img
img

மரணமடைந்த பாதுகாவலர் தேவசகாயத்தின் மனைவிக்கு சொக்சோவின் மாதாந்திர ஓய்வூதியம்!
சனி 04 செப்டம்பர் 2021 14:46:08

img

 ஈப்போ, செப். 4-

மரணமடைந்த பாதுகாவலர் எஸ். தேவசகாயத்தின் மனைவிக்கு சொக்சோவின் மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படும் என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் கூறினார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இங்குள்ள சொகுசு அடுக்குமாடி ஒன்றில் பணியிலிருந்தபோது அங்குள்ள குடியிருப்பாளரால் தாக்கப்பட்டு மரணமடைந்த எஸ். தேவசகாயத்தின் மனைவி பிலோமினா எட்வர்ட்டை (வயது 59) ஈப்போ தாமான் புந்தோங் ரியாவிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்த பிறகு அவர் மேற்கண்டவாறு கூறினார். கணவரின் இழப்பால் துயரத்திலிருக்கும் பிலோமினாவைச் சந்தித்து  ஆறுதல் கூறினேன் இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்டவருக்கு  உரிய தண்டனை வழங்கப்படும் என்று நம்புகிறேன் என்றும் டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்தார். சொக்சோ வழங்கும் மாதாந்திர ஓய்வூதியம் தனித்துவாழும் அவரின் சுமையைக் குறைப்பதோடு தொடர்ந்து அவரின் வாழ்வாதாரத்திற்கும் உதவியாக இருக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். தவிர, இந்நாட்டிலுள்ள சில நிறுவனங்கள் தங்களின் பணியாளர்களுக்குச் சொக்சோ சந்தா செலுத்துவதில் மெத்தனப் போக்கினைக் கடைப்பிடித்து வருவது வருத்தமளிக்கிறது.

பணியாளர்களுக்கு எதிர்பாராமல் ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு சொக்கோ வழங்கும் உதவிநிதி பெரும் பயனாக இருக்கும் என்பதை நிறுவனங்களின் உரிமையாளர்கள் உணர்ந்து கொண்டு செயல்பட வேண்டும். இதன் தொடர்பில், எல்லா நிறுவனங்களிலும் சோதனைகள் மேற்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபடுமாறு சொக்சோ மற்றும் ஆள்பலத் துறையின் அமலாக்க அதிகாரிகளைத் தான் பணிக்கவுள்ளதாகவும் டத்தோஸ்ரீ சரவணன் கூறினார். விதிமுறைகளை மீறும் நிறுவன உரிமையாளர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சொக்சோ நிறுவனத்தின் சார்பில் தேவசகாயம் மருத்துவமனையில் இருந்த காலத்திற்கான மருத்துவ உதவிநிதியாக வெ. 12,737.32, பிரேத அடக்கச் செலவுக்காக வெ. 2,000 மற்றும் மாதாந்திர ஓய்வூதியத் தொகையான வெ. 1,143. 90 ஆகியவற்றிற்கான காசோலைகளையும் பிலோமினாவிடம் டத்தோஸ்ரீ சரவணன் வழங்கினார்.

சொக்சோ நிறுவனத்தின் தலைமை அதிகாரி டத்தோஸ்ரீ டாக்டர் முகமட் அஸ்மான், தொடர்புத்துறை தலைமை அதிகாரி இசாட் ஹாஜி ரயா, பேரா மாநில சொக்சோ அலுவலகத்தின் இயக்குநர் அந்தோணி அருள்தாஸ், பேரா மந்திரி புசாரின் இந்திய விவகார சிறப்பு அதிகாரி டத்தோ வ. இளங்கோ, ஈப்போ பாராட் தொகுதி ம.இ.கா. தலைவர் எஸ். ஜெயகோபி ஆகியோரும் உடனிருந்தனர்.

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img