கோலாலம்பூர், ஜூலை 30-
சிறந்த நிர்வாகம், நாணயம் மற்றும் வியூகத்தின் அடிப்படையில் சேமிப்பையும் கடனளிப்பையும் சிறந்த முறையில் நிர்வகிப்பதற்கான ஐந்தாண்டு திட்டத்தை தேசிய உயர் கல்விக் கழகம் (பி.டி.பி.டி.என்.) நேற்று அறிவித்தது. பி.டி.பி.டி.என். வியூகத்திட்டம் 2021-2025 எனும் அத்திட்டத்தை அதன் அதிகாரத்துவ முகநூல் அகப்பக்கத்தில் பி.டி.பி.டி.என். தலைவர் டத்தோ வான் சைஃபுல் வான் ஜான் தொடக்கி வைத்தார்.
பி.டி.பி.டி.என். வியூகத்திட்டம் 2021-2025 இவ்வாண்டு தொடங்கி அடுத்த 5 ஆண்டுகளுக்குத் தேவையான திட்டங்களையும் நோக்கங்களையும் வரையறுக்கும் ஓர் ஆவணமாகும். அரசாங்கத்தின் கொள்கை மற்றும் நோக்கங்களுக்கு ஏற்ப இது வகுக்கப்பட்டுள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு, பி.டி.பி.டி.என். அதன் நிதியளிப்பை ஆக்ககரமான வகையில் நிர்வகிப்பதை உறுதி செய்ய முடியும். அக்கழகத்தின் நோக்கமும் கடமைகளும் நிறைவேறுவதற்கான வழிகாட்டியாக விளங்குவதற்கு இந்த வியூகத் திட்டம் அவசியமாகும் என வான் சைஃபுல் கூறினார்.
2025 ஆம் ஆண்டு பிறக்கும்போது மிகவும் முக்கியமான புத்தாக்கம் வாய்ந்த உயர் கல்வி நிதிக் கழகமாக பி.டி.பி.டி.என். செயல்படுவதற்கு ஐந்து (5) வியூகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில்:
i. எஸ்.எஸ்.பி.என். எனும் தேசியக் கல்வி முதலீட்டுத் திட்டத்தை மலேசியாவில் முதன்மை கல்வி சேமிப்பாக உருவாக்குவது;
ii. கல்விக் கடனுதவி நிர்வாகம் நாட்டின் முதன்மையான தனித்தன்மை வாய்ந்த கல்விக் கடனுதவி நிர்வாகமாக அதிகாரம் பெறுவது;
iii. கல்விக் கடனை திரும்ப வசூலிக்கும் நிர்வாக முறையை மேலும் ஆக்ககரமானதாக மாற்றுவது;
iv. உகந்த வருமானத்தை கொண்டு வரக்கூடிய நிதி மற்றும் முதலீட்டு வியூகத்தை அமல்படுத்துவது; மற்றும்
v. மிகவும் ஆக்ககரமான, விவேகமான நிறுவனமான இதனை உருவாக்குவது ஆகியன.
ஐந்தாவது வியூகத் திட்டத்தின் கீழ், இக்கழகத்தின் தோற்றமும் மொத்தத்தில் அதன் முத்திரையும் இன்னும் ஆக்கப்பூர்வமான வகையில் மேம்படுத்தப்படும். தரவுகளின் நிர்வாகமும் இப்படித்தான் மேன்மை அடையும். செயற்கை நுண்ணறிவு வாயிலாக இது செயல்படுத்தப்படும் என வான் சைஃபுல் குறிப்பிட்டார்.
தற்போது வரையப்பட்டுள்ள இந்த ஐந்தாண்டு திட்டம் ஒரு புதிய கட்டத்தை நோக்கி இக்கழகத்தை இட்டுச் செல்வதுடன் ஓர் உயரிய தோற்றத்தை இதற்கு வழங்குவதற்கான வழிகாட்டியாக விளங்கும் என அவர் சொன்னார். மேலும், இதன்பால் மக்களின் நம்பிக்கையையும் இது அதிகரிக்கும் என்றார் அவர்.
கல்விக்காக கடனைக் கொடுப்பதும் கடனை திரும்ப வசூலிப்பதும் மட்டும் அல்லாது பிள்ளைகள் சேமிக்கவும் அவர்களின் வெற்றிக்கான வாய்ப்பையும் இது வழங்குகிறது என தமது தொடக்க உரையில் அவர் கருத்துரைத்தார். இங்கு அடையாளம் காணப்பட்டுள்ள ஐந்து வியூகங்களும், தேசியக் கல்வி சேமிப்புத் திட்டத்தை (எஸ்.எஸ்.பி.என்.) ஒரு முக்கியமான கல்வி சேமிப்பாக மாற்றும் என்பதில் சந்தேகமில்லை என்றார் அவர்.
இதனிடையே, நாட்டின் முன்னணி கல்விக் கடனுதவிக் கழகம் என்ற வகையில் தரமான பட்டதாரிகளை உருவாக்கும் அரசாங்கத்தின் நோக்கத்திற்கு ஏற்ப பி.டி.பி.டி.என். செயல்படுவதாக அதன் தலைமை நிர்வாகி அஹ்மட் டாசுக்கி அப்துல் மாஜிட் கூறினார். பல்வேறு தரப்பினரின் ஒத்துழைப்புடன் அமலாக்கம் காணவிருக்கும் இந்த ஐந்து வியூகங்களின் வாயிலாக 2025 க்குள் உயர் கல்விக்கான பிரதான சேமிப்பு மற்றும் நிதி நிர்வாகக் கழகமாக இது உருவாகும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
கடந்த 1997 இல் பி.டி.பி.டி.என். தொடங்கப்பட்டது முதல் 2021 மே 31 ஆம் தேதி வரையில் இக்கழகம் இதுவரை 35 லட்சத்து 10 ஆயிரம் மாணவர்களுக்கு 63.82 பில்லியன் வெள்ளி வரைக்குமான கடனுதவியை வழங்கியுள்ளது. மொத்தம் 49 லட்சத்து 80 ஆயிரம் எஸ்.எஸ்.பி.என். கணக்குகளின் வாயிலாக 899 கோடி வெள்ளி சேமிப்பை பதிவு செய்துள்ளது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்