img
img

எஸ்எஸ்பிஎன் மலேசியர்களுக்கான மிகச் சிறந்த கல்வி சேமிப்புத் திட்டம்!
வெள்ளி 02 அக்டோபர் 2020 15:14:09

img

எஸ்எஸ்பிஎன் மலேசியர்களுக்கான மிகச் சிறந்த கல்வி சேமிப்புத் திட்டம் என்று பிடிபிடிஎன் தலைமைச் செயல்முறை அதிகாரி அஹ்மட் டாசுகி அப்துல் மஜிட் கூறினார்.

பிள்ளைகளின் எதிர்கால கல்வி இலக்குகளை அடைய பணம் மிகப் பெரிய தேவையாக இருந்து வருகிறது. படிக்கச் செல்லும்போது பணம் இல்லாமல் தவிப்பதை தவிர்க்க இப்போதே அதனை சேர்த்து வைக்கும் நோக்கில் தான் பிடிபிடிஎன் இந்த எஸ்எஸ்பிஎன் சேமிப்புத் திட்டத்தை அறிமுகம் செய்தது. குறிப்பாக எஸ்எஸ்பிஎன் வாராந்திர சேமிப்பு திட்டத்தை பிடிபிடிஎன் கடந்த 2018ஆம் ஆண்டு  அறிமுகம் செய்தது.

 

அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் சேமிப்புத் திட்டத்தை பிடிபிடிஎன் ஊக்குவித்து வருகிறது. எஸ்எஸ்பிஎன்னில் மக்கள் சேமிப்பதை ஊக்குவிக்க பல பரிசுத் திட்டங்களும் அறிமுகம் செய்யப்பட்டன. இதன் மூலம் சேமிப்பதன் மூலம் மக்கள் பரிசுகளை வென்று வருகின்றனர். கல்விக்காக சேமித்து வைக்கும் பெற்றோர்கள் தான் பிள்ளைகளுக்கு முதன்மை சூப்பர் ஹீரோக்களாக விளங்குகின்றனர்.

 

இதன் அடிப்படையில்தான் அக்டோபர் மாதத்திற்காக எஸ்எஸ்பிஎன் சேமிப்புத் திட்டம் சூப்பர் ஹீரோ என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது. கோவிட்-19 தொற்றின் தாக்கம் நாட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இருந்த போதிலும் சேமிப்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் இத்திட்டம் தொடரப்படுகிறது. மேலும் எஸ்எஸ்பிஎன்னில் சேமித்து வைப்பதால் பிள்ளைகளின் எதிர்காலம் மிகவும் சிறப்பானதாக இருக்கும் என்பதற்கு பிடிபிடிஎன் உத்தரவாதம் வழங்குகிறது என்று அஹ்மட் டாசுகி கூறினார்.

 

எஸ்எஸ்பிஎன்னில் சேமித்து வைப்பவர்களுக்கு பல சலுகைகளை பிடிபிடிஎன் வழங்கி வருகிறது. குறிப்பாக சேமிக்கும் தொகைக்கு டிவிடண்டும் வழங்கப்படும்.  கடந்தாண்டு சேமித்தவர்களுக்கு 4 சதவீதம் டிவிடண்ட் தொகை வழங்கப்பட்டது. ஷாரியா சட்டவிதிகளை பின்பற்றியே இது வழங்கப்படுகிறது. மேலும் எஸ்எஸ்பிஎன்னில் சேமிக்கும் பெற்றோர்களுக்கு 8 ஆயிரம் வெள்ளி வரி விலக்கு வழங்கப்படுகிறது.

 

எஸ்எஸ்பிஎன்-ஐயில் சேமித்து வைப்பவர்களின் தொகை 1000 வெள்ளியை கடக்கும் போது அவர்களுக்கு இலவசமாக தக்காஃபுல் காப்புறுதி வழங்கப்படுகிறது. எஸ்எஸ்பிஎன்-ஐ பிளஸில் மாதத்திற்கு குறைந்தது 30 வெள்ளியை சேமித்து வைப்பவர்களுக்கு 40 ஆயிரம் வெள்ளி மதிப்பிலான காப்புறுதி வழங்கப்படுகிறது. 36 விதமான நோய்களுக்கு இந்த காப்புறுதியை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அவர் கூறினார்.

 

எஸ்எஸ்பிஎன்-ஐ பிளஸில் சேமித்து வைப்பவர்கள் 2020 வோவ் அதிர்ஷ்ட குலுக்கலில் பங்கேற்கலாம். இவர்கள் மெர்சடிஸ் பென்ஸ் சி200 காருடன் 10 லட்சம் வெள்ளி ரொக்கத்தையும் வெல்ல வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. கடந்த 2004இல் இருந்து 31 ஆகஸ்ட் 2020 வரை 46 லட்சம் எஸ்எஸ்பிஎன் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன. இக்கணக்குகளின் வாயிலாக 676 கோடி வெள்ளி சேமிக்கப்பட்டுள்ளது. 

 

வரும் காலத்தில் 4 லட்சம் புதிய கணக்குகளின் வாயிலாக 150 கோடி வெள்ளியை சேமிப்பாக பெற பிடிபிடிஎன் இலக்கு கொண்டுள்ளது. இந்த இலக்கை நோக்கில் எஸ்எஸ்பிஎன் திட்டம் நகர்ந்து கொண்டிருக்கிறது என்று அஹ்மட் டாசுகி அப்துல் மஜிட் கூறினார். இதனிடையே அக்டோபர் மாதத்திற்கான எஸ்எஸ்பிஎன் சூப்பர் ஹீரோ சேமிப்புத் திட்டத்தில் அறிமுக விழா தலைநகரில் உள்ள இஸ்தானா தங்கும் விடுதியில் நடைபெற்றது.

 

பிடிபிடிஎன் வாரிய உறுப்பினர்களான டான்ஸ்ரீ டாக்டர் சுலைமான், டத்தோ அப்துல் ரசாக், ஹாஜா ரொஹாய்னி, பிடிபிடிஎன் தலைமை செயல்முறை அதிகாரி அஹ்மட் டாசுகி அப்துல் மஜிட் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் முக்கிய அங்கமாக வெற்றி பெற சேமிப்போம், எஸ்எஸ்பிஎன்னில் கணக்கு திறப்போம், மாதாந்திர வோவ் எஸ்எஸ்பிஎன்-ஐ ஆகியவற்றின் வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img