வெள்ளி 13, டிசம்பர் 2024  
img
img

16 ஆவது LAKSANA அறிக்கை
சனி 08 ஆகஸ்ட் 2020 13:43:01

img

காலாலம்பூர், ஆக. 16-

பந்துவான் சாரா ஹீடுப்  (ஆகுஏ) திட்டத்தின் கீழ் உதவிகளைப் பெறும் அங்கீகாரம் பெற்றுள்ள, ஆனால் அத்தொகையை இன்னும் பெறாதவர்கள் 2020 டிசம்பர் 31 வரையில் ஏதேனும் பி.எஸ்.என். வங்கிக் கிளைகளில் அத்தொகையைப் பெற்றுக்கொள்ளலாம்.

பி.எஸ்.எச். 2020க்கான மேல் முறையீட்டு விண்ணப்பங்களை 2020 ஆகஸ்ட் 7 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 7 வரையில் சமர்ப்பிக்கலாம்.  இந்த விண்ணப்பங்களுக்கு கட்டணங்கள் கிடையாது.

 

 பொதுமக்களுக்கு நினைவூட்டல்

 

 பி.எஸ்.எச். அதிகாரிகள் வாயிலாகவோ அல்லது தனிநபர் மூலமாகவோ கைப்பேசி வழியாக பி.எஸ்.எச். பதிவுச் சேவையை மலேசிய உள்நாட்டு வருமான வாரியம் (LHDNM) வழங்குவது இல்லை என்பது பொதுமக்களுக்கு நினைவூட்டப்படுகிறது. முகநூல் மற்றும் இதர சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருப்பதாகக் கூறப்படும் வாட்ஸ் அப் அல்லது தொலைப்பேசி எண்கள் வாயிலாக இது குறித்து LHDNM பதில் சொல்லாது, அதில் யாரும் தொடர்பு கொள்ள மாட்டார்கள்

 

 

தெனாகா நேஷனல் பெர்ஹாட் உடன் இணைந்து மலேசிய அரசாங்கம் சிறப்பு மின்கட்டணச் சலுகைகளை பொதுமக்களுக்கு வழங்குகின்றது.  2020 ஜூலை 31 வரையில் இச்சலுகையின் மொத்த மதிப்பு ரி.ம. 56 கோடியே 66 லட்சமாகும். இதில், ரி.ம. 36 கோடியே 45 லட்சம் பொதுமக்களுக்கும் (7.66 மில்லியன் பேர்) ரி.ம.20 கோடியே 21 லட்சம் தொழில்துறைச் சார்ந்தவர்களுக்கும் (1.44 மில்லியன்) வழங்கப்பட்டுள்ளது.

 

 ஊதிய உதவித் தொகை

 

 2020 ஜூலை 31 வரையில் ஊதிய உதவித் திட்டத்தின் கீழ் மொத்தம் ரி.ம.899 மில்லியன் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 26 லட்சம் பேர் (முந்தைய எண்ணிக்கை 25 லட்சத்து 80 ஆயிரம்) நன்மை அடைந்துள்ளனர்.

 

 கடனை திருப்பிச் செலுத்தும் அவகாசம்

 

 2020 இல் தங்கள் வேலையை இழந்து, புதிய வேலை கிடைக் காதவர் களுக்கு 2020 செப்டம்பர் 30 ஆம் தேதிக்குப் பிறகு மூன்று மாதங்களுக்கு அவகாசம் நீட்டிக் கப்படுகிறது. இந்த 3 மாதத்திற்குப் பிறகு தனிநபர்களின் நிலைமையைப் பொறுத்து வங்கிகளால் நீட்டிக்கப்படலாம். இன்னும் வேலை செய்கின்ற, ஆனால் தங்கள் சம்பளம் குறைக்கப்பட்ட பணியாளர்கள் கடன் வகையைப் பொறுத்து, குறைக்கப்பட்ட சம்பளத்திற்கு ஏற்ப மாதா மாதம் வங்கிக்குச் செலுத்தும் தொகை குறைக்கப்படலாம்.

 

 இ.பி.எப். iLestari திட்டம்

 2020 ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரை வெளியான மொத்தத் தொகை ரி.ம.571 கோடி. (ஒரு வாரத்திற்கு முன்பிருந்த ரி.ம.566 கோடியை விட இது அதிகமாகும்). மொத்தம் 45 லட்சம் பெறுநர்கள் நன்மை அடைந்தனர். பணியிலிருந்து ஓய்வுபெறுபவர்களுக்கு ஆலோசனை வழங்கும் சேவையையும் இ.பி.எப். இலவசமாக வழங்குகிறது. https://www.kwsp.gov.my/ms/member/retirement-advisory-service எனும் அகப்பக்கத்தில் பொதுமக்கள் இதன் விவரங்களைப் பெறலாம்.

 டாக்சி ஓட்டுநர்கள்

 

 முதல் கட்டத்தின் கீழ், 29,665 டாக்சி ஓட்டுநர்களுக்காக ரி.ம. 1 கோடியே 78 லட்சம் தொகையை அரசாங்கம் வழங்கியுள்ளது. 2 ஆவது கட்டத்தின் கீழ், 4,814 டாக்சி ஓட்டுநர்களுக்கு 2020 ஜூலை 22 ஆம் தேதி முதல் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. 2020 ஜூலை 31 வரையில் 1,376 பேருக்கு ரி.ம. 825,000 வழங்கப்பட்டுள்ளது.

 

 சுற்றுலா வழிகாட்டிகள்

 

 2020 ஜூலை 31 வரையில் மொத்தம் 7,570 சுற்றுலா வழிகாட்டிகள் (முந்தைய எண்ணிக்கை 7,547 பேர்) மொத்தம் ரி.ம. 45 லட்சத்து 40 ஆயிரத்தைப் பெற்றுள்ளனர். இத்தொகை முந்தைய தொகையான ரி.ம. 45 லட்சத்து 30 ஆயிரத்தை விட அதிகமாகும்.

 

 

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img