வெள்ளி 30, அக்டோபர் 2020  
img
img

பொருளாதார மீட்சிக்கு வித்திடும் பிரிஹாத்தின், பெஞ்சானா திட்டங்கள்
வியாழன் 17 செப்டம்பர் 2020 13:32:52

img

 பொருளாதார மீட்சிக்கு வித்திடும் பிரிஹாத்தின், பெஞ்சானா திட்டங்கள்

 

  கோலாலம்பூர், ஜூலை 12-

 

மொத்தம் 26,000 கோடி வெள்ளி மதிப்புள்ள பிரிஹாத்தின் பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் பெஞ்சானா பொருளாதார மீட்புத் திட்டத்துடன்  ஒரே சமயத்தில் அமலாக்கம் செய்யப்பட்டு வருகிறது. மொத்தமாக பிரிஹாத்தின் மற்றும் பெஞ்சானா திட்டங்களின் மதிப்பு 29,500 கோடி வெள்ளியாகும். அவற்றுள், 4,500 கோடி வெள்ளி அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நேரடி நிதி ஊக்குவிப்பாகும் என்பதை நிதி அமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஸாஃப்ருல் அப்துல் அஜிஸ் அண்மையில் கூறியிருந்தார்.

பல்வேறு பிரிஹாத்தின் திட்டங்கள் கடந்த ஜூன் மாதம் முதல் வரும் செப்டம்பர் மாதம் வரையில் அமலில் இருக்கும். நாடு முழுவதும் 24 லட்சம் வேலைகளை இத்திட்டங்களின் வழி பாதுகாக்க முடிந்தது. தங்களின் பொருளாதாரச் சுமைகளை குறைப்பதற்காக 1 கோடியே 10 லட்சம் பேர் உதவிகளைப் பெற்றுள்ளனர். சுமார் 300,000 க்கும் மேலான நிறுவனங்கள் ஆதரவு தெரிவித்தன. பெஞ்சானா என்பது இவ்வாண்டு ஜூன் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரைக்குமான குறுகிய கால பொருளாதார மீட்சித் திட்டமாகும். மக்களுக்கான சலுகைகளைப் பொறுத்த வரையில், வேலை வாய்ப்புகளில் முக்கியமாக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் 30 லட்சம் பணியாளர்களுக்கு உதவுவதற்காக 900

 

கோடி வெள்ளியை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது.

* வர்த்தகத் துறையில் மிகப்பெரிய நிறுவனங்கள், சிறிய நடுத்தர தொழில் நிறுவனங்கள், மைக்ரோ நிறுவனங்களுக்கு உதவுவதற்காக பல்வேறு சலுகைகள் உள்ளன.

* பிரிஹாத்தின் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட சொக்சோ மற்றும் வேலை வாய்ப்பை தக்கவைக்கும் (இ.ஆர்.பி.) திட்டம் ஆகியன தற்போது பெஞ்சானா திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இ.ஆர்.பி. திட்டத்தின் கீழ், கடந்த ஜூன் 5 ஆம் தேதி வரையில் 202,000 க்கும் மேலான பணியாளர்கள் 24 கோடி வெள்ளிக்கும் மேல் பெற்றுள்ளனர். இந்த நோக்கத்திற்காக தொடக்கத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 12 கோடி வெள்ளியை விட இது இரட்டிப்பு அளவாகும்.

மே மாத ஆரம்பத்திலிருந்து பொருளாதாரம் படிப்படியாக சீரடையும் திட்டத்தின் கீழ் சுமார் 1 கோடியே 27 லட்சம் அல்லது 83.5 விழுக்காட்டினர் மீண்டும் வேலைக்குத் திரும்பினர். இதன் கீழ், சம்பள உதவித் திட்டத்தில் இ.ஆர்.பி. இணைக்கப்பட்டு பெஞ்சானா திட்டத்தின் கீழ் விரிவாக்கம் கண்டு வருகிறது.

இதன் வழியாக, சம்பளம் இல்லா விடுமுறையில் இருந்த தங்கள் பணி யாளர்களுக்காக சம்பள உதவித் திட்டத்திற்காக முதலாளிகள் விண்ணப்பம் செய்வது கடந்த ஜூன் 15 ஆம் தேதி முதல் அமலில் இருந்து வருகிறது. நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு காலத்தில் செயல்பட அனுமதி மறுக்கப்பட்ட சுற்றுலா மற்றும் இதர துறை பணியாளர்களுக்கு உதவுவதும் இதன் நோக்கமாகும்.

 

பிரிஹாத்தின் திட்டத்தின் கீழ், மலேசிய தேசிய வங்கி மற்றும் இதர நிதிக் கழகங்கள் வாயிலாக எஸ்.எம்.இ. நிறுவனங்களுக்கு உதவுவதற்கு 700 கோடி வெள்ளி வழங்கப்பட்டுள்ளது. சிறப்பு நிவாரண நிதி, விவசாயத் துறை, தானியங்கி, டிஜிட்டல் துறைகள் சார்ந்த தொழில்துறைகளுக்கான நிதியுதவி, மைக்ரோ கடனுதவி ஆகியன இவற்றுள் அடங்கும்.

