திங்கள் 09, டிசம்பர் 2024  
img
img

பி.டி.பி.டி.என். புதிய திட்டம் அறிமுகம் சிம்பானான் எஸ்.எஸ்.பி.என். பிளஸ்
சனி 04 செப்டம்பர் 2021 14:43:34

img

 கோலாலம்பூர், செப். 4-

சிறுகச் சிறுக சேமிக்கும் பழக்கம் பெரும்பாலான மலேசியர்கள் மத்தியில் காலம் காலமாக இருந்து வந்துள்ள போதிலும் பிள்ளைகளின் கல்விக்கான சேமிப்பில் ஒரு புதிய பரிணாமத்தை உருவாக்கி வருகிறது தேசிய கல்வி நிதிக்கழகமான பி.டி.பி.டி.என்.

கல்விக்காக கடன் வாங்குவதையே அதிகம் சார்ந்திராமல் தங்கள் பிள்ளைகளின் உயர் கல்விக்காக அவர்களின் சிறுவயது முதல் சேமிக்கும் வகையில் பெற்றோர்களை ஊக்குவிப்பதில் பி.டி.பி.டி.என். எப்போதும் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயலாற்றி வந்துள்ளது. மலேசியாவில் கல்வி சேமிப்புக்கான முதன்மை திட்டமாக எஸ்.எஸ்.பி.என். விளங்குவதை சாத்தியமாக்கும் பொருட்டு 2021-2025 பி.டி.பி.டி.என். வியூகத்திட்டத்திற்கு ஏற்ப இது அமைந்துள்ளது என்று அதன் தலைமை நிர்வாகி அஹ்மட் டாசுக்கி அப்துல் மாஜிட் கூறுகிறார்.

நாட்டின் முதன்மை உயர்கல்வி நிதிக்கழகமாக பி.டி.பி.டி.என். தொடர்ந்து நிலைநிறுத்தப்படுவதை உறுதி செய்வதற்கு எஸ்.எஸ்.பி.என். பிளஸ் எனும் புதிய சேமிப்புத் திட்டம் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. பி.டி.பி.டி.என். முகநூல், யூ-டியூப் ஆகியவற்றின் வழி இயங்கலை வாயிலாக இது அதிகாரப்பூர்வ வெளியீடு கண்டது. எஸ்.எஸ்.பி,என். பிளஸ் என்பது ஏற்கெனவே அறிமுகமான எஸ்.எஸ்.பி.என்-ஐ பிளஸ் திட்டத்தின் ஒரு தொடர்ச்சியாகும். முதலீட்டாளர்களுக்கான பல்வேறு சிறப்பு அம்சங்கள், நன்மைகள் வழி இது ஒரு புதிய தோற்றத்தை பெற்றுள்ளது என்று அஹ்மட் டாசுக்கி தெரிவித்தார்.

எனினும், ஹொங் லியோங் எம்.எஸ்.ஐ.ஜி. தக்காஃபுல் பெர்ஹாட், கிரேட் ஈஸ்ட்டர்ன் தக்காஃபுல் பெர்ஹாட், தக்காஃபுல் இக்லாஸ் ஃபேமிலி பெர்ஹாட் ஆகிய மூன்று நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் எஸ்.எஸ்.பி.என். பிளஸ் சேமிப்பு பல்வேறு தேர்வுகள் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படுகிறது. எஸ்.எஸ்.பி.என். பிளஸ் சேமிப்பை பொறுத்த வரையில் தக்காஃபுல் பாதுகாப்புடன் கல்வி சேமிப்பை இணைப்பதால் மிகவும் பிரத்தியேகமான ஒன்றாக இதனை விளங்கச்செய்கிறது. சந்தையில் உள்ள மற்ற கல்வி சேமிப்புகளுடன் ஒப்பிடுகையில் இது ஒரு சிறந்த சேமிப்புத் திட்டம் என்பதையும் உணர முடிகிறது.

மலேசிய சமூகத்தினரிடையே ஒவ்வொரு குடும்பத்திலும் பெரும் வசதியுள்ள ஆறு அம்ச வாய்ப்புகளை இது வழங்குகிறது. அவற்றில் ஒன்றுதான் ஒரு முதலீட்டாளர் பெறக்கூடிய 12 லட்சம் வெள்ளி வரைக்குமான தக்காஃபுல் பாதுகாப்பாகும். மேலும், தீவிர நோய்களுக்கு வெ.200,000 வரைக்குமான தொகை, இறந்தவர் உடலை திருப்பி அனுப்புவதற்கான வெ.10,000 வரைக்குமான நிதி உதவி, விபத்து காரணமாக பெறப்படும் வெளிநோயாளி சிகிச்சைக்கு வெ.3,000 வரையிலான உதவி மற்றும் ஒரு முதலீட்டாளரின் 69 வயது வரைக்குமான பாதுகாப்பு ஆகியன அவற்றுள் அடங்கும்.

