img
img

அரசாங்கத்தின் வெ.1 மில்லியன் உதவி தொடர்ந்து செயல்பட ஊன்றுகோலாக இருந்தது
ஞாயிறு 19 ஜூலை 2020 13:35:42

img

 

கோலாலம்பூர், ஜூலை 19-

கோவிட்-19 நடமாட்டக் கட்டுப்பாட்டுக் காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட நிறுவனங்களில் ஜொகூர் பாருவில் செயல்பட்டு வரும் சிம்ஃபோனிக் எஞ்சினியரிங் செண்டிரியான் பெர்ஹாட் நிறுவனமும் ஒன்றாகும். அந்நிறுவனம் எவ்வாறு மீட்சி பெற முடிந்தது என்பதை அதன் நிர்வாக இயக்குநர் டத்தோ எஸ்.கண்ணன் மலேசிய நண்பனிடம் விளக்கம் அளித்தார்.

இக்கட்டுப்பாட்டு காலகட்டத்தில் அரசாங்கம் சில உதவித் திட்டங்களை அறிவித்ததை அனைவரும் அறிவோம். தொழில் நிறுவனங்களைப் பொறுத்த வரையில் கூடுமானவரை தொழிலாளர்களை வேலை யிலிருந்தோ, அவர்களின் சம்பளத்தையோ நிறுத்தக்கூடாது என்ற நிபந்தனையை அரசாங்கம் விதித்திருந்தது. நிறுவனங்களும் இந்த காலகட்டத்தில் நிறைய பாதிப்புகளை எதிர்நோக்கியிருந்தன. பெரும்பாலான நிறுவனங்கள் அந்தந்த மாதத்திற்கான வருமானத்தை நம்பியே செயல்பட்டு வருகின்றன.

எங்கள் நிறுவனத்தைப் பொறுத்த வரையில் முடியும் கட்டத்தில் இருந்த அதிகமான தொழில் நடவடிக்கைகளைத் தள்ளிப்போடும் சூழ்நிலை ஏற்பட்டது. சில நடவடிக் கைகள் பத்து மாதங்களுக்கு தள்ளிப்போடப் பட்டுள்ளன. இதனால் வருமானம் முழுமையாகத் தடைப்பட்டது. தொழில் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொள்வதிலும் சிரமம் ஏற்பட்டது. நானும் எஸ்.எம்.இ. குத்தகையாளர். உள்நாட்டுத் தொழிலாளர் களுடன் வெளி நாட்டினரும் வேலை செய்கின்றனர்.

பிரிஹாத்தின் மற்றும் பெஞ்சானா திட்டங்களின் கீழ் அரசாங்கம் வழங்கும் உதவிக்காக நானும் மனு செய்தேன். உடனடியாக எங்கள் நிறுவனத்திற்கு ஒரு மில்லியன் வெள்ளியை அரசாங்கம் அங்கீகரித்தது.

இது எங்களுக்குப் பேருதவியாக இருந்தது.

கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து இன்று வரை அதிகமான குத்தகைகளுக்கு பணம் வராமலேயே இருக்கிறது. அரசாங்கம் சரியான நேரத்தில் வழங்கிய உதவிக்காக நான்  நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்கள் நிறுவனத்தின் அடிப்படைத் தொழில்  கப்பல் பட்டறை, கப்பல் கட்டுமானம், எண்ணெய், எரிபொருள் துறைகளைச் சார்ந்ததாகும். சுமார் 25 ஆண்டுகளாக தங்கள் நிறுவனம் பீடு நடைபோட்டு வருவதாகவும்  நடமாட்டக் கட்டுப்பாட்டு காலகட்டத்தில் சுமார் 262 ஊழியர்கள் இங்கு வேலை பார்த்தனர் என்றும் டத்தோ கண்ணன் கூறினார். ஏற்கெனவே உறுதி செய்யப்பட்ட குத்தகைகள் கைவசம் இருந்ததால், அரசாங்கத்தின் உதவியுடன் தொடர்ந்து செயல்படுவதற்கு தங்களுக்கு வசதியாக இருந்ததாக அவர் சொன்னார்.  அரசாங்க உதவியால் தொழில் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டோம்

 

