img
img

எஸ்.எஸ்.பி.என். சேமிப்பு: வைப்புத் தொகையாளர்களுக்கு ஊக்குவிப்பு
செவ்வாய் 10 நவம்பர் 2020 09:37:44

img

கோலாலம்பூர், நவ.8-

2021 வரவு செலவுத் திட்டத்தில் தேசியக் கல்வி சேமிப்புத் திட்ட (எஸ்.எஸ்.பி.என்.) வைப்புத் தொகையாளர்களுக்கு வழங்கிய ஊக்குவிப்பிற்காக பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசினுக்கு தேசிய உயர் கல்வி அற நிறுவனம் (பி.டி.பி.டி.என்.) நன்றி தெரிவித்துக்கொள்கிறது. நிதி அமைச்சர் செனட்டர் தெங்கு டத்தோ ஸ்ரீ ஷப்ருல் தெங்கு அப்துல் அஜிஸ் நேற்று முன் தினம் (நவம்பர் 6) 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை அறிவித்தார். எஸ்.எஸ்.பி.என். னில் செலுத்தப்படும் வைப்புத்தொகைக்காக ஓராண்டுக்கு வழங்கப்படும் 8,000 வெள்ளி வரைக்குமான வரி விலக்குச் சலுகையை 2022 ஆம் ஆண்டு வரையில் அரசாங்கம் நீட்டித்திருக்கிறது. 

தங்கள் பிள்ளைகளின் எதிர்கால கல்விக்கான உத்தரவாதமாக பெற்றோர்களுக்கு வழங்கும் ஊக்குவிப்பாக பி.டி.பி.டி.என். வழங்கியிருந்த இந்த ஆலோசனையை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது. 2021 வரவு செலவுத் திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள இந்த சலுகையைப் பயன்படுத்தி பிள்ளைகளின் உயர்கல்விக்காக சேமிப்பதற்கு எஸ்.எஸ்.பி.என். சேமிப்புத் திட்டத்திற்கு மலேசியர்கள் தொடர்ந்து முதன்மை வழங்கி வர வேண்டும் என்பதே பி.டி.பி.டி.என். நிறுவனத்தின் கோரிக்கையாகும்.

பிள்ளைகளின் தேவைக்காக நிதி விவகாரத்தில் முக்கியமாக கவனம் செலுத்தும் பரிவுமிக்க அரசாங்கத்தைப் பெற்றிருக்கும் மலேசியர்கள் உண்மையில் அதிர்ஷ்டசாலிகள். காரணம், தங்கள் பிள்ளைகளின் சிறந்த எதிர்காலத்தையும் சிறந்த உயர் கல்வியையும் இது உறுதி செய்கிறது என பி.டி.பி.டி.என். ஓர் அறிக்கையில் கூறியுள்ளது. இதனிடையே, பி.டி.பி.டி.என். தொடங்கிய 2020 எஸ்.எஸ்.பி.என். சேமிக்கும் மாதத்தில் மொத்தம் வெ.150.4 மில்லியன் வசூலிக்கப்பட்டது. குறிப்பாக இந்த திட்டம்  அக்டோபர் முதல் தேதி தொடங்கி 31 ஆம் தேதி வரையில் மேற்கொள்ளப்பட்டது. 

தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் கருதி, குறிப்பாக கல்வியின் நோக்கத்திற்காக சேமிப்பில் பெற்றோர்கள் அக்கறையும் கவனமும் கொண்டுள்ளனர் என்பதையே இது காட்டுகிறது.  இத்திட்டத்தின் வாயிலாக பி.டி.பி.டி.என். கொண்டிருந்த இலக்கு வெ.110 மில்லியன் ஆகும். எனினும், அதையும் மிஞ்சி 136.73 விழுக்காடு வெற்றியை தங்களால் அடைய முடிந்தது என பி.டி.பி.டி.என். தலைவர் வான் சைஃபுல் வான் ஜென் அண்மையில் கூறியிருந்தார். எஸ்.எஸ்.பி.என். 2020 சேமிப்பு மாதம் தொடங்கியது முதல் மலேசியர்களிடையே சேமிக்கும் பழக்கம் அதிகரித்திருப்பதைக் காண முடிகிறது. சேமிப்பும் அதிகரித்துள்ளது. நாட்டின் மேம்பாட்டில் உதவுவதற்காக பிள்ளைகளுக்கு சிறந்த கல்வி அறிவை வழங்குவதில் பெற்றோர்கள் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பை இது காட்டுகிறது.

இதனிடையே, எஸ்.எஸ்.பி.என். வாயிலாக மலேசியர்கள் கல்விக்காக சேமிக்கும் திட்டத்தை பி.டி.பி.டி.என். கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் மேற்கொண்டு வருகிறது. இது பி.டி.பி.டி.என். வாயிலாக அரசாங்கம் தொடங்கியுள்ள மிகச்சிறந்த சேமிப்புத் திட்டமாகக் கூட கருதப்படுகிறது என்று பி.டி.பி.டி.என். தலைமை நிர்வாகி அஹ்மட் டாசுக்கி அப்துல் மஜிட் கூறியிருந்தார்.

கடனை மட்டுமே நம்பியிருப்பதை தவிர்க்கும் பொருட்டு எஸ்.எஸ்.பி.என். திட்டத்தின் சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் பி.டி.பி.டி.என். தொடர்ந்து  சமூகத்தினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img