கோலாலம்பூர், ஜூலை 14-
கோவிட்-19 தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு பொது மக்கள், வணிகங்கள், மற்றும் தேசிய மீட்சித் திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கும் உதவும் வகையில் மொத்தம் 15,000 கோடி வெள்ளி மதிப்பிலான உதவித் திட்டத்தை பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் கடந்த ஜூன் மாத இறுதியில் அறிவித்தார்.
நேரடி நிதி ஊக்குவிப்பாக மொத்தம் 1,000 கோடி வெள்ளி மதிப்பிலான ஒதுக்கீடுகளையும் அரசாங்கம் வழங்கியுள்ளது. “Pakej Perlindungan Rakyat dan Pemulihan Ekonomi (Pemulih)” அல்லது பெமுலே என்றழைக்கப்படும் இத்திட்டத்தின் கீழ் கடந்த ஜூன் 28 ஆம் தேதி பல்வேறு சலுகைகளை பிரதமர் அறிவித்தார்.
அவற்றின் சில முக்கியமான அம்சங்கள்:-
* ஜூலை மாதத்திற்கான பி.பி.ஆர். அல்லது பந்துவான் பிரிஹாத்தின் ராக்யாட் திட்டத்திற்காக 500 வெள்ளியை அரசாங்கம் வழங்கும். இத்தொகை ஜூன் 29 ஆம் தேதியிலிருந்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
பி.பி.ஆர். திட்டத்தின் மூன்றாவது கட்டத்தின் கீழ் 100 முதல் 1,400 வெள்ளி செப்டம்பர் மாதம் செலுத்தப்படும். மேல் முறையீடு செய்து விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டவர்களுக்கும் இது செலுத்தப்படும். மொத்தமாக பி.பி.ஆர். திட்டத்தின் கீழ் 490 கோடி வெள்ளி செலுத்தப்படும்.
* வேலை தேடுவோருக்கான அலவன்ஸ் தொகை வழங்குவதில் புதிய பட்டதாரிகள் மற்றும் முறைசாரா துறைகளைச் சார்ந்தவர்களைச் சார்ந்த சொக்சோ செலுத்தாதவர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படும். MYFuturejobs எனும் அகப்பக்கத்தில் அவர்கள் பதிவு செய்ய வேண்டும். குறைந்தது 300 வெள்ளி வரை அவர்கள் அலவன்ஸ் பெறுவார்கள்.
* பல்வேறு பிரிவுகளுக்கான பி.கே.சி. அல்லது சிறப்பு கோவிட்-19 உதவிகளில் கீழ்க்காண்பவை அடங்கும்:
1) மிகவும் ஏழ்மை நிலைமையிலான குடும்பத்தினருக்கு ஆகஸ்ட் மாதம் 500 வெள்ளியும், நவம்பர் மாதம் 500 வெள்ளியும் டிசம்பர் மாதம் 300 வெள்ளியும் வழங்கப்படும். இப்பிரிவைச் சேர்ந்த திருமணம் ஆகாதவர்கள் ஆகஸ்ட் மாதம் 200 வெள்ளியும் நவம்பர் மாதம் 300 வெள்ளியும் பெறுவார்கள்.
2) பி40 பிரிவைச் சேர்ந்த குடும்பங்களுக்கு ஆகஸ்ட் மாதம் 500 வெள்ளியும் டிசம்பர் மாதம் 500 வெள்ளியும் வழங்கப்படும். இப்பிரிவைச் சேர்ந்த திருமணம் ஆகாதவர்கள் ஆகஸ்ட் மாதம் 200 வெள்ளி பெறுவார்கள்.
3) எம்40 பிரிவினர் 250 வெள்ளியும் இப்பிரிவின் திருமணம் ஆகாதவர்கள் 100 வெள்ளியும் பெறுவார்கள். இது ஆகஸ்ட் மாதம் வழங்கப்படும்.
இந்த பி.கே.சி. திட்டத்திற்கு வெ. 460 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஒரு கோடியே 10 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கும் மூத்த குடிமக்களுக்கும் இத்திட்டம் நன்மை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
* உணவுக் கூடை திட்டத்திற்காக மொத்தம் ஒரு கோடி வெள்ளியை அரசாங்கம் ஒதுக்கீடு செய்யும். இது குறிப்பாக பூர்வகுடி மக்களுக்காகும்.
* ஒரு கிலோ அளவிலான பிளாஸ்டிக் பை சமையல் எண்ணெய்விலை தொடர்ந்து வெ.2.50 இல் நிலைநாட்டப்படுவதை உறுதி செய்வதற்கு அரசாங்கம் மேலும் 100 கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்யும்.
* மனநல ஆரோக்கியம், வீடற்றவர்கள், மற்றும் இதர சமூகப் பிரச்சினைகளுக்கு உதவுவதற்காக அரசு சார்பற்ற இயக்கங்களுக்கு ஒரு கோடியே 50 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்படும்.
* மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளைக் கையாளும் ஒரு நடவடிக்கையாக, ரோன்95 பெட்ரோல், டீசல் மற்றும் எல்.பி.ஜி. சில்லறை விலைகளை அரசாங்கம் தொடர்ந்து நிலைநிறுத்தும். இதற்காக இவ்வாண்டு 600 கோடி வெள்ளி மானியத் தொகை செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
* ஒரு கிலோ மற்றும் 5 கிலோ எடையிலான சமையல் எண்ணெய் போத்தல்களின் விலையைக் கட்டுப்படுத்துவதற்கு கச்சா செம்பனை எண்ணெயின் மதிப்பின் அடிப்படையில் விலைக் கட்டுப்பாட்டு திட்டத்தை அரசாங்கம் அமல்படுத்தும்.
* ஒரு மாதத்திற்கு 900 கிலோ வாட் அதிகப்பட்ச மின்சார பயனீட்டிற்கு 5 மற்றும் 40 விழுக்காட்டிற்கு இடையே மின்சாரக் கட்டண கழிவு வழங்கப்படும். 200 கிலோவாட்டிற்கும் குறைவான பயன்பாட்டிற்கு 40% கழிவு, 201-300 கிலோவாட் பயன்பாட்டிற்கு 15% கழிவு ஆகியன அவற்றுள் அடங்கும். இதன் அடிப்படையில், ஜூலை மாதம் தொடங்கி மூன்று மாதங்களுக்கு மின்சாரக் கட்டணத்தில் 34 கோடியே 60 லட்சம் வெள்ளி வரையில் மக்கள் சேமிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
* மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் துறைகள், குறிப்பாக ஓட்டல் நடத்துநர்கள், கேளிக்கை மைய நடத்துநர்கள், மாநாட்டு மண்டபம், வர்த்தக மையம், சுற்றுலா நடத்துநர்கள் ஆகியோருக்கு 10 விழுக்காட்டு மின்சாரக் கட்டணக் கழிவு மூன்று மாதங்கள் நீட்டிக்கப்படும்.
* இவ்வாண்டு இறுதி வரையில் தினசரி 1ஜிபி அளவு இலவச தரவுகள் வழங்குவதை நீட்டிக்க தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஒப்புக்கொண்டுள்ளன. இச்சலுகை சுமார் 50 கோடி வெள்ளி மதிப்பிலானதாகும். நாட்டில் உள்ள பதிவு பெற்ற 4 கோடியே 40 லட்சம் பேருக்கு இது பயனுள்ளதாக அமையும்.
* ஜி.கே.பி எனும் பிரிஹாத்தின் சிறப்பு மானியம் 3.0 இன் கீழ், தகுதி பெறும் தரப்பினருக்கு கூடுதலாக 500 வெள்ளி வழங்கப்படும். இவ்வாண்டு ஜூலை மாத மத்தியில் இதற்கான தொகை செலுத்தப்படும். மொத்தமான ஜி.கே.பி. திட்டத்திற்கு 510 கோடி வெள்ளியை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.
* எஸ்.எம்.இ. நிறுவனங்களின் போராட்டத்தை கவனத்தில் கொண்டு, தகுதி பெறுவோருக்கு ஜி.கே.பி. 4.0 இன் கீழ் கூடுதல் தொகையாக 500 வெள்ளி வழங்கப்படும். வரும் செப்டம்பரில் 500 வெள்ளியும் நவம்பரில் 500 வெள்ளியும் செலுத்தப்படும்.
* தீபகற்ப மலேசியா, சபா, சரவா மாநிலங்களில் 30 நடமாடும் வங்கிச் சேவைகளை வழங்குவதற்காக உள்நாட்டு வங்கிகளுக்கு ஒரு கோடியே 80 லட்சம் வெள்ளியை அரசாங்கம் ஒதுக்கீடு செய்யும். 250 கிராமப்பகுதிகளில் இச்சேவை கிடைப்பதற்கு வகை செய்யப்பட்டுள்ளது.
புதிய வங்கிக் கணக்குகளை திறப்பது, சேமிப்பு, பணத்தை மீட்பது, பண பட்டுவாடா, கட்டணம் செலுத்துவது, டிஜிட்டல் வங்கி முறை என அனைத்து சேவைகளும் இதன் மூலம் கிடைக்கப்பெறும்.
* நான்காவது முறையாக சம்பள உதவித்திட்டத்தை அரசாங்கம் தொடர்கிறது. இதற்காக 380 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது. 25 லட்சம் தொழிலாளர்கள் இதன் மூலம் நன்மை அடைவர். ஒரு முதலாளிக்கு 500 தொழிலாளர்கள் வரைக்கும் இந்த உதவித்தொகை வழங்கப்படும். நான்கு மாதங்களுக்கு ஒரு தொழிலாளருக்கு தலா 600 வெள்ளி உதவி நிதி வழங்கப்படும்.
* ஐ-சித்தரா எனும் புதிய திட்டத்தை ஊழியர் சேம நிதி வாரியம் தொடங்கியுள்ளது. இதற்கான விண்ணப்பம் கடந்த திங்கள் அன்று ஆரம்பமானது.
* பி40, எம்40 அல்லது டி20 என எந்த பிரிவைச் சேர்ந்தாலும் அவர்களுக்கு ஆறு மாதம் கடன் ஒத்திவைப்பை அரசாங்கம் வழங்குகிறது. ஜூலை 7 ஆம் தேதி இது தொடங்கப்பட்டுள்ளது. எனினும், கடன் வாங்கியவர்கள் வங்கிகளில் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்