திங்கள் 02, டிசம்பர் 2024  
img
img

வெ.150 கோடி சேமிப்புத் தொகைக்கு பி.டி.பி.டி.என். இலக்கு
செவ்வாய் 14 ஜூலை 2020 17:38:32

img

கோலாலம்பூர், ஜூலை 15-

தேசியக் கல்விச் சேமிப்புத் திட்டத்தில் (எஸ்.எஸ்.பி.என்.) வெ.150 கோடி மதிப்புள்ள சேமிப்புத் தொகையுடன் 4 லட்சம் சேமிப்பாளர்களை இவ்வாண்டில் இணைக்க தேசிய உயர்கல்வி சேமிப்பு நிதி அமைப்பு (பி.டி.பி.டி.என்.) இலக்குக் கொண்டுள்ளதாக அதன் தலைவர், வான் சைஃபுல் வான் ஜான் தெரிவித்தார்.

தற்போது கோவிட்-19 காரணத்தினால் பொருளாதாரச் சவாலை எதிர்நோக்கியிருக்கின்ற போதிலும் இவ்வாண்டு ஜனவரி தொடங்கி மே மாதம் வரை வெ.56.42 கோடி சேமிக்கப்பட்டு உள்ளது. இத்தொகை  கடந்த ஆண்டின் இதே கால கட்டத்தில் சேமிக்கப்பட்ட வெ.38.018 கோடியைக் காட்டிலும் அதிகமாகும்.

கடந்தாண்டுக்கான எஸ்.எஸ்.பி.என்.னின் ஒட்டுமொத்தச் சேமிப்புத் தொகை வெ.130 கோடியாகும். நாட்டில் எஸ்.எஸ்.பி.என். கடந்த 2004இல் அறிமுகப்படுத்தப்பட்டது  முதல் இவ்வாண்டு மே மாதம் வரை 45 லட்சம் வங்கிக் கணக்குகள் திறக்கப்பட்டு சேமிப்புத் தொகை வெ.640 கோடி வரை எட்டியுள்ளது.

இப்போது நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு கால கட்டத்தில் இருக்கின்ற போதிலும் எஸ்.எஸ்.பி.என்.னில் இவ்வாண்டு ஜனவரி தொடங்கி மே மாதம் வரை சேமிக்கப்பட்ட தொகையில் வெ.18.402 கோடி உயர்வு அல்லது கடந்தாண்டின் இதே கால கட்டத்தைக் காட்டிலும் 48.4 விழுக்காடு உயர்வு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று பி.டி.பி.டி.என். தலைமையகத்தில் எஸ்.எஸ்.பி.என். ஐ-பிளஸ் 2020க்கான அதிர்ஷ்டக் குலுக்குத் திட்டத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றிய போது வான் சைஃபுல் வான் ஜான் குறிப்பிட்டார்.

கல்விச் சேமிப்பை ஊக்குவித்து   விசுவாசமிக்க சேமிப்பாளர்களை மதிக்கும் பொருட்டு வெ.10 லட்சம் மதிப்புள்ள பரிசுகள் கொண்ட எஸ்.எஸ்.பி.என். ஐ-பிளஸ் 2020க்கான அதிர்ஷ்டக் குலுக்குத் திட்டத்தை பி.டி.பி.டி.என். தொடங்கியது.

இந்த அதிர்ஷ்டக் குலுக்கு உண்மையில் ஒரு சிறப்பு சலுகைத் திட்டம் மட்டுமின்றி எஸ்.எஸ்.பி.என்.-ஐ பிளஸ் கடந்த 2015இல் அறிமுகப்படுத்தியதில் இருந்து ஒரே தன்மை கொண்டதாகவும் விளங்குகிறது.

இந்த அதிர்ஷ்டக் குலுக்குத் திட்டத்தில் வருடாந்திர மற்றும் மாதாந்திரத் திட்டம் என்று 2 வகைத் திட்டங்கள் உள்ளன. இதில் மாதாந்திரத் திட்டம் ஜூலை மாதம் 1ஆம் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரையிலும் வருடாந்திரத் திட்டம் ஜனவரி 1ஆம் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரை நடத்தப்படும்.

வருடாந்திர அதிர்ஷ்டக் குலுக்குத் திட்டத்தில் முதல் பரிசாக மெர்சிடிஸ் பென்ஸ் சி200 எஃப்.எல் ஏ.எம்.ஜி லைன், 2ஆவது பரிசு வெ.50,000 ரொக்கம், 3ஆவது பரிசு வெ.30,000 ரொக்கம் மற்றும் ஆறுதல் பரிசாக 1,000 சேமிப்பாளர்களுக்கு வெ.500 வழங்கப்படும். மாதாந்திர அதிர்ஷ்டக் குலுக்கில் எஸ்.எஸ்.பி.என்.னின் 20 சேமிப்பாளர்கள் ஒவ்வொரு மாதமும் வெ.2,020 ரொக்கப் பரிசைப் பெறுவர்.

அதனால் எஸ்.எஸ்.பி.என். ஐ-பிளசில் வங்கிக் கணக்கைத் திறந்து அதிகரிக்க வேண்டும் என்றால் ரொக்கமில்லாப் பணப் பரிவர்த்தனையை எஸ்.எஸ்.பி.என். இணையத்தளத்தின் வழி மேற்கொள்ளலாம் அல்லது பி.டி.பி.டி.என். சந்தை நிர்வாகியைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது அருகிலுள்ள மாநில பி.டி.பி.டி.என். அலுவலகத்திற்குச் செல்லலாம்

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img