி, ஒவ்வொரு பெருநாள் காலத்தின்போதும் (SHMMP) திட்டத்தின் கீழ் அதிகப் பட்சமாக 32 பொருட்கள் அடங்கியிருக்கும்.இதில் 2021ஆம் ஆண்டு நோன்புப் பெருநாளும் அடங்கும். 2021ஆம் ஆண்டிலும் 2019ஆம் ஆண்டிலும் அந்த விலை கட்டுப்பாடு 30 நாட்கள் வரை நீட்டிக்கப்பட்டது.

பல்வேறு தரப்பினரை உள்ளடக்கிய வியாபாரிகள், பயனீட்டாளர்கள் என 1,074 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வின்போது, திட்டம் தொடரப்படும்போது, அடிப்படை தேவைக்கு பயன்படுத்தப்படும் பொருட்களின் எண்ணிக்கையை சிறியதாக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. பயனீட்டாளர்களும் வியாபாரிகளும் உண்மையிலேயே விலை கட்டுப்பாடு இருக்க வேண்டும். மாறாக, கட்டுப்படுத் தப்பட்ட விலைகளாக இருக்கக் கூடாது என்றே விரும்புகின்றனர்.

விலை கட்டுப்பாட்டு என்பது குறிப்பிட்ட பொருட்களின் விலையை நிர்ணயிப்பதாகும். இதனை அனைத்து வியாபாரி களும் அவசியம் கடைப்பிடிக்க வேண்டும். இதன்வழி பயனீட்டாளர்களுக்கு நிலையாக பொருட்கள் கிடைப்பதற்கும் வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு விலையை உயர்த்துவது தடுத்து நிறுத்தப்படும் வேளையில், இது பயனீட்டாளர்களுக்கு நன்மையை ஏற்படுத்திக் கொடுக்கும். சில கடைக்காரரர்கள் இதற்கு முன்பு அதிகப்பட்ச விலைக்கும் குறைவாக பொருட்களை விற்பனை செய்து வந்த வேளையில், சிலர் அவற்றை இன்னும் அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதும் சில பயனீட்டாளர்களுக்குத் தெரியாது. ஏன் இருக்கக் கூடாது? அதிகப்பட்ச விலை என்பது சட்டப்படி நிர்ணயிக்கப் பட்ட விலையாகும்.

எல்லா வியாபாரிகளும் பொருட்களை அதிகப்பட்ச விலைக்கு குறைக்கும் - உயர்த்தும் நேரத்தில், பயனீட்டாளர்களுக்கு வேறு வழியில்லை. அது பின்னர் அவர்களே விலையை நிர்ணயிப் பபதாக மாறி விடும். விலை கட்டுப்பாடு என்பது பயனீட்டாளர், வியாபாரிகளின் நலன் கருதி குறிப்பிட்ட ஒரு பொருள் கட்டுப்படுத்தப்பட்ட  பொருளாக விற்பனை செய்யப்படும். பயனீட்டாளர்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப பொருட்களை வாங்கும் வகையில் அவை நியாயமான விலையில் விற்பனை செய்யப்படுவதை மொத்த விற்பனையாளர்களும் சில்லறை வியாபாரிகளும் உறுதிப்படுத்த வேண்டும்.

தேவைகளுக்கும் சந்தைக்கும் ஏற்ப விலையை நிர்ணயிப் பதே ஆரோக்கியமான சுயேச்சை சந்தையாகும். அறிவுசார்ந்த பயனீட்டாளர்கள் சொந்தமாக மாற்றுப் பொருளைத் தேர்வு செய்து கொள்வர். வழக்கத்திற்கு மாறான நிலையில், முக்கியப் பொருட்கள் குறைந்தாலோ, அதிக லாபம் ஈட்ட முயன்றாலோ, வியாபாரிகள் பொருட்களை ஒளித்து வைத்தாலோ அரசாங்கம் 2011ஆம் ஆண்டு விலை கட்டுப்பாடு, அதிக லாப ஈட்டுக்கு எதிரான சட்டம், 1961ஆம் ஆண்டு விநியோகக் கட்டுப்பாடு சட்டம், 2010ஆம் ஆண்டு போட்டியிடும் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

மலேசிய குடும்பமாக விளங்கும் நாம் நாட்டிற்கு நல்லதையே  சிந்திப்பதற்கான நேரம் வந்துவிட்டது. நாட்டில் பொருட்கள் விலையையும் பொருள் விலையையும் நிலைநிறுத்த சந்தையில் ஆரோக்கியமான முறையில் பொருட்களை வாங்க இந்த கோவிட் தொற்று காலம் வழிவகுக்கும்.

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img