img
img

மக்களுக்கான பரிவுமிக்க பொருதாரத் திட்டம் (பிரிஹாத் தின்) மற்றும் (பெஞ்சானா)
ஞாயிறு 21 ஜூன் 2020 13:04:37

img

 

கோலாலம்பூர், ஜூன் 21-

  பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் அறிவித்துள்ள மக்களுக்கான பரிவுமிக்க பொருளாதாரத் திட்டம் (பிரிஹாத் தின்) மற்றும் நாட்டின் பொரு ளாதார மீட்சித் திட்டம் (பெஞ் சானா) ஆகியன நாட்டிலுள்ள சிறிய, நடுத்தர தொழில் துறையை சார்ந்த தொழில் முனைவர்களுக்கு மிகப்பெரிய அளவில் உதவி வருகிறது.

கோவிட்-19 தொற்றின் காரணமாக நாடு முழுவதும் அமல் படுத்தப்பட்டிருந்த நடமாட்டக் கட்டுப்பாட்டின் காரணமாக சுமார் மூன்று மாதங்களாக தொழில் நிறுவனங்கள் முடக்கப்பட்ட காலகட்டத்தில் அத்தொழில் முனைவர்களுக்கு உதவும் நோக்கத்தில் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் இத்திட்டங்களை அறிவித்திருந்தார்.

  அந்த வகையில் பிரிஹாத்தின் திட்டத்தின் உதவியுடன் தங்கள் தொழில்துறைகளை தொடர்ந்து நடத்தி வரும் மூன்று தொழில் முனைவர்களை நாம் இங்கு சந்திக்க விருக்கின்றோம். அந்த வகையில் கிள்ளான் துறைமுகம், புலாவ் இண்டா தொழிற்பேட்டையில் இயங்கி வரும் மிகவும் பிரபலமான வி.ஜி. ஆஃப்ஷோர் கொண் டெய்னர்ஸ் இண்டர்நேஷனல் செண்டிரியான் பெர்ஹாட் (VG Offshore   Containers International (M) Sdn. Bhd.) நிறுவனத்தைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

 

  அதன் உரிமையாளர் ராமசாமி மேனனுடன் மலேசிய நண்பன் பேசுகையில் அரசாங்கத்தின் பிரிஹாத்தின் திட்டத்தின் வாயிலாக தங்கள் நிறுவனம் மீண்டும் உயிர்பெற்று வந்தது தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொண்டார். எரிபொருள், எரிவாயு கொள்கலன் தயாரிப்பு நிறுவன மாக இது விளங்குகிறது.  சுமார் 25 ஆண்டுகளாக இத்தொழில் துறையில் ஈடுபட்டு வரு கிறோம். எங்கள் நிறுவனத்தில் சுமார் 120 பணியாளர்கள் உள்ளனர். அவர்களில் மலேசியர்கள் 40 பேர் அடங்குவர். எங்கள் நிறுவனத்தின் பெரும்பாலான தயாரிப்புகள் ஏற்றுமதி செய்யப் படுகின்றன என்று ராமசாமி மேனன் (71) கூறினார்.

 

மலேசியாவில் இந்நிறுவனமே மிகப்பெரிய எரிபொருள், எரிவாயு கொள்கலன் தயாரிப்பு நிறுவனமாக விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பிரிஹாத்தின் திட்டத்தை பொறுத்த வரையில், அது எங்கள் நிறுவனத்திற்கு பெரும் உதவியாக விளங்குகிறது. கோவிட்-19 தொற்று நடமாட்டக் கட்டுப் பாட்டு ஆணைக்கு முன்னதாக எங்கள் நிறுவனம் சிறப்பான வகையில் செயல்பட்டு வந்தது. அப்போது எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 57 வெள்ளி யாக இருந்ததே இதற்கு காரணம்.

 

கடந்த மார்ச் 18 ஆம் தேதி நடமாட்டக் கட்டுப்பாடு விதிக் கப்பட்ட பிறகு ஏப்ரல் முதல் தேதியிலிருந்து வழக்கம் போல தொழில் நடவடிக்கைகளைத் தொடர்ந்து நடத்துவதற்கு அனைத்துலக வர்த்தகத் தொழில் துறை அமைச்சிடமிருந்து (MITI) அனுமதியைப் பெற்றோம். சுமார் இரண்டு வாரங்கள் எங்கள் நிறுவனம் மூடப்பட்டிருந்தது. அந்த காலகட்டத்தில் எங்கள் மலேசிய பணியாளர்களில் பெரும்பாலானவர்கள் வீட்டிலி ருந்தே வேலை செய்தனர். அந் நியத் தொழிலாளர்கள் மற்றும் தயாரிப்புப் பிரிவு ஊழியர்கள் தத்தம் இடங்களில் தங்கியிருந் தனர்.

 

   எங்களுக்கு வி.ஜி. மெட்டல், வி.ஜி. ஆஃப்ஷோர் என இரண்டு நிறுவனங்கள் உள்ளன. இரண்டு நிறுவனங்களுக்குமே பிரிஹாத்தின் திட்டத்தில் விண்ணப்பம் செய்தோம். வி.ஜி. ஆஃப்ஷோர் நிறுவனத்தின் கீழ் நால்வருக்கும் வி.ஜி. மெட்டல் நிறுவனத்தின் கீழ் 10 பேருக்கும் விண்ணப்பம் செய்தோம். மொத்தமாக 14 பணியாளர்களுக்கு பெர்கே சோவின் கீழ் 1,200 வெள்ளி பெறும் திட்டத்திற்கு (வெ.4,000 க்கும் குறைவான சம்பளம் பெறுபவர்கள்) தகுதி பெற்றுள் ளோம். இரண்டு வாரங்கள் மட்டுமே எங்கள் நிறுவனம் மூடியிருந்தா லும் விநியோகஸ்தர் நிறுவனங்கள் தொடர்ந்து முடங்கியிருந்ததால் பாதிப்பு ஏற்பட்டது. இருந்தாலும், இருப்பதை வைத்து நாங்கள் செயல்படத் தொடங்கினோம். வங்கிகள் வழங்கிய ஆறு மாத அவகாசம் உட்பட அரசாங்கத் தின் பிரிஹாத்தின் திட்டம் நாங்கள் செயல்படுவதற்கு உறுதுணையாக இருந்தது. எங்கள் பணி யாளர்கள் எவருக்கும் சம்பளக் குறைப்பை நாங்கள் செய்ய வில்லை என ராமசாமி மேனன் மேலும் கூறினார்.

