img
img

விபத்தில் பலியான கிரேப் ஓட்டுநர் முகமட் நஸ்ரியின் வாரிசுக்கு சொக்சோ இழப்பீட்டுத் தொகை
வெள்ளி 20 ஆகஸ்ட் 2021 13:31:04

img

 

கிள்ளான், ஆக. 20-

 

அசம்பாவிதங்களுக்கு எதிராக குடும்பத்தை காக்கவும் தங்கள் வாரிசுகளின் நலனை உறுதி செய்யவும் சொக்சோ பாதுகாப்பு திட்டத்தில்  அதன் பரிவுத் திட்டத்திலும் அனைவரும் கண்டிப்பாக தங்களை பதிந்து கொள்ள வேண்டும் என சொக்சோ வாரியம் வலியுறுத்தியது.

 

கிள்ளான், ஷா ஆலாம் வட்டாரங்களில் கிரேப் ஓட்டுநராக பணியாற்றி வந்த 21 வயது முகமட் நஸிருல் முபின் மாட் நஸீர் அண்மையில் சாலை விபத்தொன்றில் சிக்கி மரணமடைந்ததைத் தொடர்ந்து, அவரின் வாரிசான தந்தை மாட் நஸீரிடம் பெர்கேசோ எனப்படும் சொக்சோ சமூகப் பாதுகாப்பு சேமநிதி அமைப்பு இழப்பீட்டுத் தொகையுடன் கூடிய மாதாந்திர முறையிலான ஓய்வூதியத் தொகையை வழங்கியது. இங்குள்ள ஜாலான் கெபுன் சாலை, கம்போங் பாரு 2 குடியிருப்பில் வசித்து வந்த முகமட் நாஸிருல் சில காலமாக கிரேப் ஓட்டுநராக வேலை செய்து வந்தார்.

 

இதன் தொடர்பில் கடந்த வாரம் ஆகஸ்டு, 11-ஆம் தேதியன்று வழக்கமாகத் தனக்குக் கிடைத்த உணவு ஆர்டரை சம்பந்தப்பட்ட இடத்தில் கொண்டு சேர்க்கும் பணியின்போது ஷா ஆலமில் உள்ள சாலையில் பயணம் செய்து கொண்டிருந்த லோரி ஒன்றுடன் அவரின் மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதுண்டதில் நெஞ்சுப் பகுதியிலும் வயிற்றிலும் கடுமையாகக் காயத்திற்குள்ளாகிய அவர் சம்பவம் நடந்த இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

 

இந்நிலையில், நேற்று நண்பகல் 12.00 மணியளவில் அவரின் இல்லதிற்கு வந்த சொக்சோ தலைமையக அதிகாரிகளுடன் கிள்ளான் மாவட்ட சொக்சோ அமைப்பின் பிரதிநிதிகள் இணைந்து தங்களின் ஆழ்ந்த அனுதாபத்தை அக்குடும்பத்திடம் தெரிவித்ததுடன் மேற்படி இழப்பீட்டுத் தொகை உள்ளிட்ட ஓய்வூதியத் தொகைக்கான காசோலையுடன் மளிகைப் பொருட்களடங்கிய பொட்டலங்களையும் வழங்கினர். கிள்ளானில் பிறந்து வளர்ந்தவரான நஸிருல்  ஆறு பேரடங்கிய அக்குடும்பத்தில் நான்காவது மகனாவார். கிள்ளானிலுள்ள ஒரு தொழிற்சாலையில் பொருள் உற்பத்திப் பிரிவில் முழு நேரத் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

 

இருப்பினும், தனது பெற்றோரை கவனிப்பதற்காகவும் தம்பி தங்கைகளின் கல்விச் செலவை ஈடுகட்டுவதற்கும் ஏற்ப கூடுதல் வருமானத்தை ஈட்டுவதற்காக அவர் பகுதி நேரமாக மேற்படி கிரேப் உணவு அனுப்புநராகவும் பணியாற்றி வந்தார். குடும்பத்திலுள்ள எல்லோரிடமும் மிகுந்த அன்பு, பாசத்துடன் இருந்து வந்த அவரின் திடீர் மறைவு எங்களுக்குப் பேரிடியாகவும் மிகுந்த துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக சாதாரண துப்புரவுத் தொழிலாளியான அவரின் தந்தை மாட் நஸீர் செய்தியாளர்களிடம் சோகத்துடன் தெரிவித்தார். இதன் தொடர்பில் முழு நேரத் தொழிலாளராகப் பணியாற்றியதற்கான சொக்சோ சட்டவிதிக்குட்பட்ட இழப்பீட்டுத் தொகை உட்பட கிரேப் ஓட்டுநராகப் பணியாற்றும் தறுவாயில் சொந்தத் தொழில் சார்ந்த மற்றொரு சேமநிதிப் பாதுகாப்புச் சேவைத் திட்டத்திலும் அவர் முன்கூட்டியே முறையாகப் பதிவு பெற்றிருந்ததால் இவ்விரு திட்டங்களின் கீழுள்ள இலாப ஈவுத் தொகையைப் பெறுவதற்கு அவர் தகுதி பெற்றவாராகிறார்.

 

இதன் தொடர்பில், விபத்தில் மகனை இழந்த அப்பெற்றோர் உட்பட மூன்று தங்கைகள் ஆகியோர் சொக்சோ வாரியத்தின் மூலம் வரையறைக்கு உட்பட்ட ஓய்வூதிய இலாப ஈவுத் தொகையுடன் சம்பந்தப்பட்ட குடும்பப் பொறுப்பை ஏற்றுள்ளதற்கான சிறப்பு இலாப ஈவுத் தொகை உட்பட மறைந்த அன்னாரின் சவ அடக்கக் காரிய உதவித் தொகை 2,000 வெள்ளியையும் பெறுவதற்கான தகுதியை உடையவர்களாவர் என மேற்படி அமைப்புத் திட்டத்தின் தலைமை அதிகாரி துவான் ஹாஜி அஸார் முகமட் நஸ்ரி தெரிவித்தார்.

 

மேற்கண்ட நிகழ்ச்சியில் அவ்வமைப்பின் பொதுவுறவு அதிகாரி இஸாட் ஹாஜி ராயா, பரிவுமிக்க மக்கள் திட்டக் குழுவின் கிளை நிறுவன அதிகாரி இஸ்மாயில் அபி ஹஷீம், கிள்ளான் மாவட்ட சொக்சோ அலுவலகத் தலைவர் மோகனதாஸ் வீரையா ஆகியோரும் உடன் வந்திருந்தனர்.

 

 

 

 

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img