img
img

கடனுதவிக்கு கைகொடுக்கும் பி.டி.பி.டி.என் பரிவுமிக்கத்திட்டம்
செவ்வாய் 14 செப்டம்பர் 2021 12:26:23

img

கோலாலம்பூர், செப். 14-

2020ஆம் ஆண்டிலிருந்து கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பு மக்களின் அன்றாட வாழ்க்கை முறையினை மாற்றியுள்ளது. மின்னியல் வர்த்தக வழிமுறை மூலமாக இணையத்தளத்தின் வழி பொருட்களை கொள்முதல் செய்வதும் சேவையினை பெறுவதும் சமுதாயத்தின் தேர்வாக அமைந்துள்ளது.

இச்சேவையானது உணவுப் பொருட்களை  பெறுவதையும் உள்ளடக்கும். இணையத்தளத்தின் வழியான வர்த்தகத்திற்கு இது நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கால மாறுதல்களுக்கு ஏற்ப பி.டி.பி.டி.என் எப்போதுமே செயல்பட்டு வருகிறது. Program PTPTN Prihatin என்ற பரிவுமிக்க உதவித் திட்டத்தின் வழி இக்கல்வி கடனுதவிக் கழகம்  FGV Agro Fresh Technology Sdn. Bhd என்ற நிறுவனத்துடன் ஒத்துழைப்பினை அணுக்கமாக்கி உள்ளது. இணையத்தளத்தின் வழி வர்த்தகம் செய்யும் வசதியற்றவர்களுக்கு உதவுவது இதன் நோக்கமாகும்.  FGV Agro Fresh Technology நிறுவனம் என்பது  FGV Holdings Berhadடின் துணை நிறுவனமாகும். Gogopasar அடையாள தளத்தின் வழியும் இணையத்தளத்தின் வழியும் அன்றாட அத்தியாவசிய பொருட்களின் வர்த்தகத்தை இது கையாளுகிறது.  www.gogopasar.com என்ற அகப்பக்கத்தின் வழி கோழி, இறைச்சி, காய்கறிகள், மீன் மற்றும் அன்றாட அத்தியாவசியப் பொருட்களை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம்.

வசதியற்ற பிரிவில் உள்ளவர்கள் தொழில் முனைவர்களாக வருவதற்கு கடனுதவி பெறுவதற்கு இத்தகைய ஒத்துழைப்பு உதவியாக இருக்கும். வசதியற்ற பிரிவில் உள்ள 20  பி.டி.பி.டி.என்   கடன் பெற்றவர்களுக்கு பி.டி.பி.டி.என் ஒரு லட்சம் வெள்ளி வழங்கியுள்ளது. FGV Agro Fresh Technology நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் வர்த்தகத்தை வசதியற்றவர்கள் தொடங்குவதற்கு இது ஒரு முதலீடாக விளங்கும். ஒவ்வொரு பி.டி.பி.டி.என் கடனாளியும் ஒவ்வொரு Gogoprenuer திட்டத்திற்கு 5,000 வெள்ளி பெறுவர். இத்திட்டத்தில் பங்கேற்க ஆர்வம் காட்டும் கடனாளிகள் FGV Agro Fresh Technology என்ற நிறுவனம் அறிவித்த வழிமுறை வாயிலாக தங்களை பதிந்து கொள்ளலாம்.

FGV Agro Fresh Technology நிறுவனத்திற்கு பி.டி.பி.டி.என் பங்களிப்பு  வழங்கும் வைபவம் கடந்த ஆகஸ்டு மாதம் 30ஆம் தேதியன்று நடைபெற்றது. மாதிரி காசோலையின் மதிப்பு ஒரு லட்சம் வெள்ளி. FGV Agro Fresh Technology நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி புவான் ஹஸ்லிண்டா அலியாசிடம் பி.டி.பி.டி.என் தலைவர் டத்தோ வான் சைபுல் வான் ஜான் வழங்கினார். இந்த பங்களிப்பு வழங்கும் வைபவத்தின்போது பி.டி.பி.டி.என் தலைமை செயல்முறை அதிகாரி அகமட் டசுக்கி அப்துல் மஜிட் உடன் இருந்தார்.

கோவிட்-19 பாதிப்புகளை எதிர்நோக்கியிருக்கும் இக்காலகட்டத்தில் பி.டி.பி.டி.என் கடனாளிகளுக்கு பொருளாதாரத்துறையில் தொடர்ந்து முன்னேறுவதற்கு இதுபோன்ற ஒத்துழைப்பு தக்க வாய்ப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலக்கவியல் தளத்தின் மூலமாக இணையத்தளத்தின் வழி கொள்முதல் மேற்கொள்வதற்கான சமுதாயத்தின் ஆதரவினை இது விரிவாக்கம் செய்கிறது.

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img