கோலாலம்பூர், நவ. 1-
எஸ்.எஸ்.பி.என். (SSPN) கல்வி சேமிப்புத் திட்டத்தில் சேமிப்புத் தொகை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. 2020 எஸ்.எஸ்.பி.என். சேமிப்பு மாதத்தை முன்னிட்டு இத்திட்டத்தில் இதுவரை 14 கோடியே 76 லட்சத்து 70 ஆயிரம் வெள்ளி பெறப்பட்டுள்ளது என உயர் கல்வி நிதி நிறுவனமான பி.டி.பி.டி.என். தலைவர் வான் சைஃபுல் வான் ஜென் கூறினார்.
எதிர்பார்த்த அளவைவிட இந்த சேமிப்பில் 132.24 விழுக்காட்டு அதிகரிப்பை தங்களால் காண முடிந்தது என்றும் தங்கள் பிள்ளைகளின் எதிர்கால கல்வித் தேவைக்கான இந்த சேமிப்பின் அவசியத்தை அதிகமான பெற்றோர் உணர்ந்துள்ளனர் என்றும் அவர் சொன்னார். அனைத்து சமூகத்தினரின் மத்தியிலும் சேமிக்கும் பழக்கத்தையும் கலாச்சாரத்தையும் ஊக்குவிக்க வேண்டும் என்பதே பி.டி.பி.டி.என்.னின் விருப்பமும் கூட. இந்நாட்டு மக்களுக்காக தயார் செய்யப்பட்டுள்ள மிகச்சிறந்ததொரு சேமிப்புத் திட்டமாக எஸ்.எஸ்.பி.என். விளங்குவதே இதற்கு காரணம் என அவர் கருத்துரைத்தார்.
ஒரு நாளில் நீங்கள் சேமிக்க வேண்டியது ஒரு வெள்ளிதான். தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக பல்வேறு சலுகைகளையும் நன்மைகளையும் பெற்றோர்கள் பெற முடியும். மேலும், விரும்பத்தகாத சம்பவங்கள் நேரிடும் நிலையில் உதவிகள் பெறுவதற்கான உத்தரவாதமாக இது விளங்குகிறது. பெற்றோர்களைப் பொறுத்தவரையில் தங்கள் கையில் இருக்கும் பணத்தை எவ்வாறு செலவிடுவது என்பதை அவர்கள்தான் நிர்வகிக்க வேண்டும். பிள்ளைகளின் இளம் வயது முதல் சிறுகச் சிறுக சேமிப்பைத் தொடங்க வேண்டும் என்று வான் சைஃபுல் குறிப்பிட்டார்.
நேற்று பி.டி.பி.டி.என். முகநூல் வாயிலாக நடைபெற்ற 2020 எஸ்.எஸ்.பி.என். சேமிப்பு மாதத்தை முடித்து வைக்கும் மற்றும் 2020 அனைத்துலக சேமிப்பு நாளைக் கொண்டாடும் வகையிலான நிகழ்ச்சியில் பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார். இந்த சேமிப்பு எதிர்காலத்தில் உங்கள் பிள்ளைகளின் கல்விக்கு கைகொடுக்கும். உதவி கேட்டு மற்றவர்களிடம் கையேந்தும் நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்றார் அவர்.
‘Jom Jadi Super hero Anak Anda’ என்ற கருப்பொருளில் 2020 எஸ்.எஸ்.பி.என். சேமிப்பு மாதம் அக்டோபரில் தொடங்கப்பட்டது. உயர் கல்வியைத் தொடருவதற்கான அவசியத்தின் அடிப்படையில் பிள்ளைகளுக்கு முன்னுதாரணமாக இருக்கும் வகையில் பெற்றோரின் பங்களிப்பை அடிப்படையாக வைத்து இத்திட்டம் தொடங்கப்பட்டது. எஸ்.எஸ்.பி.என். திட்டம் வழி குடும்பத்தாரும் தனிநபர்களும் சேமிப்பதை கட்டாயமாக்க முடியும். பிள்ளைகளின் நலனுக்காக சேமிப்பைக் கடைப்பிடிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும்.
இவ்வாண்டு தொடக்கம் முதல் செப்டம்பர் மாதம் வரையில் மொத்தம் 329,465 புதிய சந்தாதாரர்களை பி.டி.பி.டி.என். நிறுவனம் பெற்றுள்ளது. எங்களின் இலக்கு 268,000 மட்டுமே. அதனுடன் ஒப்பிடுகையில் மொத்த சேமிப்பி 98 கோடியே 32 லட்சத்து 10 ஆயிரம் வெள்ளியை எட்டியுள்ளது என்பதை வான் சைஃபுல் விளக்கினார். இவ்வாண்டு நாங்கள் திட்டமிட்டுள்ள 400,000 புதிய சந்தாதாரர்கள் மற்றும் 150 கோடி வெள்ளி சேமிப்பு என்ற இலக்கு நிறைவேறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
கடந்த 2004 இல் எஸ்.எஸ்.பி.என். தொடங்கப்பட்டது முதல் 2020 செப்டம்பர் மாதம் வரையில் மொத்தம் 47 லட்சம் எஸ்.எஸ்.பி.என். சந்தா கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன. இதன் மொத்த தொகை 687 கோடி வெள்ளியாகும். புதிதாக சேமிப்புக் கணக்குகளை திறக்க விரும்புவோர் அல்லது சேமிப்புத் தொகையை அதிகரிக்க விரும்புவோர் என்ற அகப்பக்கத்தில் விவரங்களைப் பெறலாம்.
உலகம் முழுவதும் கோவிட்-19 இன் பாதிப்பு தற்போது நிலவுகின்றது. இருந்த போதிலும் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக பெற்றோர்கள் தொடர்ந்து சேமிக்க வேண்டும். என அவர் வலியுறுத்தினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்