வியாழன் 12, டிசம்பர் 2024  
img
img

பிடிபிடிஎன் - சொக்சோவின் இணைய வேலை வாய்ப்பு சந்தை
வெள்ளி 26 ஜூன் 2020 15:09:48

img

கோவிட்-19 தொற்றின் தாக்கத்தால் மலேசியர்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக பட்டதாரிகள், இளைஞர்கள் என பலரும் வேலை வாய்ப்புகளை இழந்து வருகின்றன. நாட்டில் வேலையில்லா திண்டாட்டத்தை தவிர்க்க மனிதவள அமைச்சு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஓர் அங்கமாக மனிதவள அமைச்சு, உயர் கல்வி அமைச்சுடன் கைகோத்து உள்ளது.

இவ்விரு அமைச்சுகளின் துணை நிறுவனங்களான பிடிபிடிஎன், சொக்சோ ஆகியவை இணைந்து இணையம் வழி வேலை வாய்ப்பு சந்தையை ஏற்பாடு செய்துள்ளன. இந்த வேலை வாய்ப்பு சந்தை வரும் ஜூன் 30ஆம் தேதி தொடங்கி ஜூலை 3 ஆம் தேதி வரை காலை 9.30 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த வேலை வாய்ப்பு சந்தை முழுமையாக இணையத்தில் தான் நடைபெற்றவுள்ளது. மேலும்நேர்முகத் தேர்வும் இணையம் வாயிலாகவே நடைபெறும்.

பிடிபிடிஎன் கல்வி கடனுதவி பெற்ற பட்டதாரி மாணவர்கள் மட்டுமே இவ்வேலை வாய்ப்பு சந்தையில் பங்கேற்க முடியும். மொத்தம் 20 முன்னணி நிறுவனங்கள் இந்த வேலை வாய்ப்பு சந்தையில் அங்கம் வகிக்கவுள்ளன. சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் பட்டதாரி மாணவர்களுக்கு தயார் நிலையில் உள்ளது. இதன் மூலம் 4 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்கும். வேலையில்லா திண்டாட்டத்தையும் தவிர்க்க முடியும் என்று அஹ்மட் டாசுகி அப்துல் மஜிட் செய்தியாளர்களிடம் கூறினார்.

இதனிடையே பிடிபிடிஎன், சொக்சோ இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வு நேற்று புத்ராஜெயாவில் நடைபெற்றது. மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன், உயர் கல்வி அமைச்சர் டத்தோ டாக்டர் நோராய்னி அஹ்மட் ஆகியோரின் முன்னிலையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

பிடிபிடிஎன் தலைமை இயக்குநர் அஹ்மட் டாசுகி அப்துல் மஜிட், சொக்சோ தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ  டாக்டர் முகமட் அஸ்மான் ஆகியோர் ஒப்பந்த ஆவணங்களை மாற்றிக் கொண்டனர். இதனிடையே இந்த வேலை வாய்ப்பு சந்தையில் பங்கேற்க விரும்பும் பட்டதாரிகள் https://career fair.perkeso.gov.my/  எனும் அகப்பக்கத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img