 

 

உசாஹா ஜானா செண். பெர்ஹாட்

 

   நடமாட்டக் கட்டுப்பாடு காரணமாக பாதிப்பை எதிர்நோக்கிய மற்றொரு நிறுவனம், நிகழ்ச்சிகள் மேலாண்மைத் துறையைச் சார்ந்த  உசாஹா ஜானா செண். பெர்ஹாட் (Usaha Jana Sdn. Bhd.) நிறுவனமாகும்.

   அரசாங்கத்திடமிருந்து சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு கிடைத்த பிரிஹாத்தின் உதவித் திட்டம் வரவேற்கத்தக்கது. நடமாட்டக் கட்டுப்பாட்டு காலகட்டத்தில் எங்கள் பணியாளர்களை தக்கவைத்துக் கொள்வதற்காக ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையில் தலா 20,000 வெள்ளி எங்கள் நிறுவனத்திற்கு வழங்கப் பட்டது என்று அதன் உரிமையாளர் முகமட் நொராஷெடி அப்துல் ரஷிட் (Mohd. Norashedy Ab. Rashid) கூறினார்.

   நிகழ்ச்சிகள் ஏற்பாடு, விளம்பரம், அச்சுத்தொழில், காணொளி தயாரிப்பு, நிழற்படக்கலை ஆகியவற்றில் இந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இதன் வாடிக்கையாளர்களில் அதிகமாக அரசாங்க அமைச்சுகளும் அரசு சார்ந்த நிறுவனங்களும் அடங் கும்.

   கோவிட்-19 காரணமாக நடமாட்டக் கட்டுப்பாடு விதிக்கப்படு வதற்கு முன்பு எங்கள் நிறுவனத் தின் செயல்பாடுகள் சிறந்த முறையில் இருந்தன என குறிப்பிட்ட நொராஷெடி, கடந்த ஆண்டு டிசம்பர் வரையில் நிறைய நிகழ்ச்சிகள், நிலையான வரு மானத்தைக் காண முடிந்ததாகக் கூறினார்.

  ஆனால், இவ்வாண்டு ஜனவரி தொடங்கி மே மாதம் வரையில் எந்தவிதமான வருமானமும் எங்கள் நிறுவனத்திற்கு கிடைக்க வில்லை. காரணம் எந்த நிகழ்ச்சி களும் நடைபெற வில்லை. இப்போதுதான் சிறிது, சிறிதாக நிலைமை மாறி வருகிறது. ஏபெக் 2020 மாநாட்டிற்காக சில பணிகளை செய்து வருகிறோம்.

  எங்களின் பணியாளர்கள் மொத்தம் 19 பேர். அனைவருமே மலேசியர்கள். வர்த்தகத் திட்டத்தை பல்வகைப் படுத்தும் ஒரு காலகட்டத்தில் நாங்கள் இப்போது இருக்கிறோம் என்றார் அவர்.

பிரிஹாத்தின், பெஞ்சானா ஆகிய இரு திட்டங்களுமே நாட்டிலுள்ள சிறிய, நடுத்தர (எஸ்.எம்.இ.) வர்த்தகர் களுக்கு கைகொடுக்கும் இரு முக்கியமான திட்டங்களாக விளங்குகின்றன. வர்த்தகத் துறையில் புதிய வழக்க நிலையை அனுசரித்துப் போகும் ஒரு திருப்பு முனையில் உள்ள தொழில் முனைவர்களுக்கு இவை அரசாங்கம் வழங்கியுள்ள அரிய திட்டங்களாகவே கருதப்படுகின்றன.

நாட்டின் மேம்பாட்டில் எஸ்.எம்.இ. நிறுவனங்கள் வழங்கும் பங்களிப்பு அளப்பரியது.

 பிரிஹாத்தின் (PRIHATIN) திட்டத்தின் கீழ் இந்நிறுவன உரிமையாளர்களுக்கு வழங்கு வதற்காக சம்பள உதவித் தொகையை தொடக்கத்திலிருந்த 590 கோடி வெள்ளி யிலிருந்து 1,380 கோடி வெள்ளியாக அரசாங்கம் அதிகரித்துள்ளது.

   இத்தொகையில் 80 விழுக்காடு, மாதம் ஒன்றுக்கு வெ.4,000 க்கும் குறைவான சம்பளம் பெறும் ஊழியர் களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

  எஞ்சிய 20 விழுக்காடு மைக்ரோ தொழில் திட்டங்களில் ஈடுபட்டுள்ளவர்களுக் காக ஒதுக்கப் பட்டுள்ளது.

  பெஞ்சானா (PENJANA) திட்டத்தின் கீழ் வர்த்தகங்களின் மேம்பாட்டிற்காக சுமார் 3,500 கோடி வெள்ளி மதிப் புள்ள 40 சலுகைத் திட்டங்களை பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் அறிவித்துள்ளார். இது பொருளாதார மீட்சித் திட்டமாகும்.   

 

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img