கோலாலம்பூர் ஆக. 9-
இன்னமும் இரண்டாவது தடவையாக தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருக்கின்ற ஆசிரியர்கள் முன்பதிவின்றி நேரடியாகச் தடுப்பூசி மையத்துக்குச் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று கல்வியமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ரட்ஸி ஜிடின் கேட்டுக் கொள்கிறார்.
நாடு முழுவதும் உள்ள தடுப்பூசி மையங்களில் இத்தகைய வசதிகள் இப்போது விரிவுபடுத்தப்பட்டுள்ளன. எனவே அங்கு நேரடியாகச் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியும். ஆசிரியர்கள் மட்டுமின்றி பள்ளி நிர்வாகிகள், பள்ளி பணியாளர்கள் ஆகியோரும் இந்த தடுப்பூசி மையங்களில் இரண்டாவது தடவையாக தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். நாடு தழுவிய அளவில் விசேஷ பிரிவினர் நேரடியாக சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளும் விரிவாக்கத்தை செய்வதற்கான முன்முயற்சி திட்டம் குறித்து கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் பணிப்படை ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இதன் உள்ளடக்கத்தை கல்வியமைச்சர் டாக்டர் ரட்ஸி ஜிடின் பகிர்ந்துகொள்கிறார்.
மலேசிய கல்வியமைச்சு தடுப்பூசி சிறப்பு பணிப்படையின் அணுக்கமான ஒத்துழைப்பின் வழி ஆசிரியர்கள், அமலாக்க பணியாளர்கள், மலேசிய கல்வியமைச்சின் அதிகார வரம்பின் கீழ் உள்ள பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் விசேஷ பிரிவினர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இதுவரையில் முதல் சொட்டு மருந்திற்கான ஏற்பாட்டினை பெறாதவர்கள் அல்லது இன்னமும் பதிந்துகொள்ளாதவர்கள் பதிவு செய்வதற்கான நடவடிக்கையை துரிதமாக எடுக்குமாறு அமைச்சர் கேட்டுக்கொள்கிறார்.
மலேசிய கல்வியமைச்சின் அதிகார வரம்பின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பணிபுரிபவர்களுக்கு துல்லியமான தகவல் விரைவில் வழங்கப்படும். தடுப்பூசி மருந்து சம்பந்தமான பணிகள் சிறப்பு பணிப்படையின் மூலமாக தொடர்ந்து முடுக்கிவிடப்படும். மலேசிய கல்வியமைச்சின் விவரப்படி ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி வரை ஆக மொத்தம் 3 லட்சத்து 52,649 ஆசிரியர்களுகு தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்டுள்ளது.
தடுப்பூசி மருந்து பெற்ற இதர வகை பணியாளர்களின் எண்ணிக்கை 52,256. இவர்கள் எல்லாம் குறைந்த பட்சம் ஒரு சொட்டு மருந்து பெற்றவர்கள். தேர்வு வகுப்பு ஆசிரியர்கள் 84,995 பேர் குறைந்தபட்சம் ஒரு சொட்டு தடுப்பூசி மருந்துபெற்றுள்ளனர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்