 கோவிட்-19 காரணமாக தங்கள் நிறுவனத்தில் ஒரு நிலையற்றத் தன்மை நிலவிய வேளையில் பிரிஹாத்தின், பெஞ்சானா திட்டங்களின் கீழ் அரசாங்கத்தின் நிதி உதவி தங்களுக்கு புத்துயிரைக் கொடுத்ததாகக் கூறுகிறார் சிலாங்கூர், கோலக்கிள்ளானில் இயங்கி வரும் ஆர்தா லொஜிஸ்டிக்ஸ் செண்டிரியான் பெர்ஹாட் நிறுவனத்தின்  இயக்குநர் விக்னேஸ்வரன் சுப்பிரமணியம். எங்கள் நிறுவனத்தில் சுமார் 100 பணியாளர்கள் உள்ளனர். அந்த வகையில் பாதிப்புகளை குறைக்கும் வகையில் அரசாங்கம் வழங்கியிருந்த சம்பள உதவித் திட்டமும் வங்கிகள் வழங்கியிருந்த ஆறு மாத அவகாசக் காலவரையும் பெருமளவு உதவியதாக அவர் சொன்னார்.

 

இந்த உதவிகளுக்கு எங்கள் நிறுவனம் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் உடனடியாகக் கிடைத்தன. ஆகவே, நாங்கள் தொடர்ச்சியாக எங்கள் நடவடிக் கைகளை மேற்கொள்வதற்கு இது உதவியாக அமைந்தது. இந்த நிறுவனம் மலேசிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் (மைடா) ஒருங்கிணைந்த அனைத்துலக போக்குவரத்துச் சேவை வழங்குநர் அந்தஸ்தை எங்கள் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. கடல்,கப்பல் மார்க்க சரக்கு போக்குவரத்து, விநியோகம், கிடங்கு போன்ற சேவைகளை வழங்குகிறோம்.

 

நடமாட்டக் கட்டுப்பாட்டுக் காலத்தில் ஒரு நிலையற்றத் தன்மையையே எங்கள் நிறுவனம் எதிர்நோக்கியிருந்தது.    அத்தியாவசிய நடவடிக்கைகளை நாங்கள் தொடர்ந்து மேற்கொண்டாலும் வேகம், உற்சாகம் குறைந்தது. ஆனாலும், நாங்கள் பாதிப்பை எதிர்நோக்கிய சில தினங்களிலேயே அரசாங்கம் உதவித்திட்டங்களை அறிவித் ததால் ஓரளவுக்கு எங்களால் சமாளிக்க முடிந்தது. கடந்த ஏப்ரல் மாதம் பெஞ்சானா திட்டத்திற்கு விண்ணப்பம் செய்தோம். பணியாளர்களைத் தொடர்ந்து தக்க வைப்பதற்கும் இது உதவியது. அவர்கள் யாரையும் நாங்கள் வேலை நீக்கம் செய்யவில்லை. இன்று வரை அவர்கள் தொடர்ந்து எங்களுடன் இணைந்திருக்கின்றனர்.

 

 

 

 

 

கோவிட்19 பாதிப்பிலிருந்து மீள்வதற்கு அரசாங்க உதவிகள்

 

அரசாங்கத்தின் பி.பி.என். அல்லது பந்துவான்  பிரிஹாத்தின் நேஷனல்

திட்டத்தின் கீழ் கடந்த ஜூலை 13 ஆம்

தேதி வரையில் மொத்தம் 11.06 பில்லியன் வெள்ளி வழங்கப்பட்டுள் ளது. இது அதற்கு முந்தைய வாரத்தை விட 10.92 பில்லியன் வெள்ளி அதிகமாகும். இதன் பெறுநர்களின் எண்ணிக்கை 10.4 மில்லியன் ஆகும்.

இ.பி.எஃப். ஐ-லெஸ்தாரி திட்டத்தின் கீழ், ஜூலை 13 வரையில் மொத்தம் 4.43 மில்லியன் விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டன. ஏப்ரல் முதல் ஜூலை மாதத்திற்கிடையில் மொத்தமாக 5.37 பில்லியன் வெள்ளி அத்திட்டத்தின் மூலமாக வழங்கப்பட்டுள்ளது.

7,484  சுற்றுலா வழிகாட்டிகளுக்கு 4.5 மில்லியன் வெள்ளி, 3,104 சுற்றுலா பஸ் ஓட்டுநர்களுக்கு 2 மில்லியன் வெள்ளி (ஜூலை 17 தொடங்கி), 3,000 பள்ளி பஸ் ஓட்டுநர்களுக்கு இந்த உதவிகள் நல்கப்பட்டு வருகின்றன.

 

 

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img