கோலாலம்பூர், ஆக. 31-
தொழிலாளர் சமூகப் பாதுகாப்பு அல்லது சொக்சோ வாரியத்தின் ஏற்பாட்டில் 2021 ஆம் ஆண்டுக்கான அனைத்துலக பொது வேலை வாய்ப்பு ஆய்வரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அதன் தலைமை நிர்வாகி டத்தோஸ்ரீ டாக்டர் முகமட் அஸ்மான் பின் டத்தோ அஜிஸ் முகமட் விளக்கம் தருகிறார்.
வேலை வாய்ப்புச் சந்தை மற்றும் பொது வேலை வாய்ப்புகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிப்பது இந்த ஆய்வரங்கத்தின் முக்கிய நோக்கமாகும். வேப்ஸ் அல்லது உலக பொது வேலை வாய்ப்புச் சேவைகள் சங்கத்தில் சொக்சோ வாரியம் கடந்த 2018 இல் உறுப்பியம் பெற்றதை அடுத்து ஏற்பாடு செய்யப்படும் முதல் ஆய்வரங்கம் இதுவாகும் என அவர் கூறினார். வரும் செப்டம்பர் 6 தொடங்கி 9 ஆம் தேதி வரையில் நான்கு தினங்களுக்கு இது இயங்கலை (இணையம்) வாயிலாக நடைபெறும். இந்த மூன்று நாட்களிலும் செப்டம்பர் 6, 7 ஆம் தேதிகளில் வேலைக்குத் திரும்புதல் மீதிலான ஆய்வரங்கம்; செப்டம்பர் 7, 8 ஆம் தேதிகளில் அனைத்துலக பொது வேலை வாய்ப்புச் சேவைகள் மீதிலான ஆய்வரங்கம்; செப்டம்பர் 7 முதல் 9 ஆம் தேதி வரையில் மை ஃபியூச்சர் ஜோப் (MYFutureJobs) வேலை வாய்ப்புக் கண்காட்சியும் நடைபெறும்.
மலேசியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட ஆய்வுக் குழுவினர் இந்த ஆய்வரங்கத்தில் பங்கேற்பார்கள். கோவிட்-19 தொற்றுப் பரவல் உலக நாடுகளை ஆட்கொண்டிருக்கும் இவ்வேளையில் வேலை வாய்ப்புச் சந்தை, வணிகர்கள், மனித வாழ்க்கையில் நிலவும் பிரச்சினைகள் குறித்த விவாதம், விளக்கம் தருவதுடன் தங்கள் அனுபவங்களையும் உண்மை நிலவரத்தையும் அவர்கள் பகிர்ந்து கொள்வார்கள் என டாக்டர் முகமட் அஸ்மான் தெரிவித்தார். சொக்சோ வாரியத்தின் பொன்விழாவை (50 ஆண்டு) முன்னிட்டு இந்த ஆய்வரங்கம் ஏற்பாடு செய்யப்படுவதால் மிகவும் அர்த்தமுள்ள ஒன்றாக இது அமைகிறது. முற்றிலும் இலவசமாக நடத்தப்படும் இதில் ஆர்வம் உள்ள பொதுமக்களும் கலந்து கொள்ளலாம்.https://perkeso.gov.my/ipef என்ற அகப்பக்கத்தின் வாயிலாக தங்களை பதிந்து கொள்ள வேண்டும். மேலும் 1-300-22-8000 என்ற தொலைபேசி எண் வாயிலாகவும் விவரம் பெறலாம்.
இந்த ஆய்வரங்கத்தின் இலக்கும் நோக்கமும் என்ன? கோவிட்-19 தொற்றுப் பரவலால் சிரமங்களை எதிர்நோக்கியிருக்கும் முதலாளிகள், தொழிலாளர்கள், வேலை தேடுவோர் ஆகியோருக்கு இதன் வழி உதவ முடியும் என டாக்டர் முகமட் அஸ்மான் குறிப்பிடுகிறார்.
வேலைக்குத் திரும்புவோம் என்பது மீதிலான ஆய்வரங்கமானது வேலை இழப்பினால் ஏற்படும் சவால்களை சமாளிப்பது மீதிலான கருத்து பரிமாற்றத்திற்கு வழி வகுக்கும்; அனைத்துலகப் பொது வேலை வாய்ப்புச் சேவைகள் மீதிலான ஆய்வரங்கம் கோவிட்-19 காலக்கட்டத்தில் பட்டதாரிகள், முதலாளிகள், வேலை இழந்தவர்களுக்கான பல்வேறு பயனுள்ள தகவல்கள் பகிரப்படும்; மேலும் வேலை வாய்ப்பு கண்காட்சி வாயிலாக நாடு முழுவதும் 127 முதலாளிகள் வழங்கும் 25,100 வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல்களைப் பெறலாம். எஸ்.பி.எம். முடித்தவர்கள் முதல் நிபுணர்கள் வரை அனைவரும் இதில் பயனடையலாம் என்று அவர் விவரித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்