img
img

எஸ்.எஸ்.பி.என். முதலீடு மும்மடங்கு அதிகரிப்பு. பி.டி.பி.டி.என். புதிய சாதனை
திங்கள் 08 மார்ச் 2021 08:28:20

img

கோலாலம்பூர், பிப். 27-

தேசிய உயர்கல்விக் கழகமான பி.டி.பி.டி.என். தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக மிகச்சிறந்த சாதனையை நிலைநாட்டி வருகிறது. குறிப்பாக, தேசியக் கல்வி சேமிப்புத் திட்டத்தில் (எஸ்.எஸ்.பி.என்.) முதலீடுகளை ஊக்குவித்து வருகிறது என அதன் தலைவர் டத்தோ வான் சைபுல் வான் ஜான் கூறினார்.

கடந்த 2018 இல் சமுதாயத்தின் மத்தியில் தொடங்கப்பட்ட இந்த எஸ்.எஸ்.பி.என். சேமிப்புத் திட்டத்தின் தரம் தற்போது குறிப்பிடத்தக்க அளவு மேம்பாடு கண்டுள்ளது. 2020 ஆம் ஆண்டுக்கான மொத்த எஸ்.எஸ்.பி.என். முதலீடு 199 கோடி வெள்ளியாகும். இது முந்தைய சாதனையை முறியடித்து புதிய சாதனையை பதிவு செய்துள்ளது. 2019 இல் இருந்த 137 கோடி வெள்ளியுடன் ஒப்பிடுகையில் இது 62 கோடியே 38 லட்சத்து 20 ஆயிரம் வெள்ளி அல்லது 45.58 விழுக்காடு அதிகரிப்பாகும். 

2017 முதல் 2020 ஆம் ஆண்டு வரைக்குமான எஸ்.எஸ்.பி.என். முதலீட்டு விவரங்கள் கீழ்வருமாறு:-2018 முதல் முதலீடுகள் அதிகரிக்கத் தொடங்கின. 2020 டிசம்பர் 31 ஆம் தேதி வரைக்குமான மொத்த எஸ்.எஸ்.பி.என். முதலீடு 788 கோடி வெள்ளியாகும். 2020 ஆம் ஆண்டு பெறப்பட்ட 199 கோடி மொத்த முதலீட்டு தொகையானது 2020 இல் இலக்கிடப்பட்ட 150 கோடி வெள்ளியுடன் ஒப்பிடுகையில் 132.82 விழுக்காடு அதிகமாகும் என வான் சைபுல் சுட்டிக்காட்டினார்.

எஸ்.எஸ்.பி.என். புதிய கணக்குகளைத் திறப்பதை பொறுத்த வரையில், 2020 இல் 400,000 கணக்குகள் இலக்கிடப்பட்டன. ஆனால், அந்த காலகட்டத்தில் 436,101 கணக்குகள் திறக்கப்பட்டன என்றும் அவர் கூறினார். ஆண்டு வாரியான இலக்குகளுடன் ஒப்பிடுகையில் இது 109.03 விழுக்காடு அதிகமாகும். 

மொத்தத்தில், 2004 இல் சேமிப்புக்கான வழிவகை அறிமுகம் செய்யப்பட்டது முதல் 2020 டிசம்பர் 31 ஆம் தேதி வரையில் 48 லட்சத்து 20 ஆயிரம் சேமிப்புக் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன. மொத்த முதலீட்டு லாபமும் இந்த 2020 ஆம் ஆண்டில் 23 கோடியே 74 லட்சத்து 20 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டில் இருந்த 20 கோடியே 52 லட்சத்து 80 ஆயிரம் வெள்ளியுடன் ஒப்பிடுகையில் இது 15.7 விழுக்காடு அதிகமாகும்.

இந்த அபார சாதனை குறித்து கருத்துரைத்த வான் சைபுல், ்2018 ஜூன் 18 ஆம் தேதி பி.டி.பி.டி.என். தலைவர் பொறுப்பை நான் ஏற்றபோது இளையோரின் நிதிச்சுமைகளைக் குறைக்கும் வழிகளைக் காண வேண்டும் என்ற நெருக்குதல் எனக்கு இருந்தது. ஆனால், இதனை உடனடியாக அடைய முடியாது என்பதை நான் அப்போது உணர்ந்தேன். சேமிப்பின் அவசியம் குறித்து சமூகத்தின் மனதில் விதைத்திட நீண்ட காலம் பிடிக்கும் என்பதையும் அறிந்தேன். 2017 இல் பெறப்பட்ட மொத்த முதலீட்டுத் தொகை 72 கோடியே 68 லட்சத்து 40 ஆயிரம் வெள்ளி மட்டுமே. நான் பி.டி.பி.டி.என். தலைவராகப் பொறுப்பேற்ற மூன்றே ஆண்டுகளில் எஸ்.எஸ்.பி.என். முதலீடுகளை மூன்று மடங்காக என்னால் அதிகரித்துக் காட்ட முடிந்தது. ஒவ்வோர் ஆண்டும் லாபமும் அதிகரித்தது. மக்கள் மனதில் சேமிப்பின் அவசியம் ஆழமாகப்பதிந்துள்ளதை இது காட்டுகிறதுசு என தெரிவித்தார்.

