கோலாலம்பூர், ஆக. 14-
பிடிபிடிஎன் எனப்படும் தேசிய உயர்கல்வி கடனுதவிக் கழகத்தின் தேசியக் கல்வி சேமிப்புத் திட்டத்தின் முதலீடு 19.66 விழுக்காடு உயர்வு கண்டிருக்கிறது. கடந்தாண்டு முதல் ஆறு மாதங்களில் அதன் முதலீடு 9 கோடியே 90 லட்சமாக இருந்தது. இவ்வாண்டு அது 11 கோடியே 84 லட்சத்து 60 ஆயிரம் வெள்ளியாக உயர்வு கண்டிருக்கிறது.
பிடிபிடிஎன் கடனுதவி பெற்றவர்கள் கோவிட்-19 தொற்று காரணமாக தங்களின் கடன்களை திருப்பிச் செலுத்த முடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்டனர். கடன்களை திருப்பிச் செலுத்த அவர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. எனினும் தேசிய கல்வி சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருப்பதாக நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் பிடிபிடிஎன் தெரிவித்தது.
கோவிட்-19 காரணமாக நாட்டின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. பிடிபிடிஎன் மீது நம்பிக்கை வைத்து அதன் சேமிப்புத் திட்டத்தில் மக்கள் முதலீடு செய்து வருகின்றனர். இவ்வாண்டு இதுவரையில் மட்டும் இந்த சேமிப்புத் திட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 84 ஆயிரமாக இருக்கிறது. குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்களின் உயர்கல்வியை தொடர்ந்து மேற்கொள்ள உதவும் வகையில் கடந்த 2004ஆம் ஆண்டு பிடிபிடிஎன் கடனுதவித் திட்டம் அமலுக்கு வந்தது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்