திங்கள் 02, டிசம்பர் 2024  
img
img

பிரிஹாத்தின் பெஞ்சானா
ஞாயிறு 26 ஜூலை 2020 13:38:43

img

 

கோவிட்-19 தொற்று உலக நாடுகளை மிகவும் கடுமையாக பாதித்துள்ளது. எனினும், நடப்பு அரசாங்கம் மேற்கொள்ளும் பல்வேறு பரிகாரங்களின் வாயிலாக நாடும், நாட்டு மக்களும் மீட்சி பெற்று வருகின்றனர் என்பதை உலக வங்கியும் (ஙிஆ) அனைத்துலக நிதிக்கழகமும் (ஐ–ஊ) உறுதி செய்துள்ளன. பொதுமக்கள் சுகாதார கவனிப்பு, நிதி உதவிகள், தொழில்துறைக்கான சலுகைகளை வழங்குவதில் மலேசிய அரசாங்கம் மேற்கொள்ளும் திட்டங்கள் உலக வங்கியின் பாராட்டைப் பெற்றுள்ளது. 

 

 சம்பள உதவித் திட்டம்

 

 ஜூலை 20 வரையில் 7.82 பில்லியன் வெள்ளி இதற்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 2.55 மில்லியனுக்கும் மேலான தொழிலாளர்கள் இதன் வழி நன்மை அடைந்துள்ளனர். இத்திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெற்ற முதலாளிகளின் பட்டியலை சொக்சோ பதிவேற்றம் செய்துள்ளது. சில முதலாளிகள் சம்பள உதவித் தொகையைப் பெற்றுக்கொண்டும் தங்கள் தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்திருக்கும் புகார்கள் தொடர்பில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 1300228000 கட்டணமில்லா தொலைபேசி வாயிலாக அல்லது perkeso.gov.my என்ற அகப்பக்கம் வாயிலாக சொக்சோவில் பொதுமக்கள் புகார் செய்யலாம்.

 

 பெக்கா பி40 திட்டம் (PEKA B40)

ஜூலை 20 வரையில் இத்திட்டத்தின் வழி மொத்தம் 7,695 கோரிக்கைகளுக்கு 588,000 வெள்ளிக்கும் மேல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சுகாதார பரிசோதனை, மருத்துவ உதவி, புற்றுநோய் சிகிச்சை சலுகைகள், போக்குவரத்து கட்டணச் சலுகைகள் இதில் அடங்கும்.

மை30 (MY30) திட்டத்தின் கீழ் மொத்தம் 119,844 அட்டைகள் விற்கப்பட்டுள்ளன. கடந்த வாரத்திலிருந்த 112,500 ஐ விட இது அதிகரிப்பாகும். மை30 திட்டத்திற்கான அரசாங்கத்தின் உதவித்தொகை 20.4 மில்லியன் வெள்ளியாகும்.

 

வேலைக்கமர்த்தி, பயிற்சியளிக்கும் திட்டத்திற்கான பதிவு கடந்த 2020 ஜூன் 15 ஆம் தேதி தொடங்கப்பட்டது முதல் மொத்தம் 5,055 தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர். அவர்களில் 3,500 பேர் 40 வயதுக்கும் குறைவானவர்கள், 800 பேர் 40 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள், 55 பேர் மாற்றுத் திறனாளிகள், 700 பேர் பயிற்சி பெற்றவர்கள் ஆவர்.

 2020 ஜூலை 20 ஆம் தேதி வரையில் பந்துவான் பிரிஹாத்தின் நேஷனல் (Bantuan Prihatin Nasional) திட்டங்களுக்காக 11.14 பில்லியன் வெள்ளி வழங்கப்பட்டுள்ளது. இது கடந்த வாரத்தில் இருந்த 11.06 பில்லியன் வெள்ளியை விட அதிகமாகும். உதவிக்காக மேல் முறையீடு செய்திருந்த 10,416 மில்லியன் பெறுநர்களும் இதில் அடங்குவர். கடந்த வார எண்ணிக்கை 10.4 மில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது. மேல் முறையீடு செய்தவர்களில் மொத்தம் 160,000 பேரின் விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதற்காக ஒதுக்கப்பட்ட தொகை 139 மில்லியன். 146,000 பேருக்கு இதுவரை மொத்தம் 125 மில்லியன் வெள்ளி வழங்கப்பட்டுள்ளது.

 

தொழில் நிறுவனங்களுக்கான உதவிகள்

மைக்ரோ எஸ்.எம்.இ. நிறுவனங்களுக்கான பிரிஹாத்தின் சிறப்பு மானியம் (GKP). கடந்த ஜூலை 20 வரையில் மொத்தமாக 1.64 பில்லியன் வெள்ளி இந்த சிறப்பு நிதிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது. மொத்தம் 545,000 மைக்ரோ எஸ்.எம்.இ. நிறுவனங்கள் பயனடைந்தன. உயர் கல்வி மாணவர்கள், மின்னியல் அழைப்புச் சேவைகள், டாக்சி ஓட்டுநர்கள், அரசாங்கப் பணி ஓய்வு பெற்றவர்கள் ஆகியோர் உள்ளிட்ட பிரிவினருக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ள பந்துவான் பிரிஹாத்தின் நேஷனல் போன்ற உதவிகள்  370.81 மில்லியன் வெள்ளியை எட்டியுள்ளது. இதன் அமலாக்க விகிதாச்சாரம் 91 விழுக்காடு ஆகும்.

 

 மொத்தம் 68 பில்லியன் வெள்ளி சம்பந்தப்பட்ட, அடுத்த மூன்று முதல் ஆறு மாதங்களில் மின்சாரக் கட்டணக் கழிவு, சம்பள உதவி, வங்கிகளில் 6 மாத அவகாசம்  போன்ற திட்டங்களுக்கான அமலாக்க விகிதாச்சாரம் 54 விழுக்காடு ஆகும்.

 

 அடுத்து பந்துவான் சாரா ஹீடுப் (Bantuan Sara Hidup) திட்டம். அரசாங்கம் அறிவித்துள்ளதைப் போல இதன் கீழான உதவிகள் கடந்த ஜூலை 24 தொடங்கி வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக ஒதுக்கப்பட்ட தொகை 3.0 பில்லியன் வெள்ளியால் மொத்தம் 4.28 மில்லியன் பேர் பயனடைவர். 3.75 மில்லியன் குடும்பங்களும் தனி நபர்களும் இதில் அடங்குவர். பி.எஸ்.எச். திட்டத்திற்கு வரும் ஆகஸ்ட் 7 முதல் செப்டம்பர் 6 வரையில் மேல்முறையீடு செய்யலாம்.

 

 

 

 

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img