்பி.டி.பி.டி.என். நிர்வாக வாரிய உறுப்பினர்கள் உட்பட அனைத்து அதிகாரிகளின் ஆதரவுடன் இது சாத்தியமாகியுள்ளது. சமூகத்தின் சிந்தனையை மாற்றுவதற்கு இன்னும் ஏராளம் செய்ய வேண்டியுள்ளது. இதற்காக திட்டமிடப்பட்டுள்ள அனைத்து முயற்சிகளையும் நாங்கள் தொடர்ந்து மேற்கொள்வோம்சு என அவர் மேலும் கூறினார்.

ஈடிணூஞுஞிணா ஞீஞுஞடிணா, ஞுகச்தூ, ஊகஙீ, ஒணிட்கச்தூ, டுடிணிண்டு ட்ஞுஞீடிச், –ˆஃகச்தூ, ட்தூகச்தூ, கச்தூகிதடிடு ஆகிய பல்வேறு வழிகளில் இணையம் வாயிலாக முதலீட்டுத் தொகையைச் செலுத்துவதற்கான வசதிகளையும் பி.டி.பி.டி.என். வழங்குகிறது. எஸ்.எஸ்.பி.என். சேமிப்பை எளிதாக்குவதற்கான நடவடிக்கைகளில் இவை அடங்கும். பொதுமக்களும் இதனை வரவேற்கின்றனர் என்பது 66.39 விழுக்காட்டினர் இணையம் வாயிலான சேவைகளைப் பயன்படுத்துவதன் வழி தெளிவாகின்றது.

இந்த இணையம் வாயிலான முதலீட்டு வசதிக்கு ஏற்பாடு செய்தவர் பி.டி.பி.டி.என். தலைமை நிர்வாகி அஹ்மட் டாசுக்கி அப்துல் மாஜிட் ஆவார். இந்த பெருமை முழுமையாக அவரையே சேரும். இந்த வெற்றிக்காக அவருக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். கோவிட்-19 தொற்றுப் பரவல் நாட்டை பெரிதும் பாதித்து வரும் இன்றைய சூழலில் பாதுகாப்பான, துரிதமான, எளிதான ஒரு வழியை இணையச் சேவைகள் பொதுமக்களுக்கு வழங்குகின்றன என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

2020 ஆம் ஆண்டில், உயர் கல்விக் கழகங்களில் மொத்தம் 150,567 மாணவர்கள் கல்வி வாய்ப்பை மேற்கொள்வதற்கு பி.டி.பி.டி.என். உதவியுள்ளது. இதற்காக மொத்தம் 359 கோடி வெள்ளி நிதியுதவி அங்கீகரிக்கப்பட்டது. அம்மாணவர்கள் கல்வி கற்று முடிக்கும் வரையில் இந்த நிதியுதவி கிடைக்கும். 

இந்த எண்ணிக்கையினரில் 59,421 மாணவர்கள் அல்லது 39.46  விழுக்காட்டினர் பி40 மற்றும் வசதி குறைந்த மாணவர்கள் ஆவர். இவர்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகை 160 கோடி வெள்ளியாகும். பி.டி.பி.டி.என். வழங்கிய இந்த நிதி உதவிகளின் வழி அம்மாணவர்கள் தங்கள் கனவுகளை நனவாக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. 

கடன் வாங்கிய மாணவர்கள் அதனை திருப்பிச் செலுத்தும் வகையில் அதற்கான பல்வேறு திட்டங்களையும் பி.டி.பி.டி.என். வகுத்துள்ளது. தொடர்ந்து தேவைகள் ஏற்படும் மற்ற மாணவர்களுக்கும் கடனுதவிகள் வழங்கப்படுவதை இது உறுதி செய்யும். 2020 இல் மொத்தம் 117 கோடியே 50 லட்சம் வெள்ளி கடனை திரும்பப் பெறுவதற்கு பி.டி.பி.டி.என். இலக்கிட்டிருந்தது. ஆனால், அதே ஆண்டில் வெற்றிகரமாக 135 கோடியே 30 லட்சம் வெள்ளியை திரும்பப்பெற முடிந்தது. இது தாங்கள் நிர்ணயித்த இலக்கை விட அதிகமாகும் என அவர் தொடர்ந்து கூறினார்.

கடனை நம்பி வாழ்வதை ஒரு நாள் குறைக்க வேண்டும் என்பதே எங்களின் 2021 ஆம் ஆண்டுக்கான இலக்காகும்.  இதன் வாயிலான சேமிப்பைக் கொண்டு மாணவர்கள் தங்கள் கற்றல் கற்பித்தலை மேற்கொள்ளும் வாய்ப்பை, அதற்கான மாற்றத்தை பி.டி.பி.டி.என். நிச்சயம் அடையும் என வான் சைபுல் குறிப்பிட்டார்.  

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img