 

–MY30 பாஸ் விற்பனை சூடு பிடித்துள்ளது. கடந்த ஜூன் 30 ஆம் தேதி வரையில் 77,790 பேர் இதை வாங்கியுள்ளனர். இத்திட்டத்திற்காக பெஞ்சானா திட்டத்தின் கீழ் 20 கோடி வெள்ளியை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது. எம்.ஆர்.டி., எல்.ஆர்.டி., மோனோரயில், பி.ஆர்.டி., ரேப்பிட் கே.எல். பஸ்கள், எம்.ஆர்.டி. இணைச்சேவை பஸ்கள் ஆகியவற்றில் பயன்படுத்துவதற்காக 30 நாட்கள் கட்டுப்பாடற்றப் பயணத்தை மேற்கொள்ள இது வகை செய்கிறது. இதுவரைக்கும் 1 கோடியே 32 லட்சம் வெள்ளியை இது எட்டியுள்ளது.

 

பெஞ்சானாகெர்ஜாயா (PenjanaKerjaya)திட்டத்தின் கீழ் 150 கோடி வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டு 106,308 வேலை வாய்ப்புகளும்  வேலை தேடும் 123, 919 பேரும் MYFutureJobs திட்டத்தில் கடந்த ஜூலை 6 ஆம் தேதி வரையில் பதிந்து கொண்டுள்ளனர்.

 பெஞ்சானா/பிரிஹாத்தின் சலுகைகளில் சில:

* சம்பள உதவித் திட்டம் - கோவிட் - 19 பாதிப்பிலிருந்து மீள்வதற்காக அரசாங்கத்தால் அறிமுகம் செய்யப்பட்ட இத்திட்டம் நாடு முழுவதும் 24 லட்சம் வேலைகளைக் காப்பாற்றியுள்ளது. சுற்றுப்பயணத் துறை, நடமாட்டக் கட்டுப்பாட்டு காலத்தில் தடைசெய்யப்பட்ட தொழில் நடவடிக்கைகள், சம்பளம் இல்லா விடுமுறையில் உள்ள பணியாளர்கள் ஆகியோருக்கு இது உதவுகிறது.

 * வேலை இழந்தவர்கள் மற்றும் பயிற்சியாளர்களை வேலைக்கு அமர்த்துவோருக்கு 6 மாதங்களுக்கு வெ.600 - வெ.1,000 சலுகை வழங்குவது

 

 * போக்குவரத்துச் செலவுகளை குறைப்பதற்காக 6 மாதங்களுக்கு கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் பிரராரனா செண்டிரியான் பெர்ஹாட் மேற்கொள்ளும் சேவைகளுக்கு கட்டுப்பாடற்ற –MY30 பாஸ் திட்டம். 77,790 பேர் பயன்படுத்துகின்றனர்

 

 * இ.ஆர்.பி. திட்டத்தில் ஜூன் 5 வரையில் 202,000 க்கும் மேலான பணியாளர்கள் நன்மை அடைந்துள்ளனர். வெ.24 கோடிக்கும் மேல் வழங்கப்பட்டுள்ளது

 

 * பேங்க் நெகாரா, இதர நிதிக் கழகங்கள் இதுவரை எஸ்.எம்.இ. நிறுவனங்களுக்கு உதவ வெ.700 கோடி வழங்கப்பட்டுள்ளது.

 

 *  PenjanaKerjaya திட்டத்தில் வேலைக்காக 123,919 பேரும் 106,308 வேலை வாய்ப்புகளும் ஜூலை 6 ஆம் தேதி வரையில் பதிவாகியுள்ளன. இதற்காக வெ.150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
எளிமையான வழிகள் பெஞ்சானா வேலைக்கமர்த்தும் சலுகைகளுக்கு விண்ணப்பம் செய்வதற்கு

எளிமையான வழிகள் பெஞ்சானா வேலைக்கமர்த்தும் சலுகைகளுக்கு விண்ணப்பம்

மேலும்
img
டிஜி பிஸ்னஸ் திட்டம் 40% வரை வர்த்தக வளர்ச்சிக்கு உதவுகிறது

சிறியது முதல் பெரிய நிறுவனங்கள் வரையில் அனைத்து வகையான வணிகங்களுக்கும்

மேலும்
img
எஸ்எஸ்பிஎன் மலேசியர்களுக்கான மிகச் சிறந்த கல்வி சேமிப்புத் திட்டம்!

எஸ்எஸ்பிஎன் மலேசியர்களுக்கான மிகச் சிறந்த கல்வி சேமிப்புத் திட்டம்

மேலும்
img
16 ஆவது LAKSANA அறிக்கை

பந்துவான் சாரா ஹீடுப் (ஆகுஏ) திட்டத்தின் கீழ் உதவிகளைப் பெறும் அங்கீகாரம்

மேலும்
img
பிரிஹாத்தின் பெஞ்சானா

கோவிட்-19 தொற்று உலக நாடுகளை மிகவும் கடுமையாக பாதித்துள்ளது. எனினும்,

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img