img
img

பவுண்டேஷன் மற்றும் டிப்ளோமா படிப்பிற்கான மாணவர் நுழைவு
சனி 31 ஜூலை 2021 16:26:46

img

கோலாலம்பூர், ஆக. 1-

2021/2022 கல்வி  ஆண்டுக்கான பவுண்டேஷன்  மற்றும் டிப்ளோமா படிப்புத்துறைக்கான மாணவர் நுழைவு  குறித்து உயர் கல்வி அமைச்சு தக்க விளக்கத்தை வெளியிட்டுள்ளது. இத்தகைய   டிப்ளோமாவிற்கான  கல்வித்திட்டம் சம்பந்தமான  கற்பித்தல் மற்றும் கற்றல்  நடவடிக்கையானது முற்றிலும்  இணையத்தளத்தின் வழியாகவே மேற்கொள்ளப்படும்.

இம்மாதம் முதல் இந்த முறை  தொடங்குகிறது. தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள  இக்கட்டான  நிலையினை    கருத்தில் எடுத்துக் கொண்டு இத்தகைய  அணுகுமுறை கடைப்பிடிக்கப்படுகிறது என்று அமைச்சு அறிவிக்க விரும்புகிறது. கோவிட்-19   பெருந்தொற்று பரவலை கையாளுவதிலும் தேசிய மீட்சி திட்டத்தை அரசாங்கம் வெற்றி கரமாக அமல்படுத்துவதற்கு உதவும் கடப்பாட்டினை  உயர்கல்வியமைச்சு கொண்டுள்ளது.

 

எனினும்  இவ்வாண்டும் அக்டோபர் மாதம் முதல் அல்லது அதன் பிறகு வரும் செமஸ்டரிலும் நேர்முக நடவடிக்கையினை மேற்கொள்வது குறித்து  பொது பல்கலைக்கழகம் பரிசீலிக்கலாம். சம்பந்தப்பட்ட  பொது  பல்கலைக்கழகமே இத்தகைய ஏற்பாட்டிற்கு ஆயத்தமாக இருக்கிறதா என்பது இதனை  பொறுத்த விஷயமாகும்.

மேலும் விவரங்கள் பெற விரும்பும் மாணவர்களும் பெற்றோர்களும் 24 மணிநேரமும்  செயல்படும் Bilik Gerakan COVID-19 KPT  உடன்  03-88706777, 6949, 6623, 6628 என்ற  எண்களில் தொடர்புக் கொள்ளலாம்.

உயர்கல்வி  நிலையத்தின் அகப்பக்கத்தில் அல்லது சம்பந்தப்பட்ட உயர்கல்வி நிலையத்தின் ஒருங்கிணைப்பு  அதிகாரியுடன் நேரடியாக தொடர்புக் கொள்ளலாம் என்றும்  உயர்கல்வி  அமைச்சு  இவர்களை கேட்டுக் கொள்கிறது.  

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img