முதலீட்டாளர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள பல்வேறு சிறப்பம்சங்கள் எஸ்.எஸ்.பி.என். பிளஸ் திட்டத்திலும் நிலைநிறுத்தப்படும். லாப ஈவு, வெ.8,000 வரைக்குமான வரி விலக்கு, ஷாரியா விதிமுறைகளுக்கு ஏற்ப, அரசாங்க உத்தரவாதம் பெற்ற ஒரு சேமிப்பு ஆகியன பட்டியலில் அடங்கும். நடப்பில் உள்ள 690,000 க்கும் மேலான எஸ்.எஸ்.பி.என்.-ஐ பிளஸ் முதலீட்டாளர்களும் இதே போன்ற சலுகைகளைப் பெறுவார்கள் என்று அவர் குறிப்பிட்டார். இந்த எஸ்.எஸ்.பி.என். பிளஸ் திட்டத்தின் அறிமுகத்தை முன்னிட்டு, எஸ்.எஸ்.பி.என்.-ஐ திட்டத்திற்கும் புதிய தோற்றம் அளிக்கப்பட்டுள்ளது. புதிய முத்திரை மற்றும் அத்திட்டத்தின் பெயரும் எஸ்.எஸ்.பி.என். பிரைம் சேமிப்பு என்று பெயர் மாற்றம் கண்டுள்ளது. அதன் சிறப்புகளும் நன்மைகளும் தொடர்ந்து அதே நிலையில் வழங்கப்பட்டு வரும்.

இந்த உருமாற்றத்தின் வழி இனி பி.டி.பி.டி.என். சேமிப்புத் திட்டங்கள் * எஸ்.எஸ்.பி.என்.-ஐ பிளஸ் (SSPN-i Plus)  என்பது எஸ்.எஸ்.பி.என். பிளஸ் சேமிப்பு (Simpanan SSPN Plus) என்றும் * எஸ்.எஸ்.பி.என்-ஐ (SSPN-i) திட்டம் எஸ்.எஸ்.பி.என். பிரைம் சேமிப்பு (Simpanan SSPN Prime) என்றும் அடையாளம் காணப்படும். இந்த மாற்றங்களின் வழி உயர் கல்வி சேமிப்புக்கான முதன்மை தேர்வாக இவை நிலைநாட்டப்படுவதுடன், மக்கள் நம்பிக்கையும் வலுவடையும் என்று அஹ்மட் டாசுக்கி மேலும் கூறினார்.  எஸ்.எஸ்.பி.என். பிளஸ் சேமிப்பு எனும் இன்றைய புதிய திட்டத்தின் அறிமுகம் காலத்திற்கு ஏற்ற ஒன்று என்பதுடன், ஓர் ஆக்ககரமான வகையில் சேமிப்பு நிதியை நிர்வகிப்பதற்கு பி.டி.பி.டி.என். வியூகத் திட்டத்திற்கு ஏற்ப அமைந்துள்ளது எனவும் அவர் சொன்னார்.

மலேசியர்களிடையே சேமிப்பை ஊக்குவிக்கும் ஒரு நடவடிக்கையாக பரிசுகளையும் பி.டி.பி.டி.என். வழங்கி வருகிறது. இன்றைய புதிய திட்டத்தின் அறிமுகத்தை முன்னிட்டு Cabutan WOW! Simpan SSPN Plus 2021 எனும் சிறப்பு குலுக்கலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 221 வெற்றியாளர்களுக்கு வெ.320,000 மதிப்புள்ள பரிசுகள் காத்திருக்கின்றன. செப்டம்பர் முதல் தேதியிலிருந்து வரும் டிசம்பர் (2021) 31 ஆம் தேதி வரையில் இப்பரிசுத் திட்டம் அமலில் இருக்கும்.

படவிளக்கம்:

இயங்கலை வாயிலான அறிமுக நிகழ்ச்சியில் உரையாற்றிய அஹ்மட் டாசுக்கி அப்துல் மாஜிட்.    

 

 

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img