கோலாலம்பூர், ஆக. 28-
கோவிட்-19 தொற்று காரணமாக பெரும் பாதிப்புக்கு இலக்கான தொழிலாளர் துறையை மீட்டெடுக்கும் முயற்சிகளில் ஒன்றாக 2021ஆம் ஆண்டு அனைத்துலக பொது வேலை வாய்ப்பு கருத்தரங்கை நடத்த முடிவு செய்திருக்கிறோம் என்று சமூக பாதுகாப்பு வாரியமான சொக்சோ அறிவித்திருக்கிறது.
இந்தத் தொற்றுப்பரவல் காரணமாக தொழிலாளர் துறை முடங்கியது. மக்களின் வாழ்க்கை முறையும் பாதிக்கப்பட்டது. அவற்றிலிருந்து மக்களை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். அவற்றின் ஒரு கட்டமாக 3 கருத்தரங்குகள் நடத்தப்படும். செம்டம்பர் 6 தொடங்கி 7 ஆம் தேதி வரையில் சொக்சோ வாரியத்தின் வட்டார தொழில் துறைக்கு திரும்புகின்ற ஒரு கருத்தரங்கு நடத்தப்படும். செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்கி 8ஆம் தேதி வரையில் அனைத்துலக பொது வேலை வாய்ப்பு சேவை கருத்தரங்கு நடைபெறும்.
செப்டம்பர் 7 தொடங்கி 9ஆம் தேதி வரையில் தொழிலாளர் நலன் கருத்தரங்கு நடைபெறும். இந்தக் கருத்தரங்கில் கலந்து கொள்ள கட்டணம் எதுவும் இல்லை. கல்விமான்கள், தொழில் நிபுணர்கள், முதலாளிகள், பட்டதாரிகள், பள்ளிப்படிப்பை முடித்தவர்கள், வேலை தேடுபவர்கள் ஆகியோர் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள். ஆர்வம் உள்ளவர்கள் www.perkeso.gov.my/ipef என்ற அகப்பக்கத்தில் பதிந்து கொள்ளலாம்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்