img
img

2020ஆம் ஆண்டிற்கான கல்வி தவணை மார்ச் மாதம் முதல் தொடங்கப்படும்
செவ்வாய் 14 செப்டம்பர் 2021 12:31:00

img

2020ஆம் ஆண்டிற்கான கல்வி தவணை மார்ச் மாதம் முதல் தொடங்கப்படும். 2022ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்கள் மாணவர்கள் 2021ஆம் ஆண்டில் பயின்ற வகுப்பிலேயே இருப்பார்கள்.

1. 2020ஆம் ஆண்டிற்கான கல்வி தவணை மார்ச் மாதம் முதல் தொடங்கப்படும். 2022ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்கள் மாணவர்கள் 2021ஆம் ஆண்டில் பயின்ற வகுப்பிலேயே இருப்பார்கள்.

2. இல்லயிருப்பு கல்வி முறையில் பின்தங்கிய மாணவர்கள் அடுத்தகட்ட நிலைக்கு முன்னேறுவதற்கு தங்களை தயார் படுத்திக் கொள்வதற்காக இந்த இரு மாதங்களில் அவர்களுக்கு பிரத்தியேக பயிற்சிகள் வழங்கப்படும்.

3. 2021ஆம் ஆண்டிற்கான பள்ளி விடுமுறை டிசம்பர் 10 முதல் 31ஆம் தேதி வரை வழங்கப்படும்.

4. தேசிய மீட்சித் திட்டம் பிரிவு 1 மற்றும் 2இன் கீழ் உள்ள மாநிலங்களிலுள்ள பள்ளிகள் திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டது. பிரிவு 3 மற்றும் 4இன் கீழ் உள்ள மாநிலங்களிலுள்ள பள்ளிகள் திட்டமிட்டபடி அக்டோபர் 3ஆம் தேதியில் திறக்கப்படும்.

5. நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின்போது பள்ளிகள் தேசிய மீட்சித் திட்டத்தின் பிரிவுகளின் அடிப்படையில் தொடங்கப்படுவதை தொடர்ந்து மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு அனைத்து மாணவர்களும் முகக்கவரி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

6. பி40 பிரிவைச் சேர்ந்த பெற்றோர்களின் சுமையை குறைக்கும் வகையில் ஏழ்மை சூழ்நிலையிலுள்ள மாணவர்களுக்கு பள்ளிகளில் முகக்கவரி வழங்கும் முயற்சியை கல்வி அமைச்சு முன்னெடுத்துள்ளது.

7. பள்ளிகளுக்கு வரும்போதும் பள்ளி முடிந்து வெளியாகும்போதும் மாணவர்கள் மத்தியில் நெரிசல் ஏற்படுவதால் இதற்கு முன்பு கூறப்பட்ட கூற்றை கருத்தில் கொண்டு கல்வி அமைச்சு இம்முறை ஒரு பள்ளியில் 50 விழுக்காடு மாணவர்கள் மட்டுமே வரும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

உதாரணத்திற்கு இரண்டாம் ஆண்டு வகுப்பில் 36 மாணவர்கள் இருக்கும் வேளையில் அந்த மாணவர்கள் 18 பேர்களாக இரு குழுவாகப் பிரிக்கப்படுவர். முதல் வாரம் குழு 1 பள்ளிக்கு வரும் வேளையில் குழு 2 வீட்டில் இருந்தபடி பாடத்தை பயில்வார்கள். அடுத்த வாரம் குழு 2 வகுப்பறையில் கல்வி கற்கும் வேளையில் குழு 1 இல்லயிருப்பு முறையில் கல்விகற்பார்கள்.

8. ஓய்வு நேரங்களில் மாணவர்கள் வகுப்பறையிலேயே உணவு சாப்பிட வேண்டும். வகுப்பறையில் காற்றோட்டம் சீராக இருப்பதை பள்ளி ஆசிரியர்கள் உறுதிப்படுத்த வேண்டுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

 

 

 

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img