இ.பி.எப். iLestari திட்டம்
2020 ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரை வெளியான மொத்த தொகை ரி.ம.571 கோடி. (ஒரு வாரத்திற்கு முன்பிருந்த ரி.ம.566 கோடியை விட இது அதிகமாகும்). மொத்தம் 45 லட்சம் பெறுநர்கள் நன்மை அடைந்தனர். பணியிருலிருந்து ஓய்வுபெறுபவர்களுக்கு ஆலோசனை வழங்கும் சேவையையும் இ.பி.எப். இலவசமாக வழங்குகிறது. https://www.kwsp.gov.my/ms/member/retirement-advisory-service எனும் அகப்பக்கத்தில் பொதுமக்கள் இதன் விவரங்களைப் பெறலாம்.
டாக்சி ஓட்டுநர்கள்
முதல் கட்டத்தின் கீழ், 29,665 டாக்சி ஓட்டுநர்களுக்காக ரி.ம. 1 கோடியே 78 லட்சம் தொகையை அரசாங்கம் வழங்கியுள்ளது. 2 ஆவது கட்டத்தின் கீழ், 4,814 டாக்சி ஓட்டுநர்களுக்கு 2020 ஜூலை 22 ஆம் தேதி முதல் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. 2020 ஜூலை 31 வரையில் 1,376 பேருக்கு ரி.ம. 825,000 வழங்கப்பட்டுள்ளது.
சுற்றுலா வழிகாட்டிகள்
2020 ஜூலை 31 வரையில் மொத்தம் 7,570 சுற்றுலா வழிகாட்டிகள் (முந்தைய எண்ணிக்கை 7,547 பேர்) மொத்தம் ரி.ம. 45 லட்சத்து 40 ஆயிரத்தைப் பெற்றுள்ளனர். இத்தொகை முந்தைய தொகையான ரி.ம. 45 லட்சத்து 30 ஆயிரத்தை விட அதிகமாகும்.
சுற்றுலா பஸ் ஓட்டுநர்கள்
2020 ஜூலை 22 தொடங்கி 3,104 சுற்றுலா பஸ் ஓட்டுநர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. 2020 ஜூலை 31 வரையில் 2,870 சுற்றுலா பஸ் ஓட்டுநர்கள் ரி.ம.17 லட்சத்தைப் பெற்றுள்ளனர்.
BSN மைக்ரோ கிரெடிட் திட்டம்
2020 ஜூலை 31 வரை, 8,738 எஸ்.எம்.இ. நிறுவனங்களுக்கு ரி.ம. 30 கோடியே 22 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. (ஒரு வாரத்திற்கு முன்னதாக இதன் எண்ணிக்கை 7,949 நிறுவனங்களாகவும் அவற்றுக்கான தொகை ரி.ம.27 கோடியே 80 லட்சமாகவும் இருந்தது.)
தெக்குன் திட்டம்
2020 ஜூலை 31 வரையில் 24,465 எஸ்.எம்.இ. நிறுவனங்களுக்கு (முந்தைய எண்ணிக்கை 24,187) மொத்தம் ரி.ம. 18 கோடியே 35 லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்பட்டது. (ஒரு வாரத்திற்கு முன்பு வழங்கப்பட்ட தொகை ரி.ம. 18 கோடியே 10 லட்சம் ஆகும்.)
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்