கோலாலம்பூர், ஆக. 16-
வரும் அக்டோபர் 3 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டும். நாடு தழுவிய நிலையில் படிப்படியாக பள்ளிகள் திறக்கப்படும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கல்வியமைச்சர் ரட்ஸி ஜிடின் அறிவித்துள்ளார்.
இதன் படி வரும் செப்டம்பர் முதல் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்ற முடிவை அரசாங்கம் மாற்றிக் கொண்டுள்ளது. நாடு கோவிட்-19 உச்சத்தில் இருக்கின்ற நேரத்தில் மாணவர்களின் உயிரோடும் பாதுகாப்போடும் விளையாட வேண்டாம் என பல்வேறு தளங்களில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.இந்நிலையில் இப்போது தேதிகள் மாற்றப்பட்டு அக்டோபர் 3 ஆம் தேதி பள்ளிகள் படிப்படியாக திறக்கப்படும் என கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார். அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கும் பள்ளிகள் படிப்படியாக ஆங்காங்கே திறக்கப்படும்.
கோவிட்-19 பெருந்தொற்றையொட்டி பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டதும் மாணவர்கள் கற்றலையும் கற்பித்தலையும் வீட்டிலிருந்தே மேற்கொள்ளுமாறு அரசாங்கம் ஆணையிட்டது. அதன் படி ஆசிரியர்கள் இயங்கடைியின் மூலம் தங்களின் போதனையை தொடர்ந்து வந்தனர். நாட்டில் கோவிட்-19 கட்டுக்குள் வரும் என்று கருதப்பட்டது.எனினும் ஒவ்வொரு நாளும் 20 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதிப்பதும் 200 க்கும் அதிகமான மரணங்கள் நிகழ்வதும் பெற்றோர்களை அச்சத்தில் ஆழ்த்தியிருப்பதால் பள்ளிகளை திறக்கும் நடவடிக்கையை கைவிடுமாறு அவர்கள் கோரி வந்தனர்.
இது ஓர் அக்னி பரீட்சைக்கு சமம் என்று பல பொது இயக்கங்கள் கல்வி அமைப்புகள் கூறி வந்தன. இதனால் பள்ளி திறக்கும் தேதி மாற்றப்பட்டுள்ளது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்