நாட்டை கோவிட் - 19 நச்சுயிரி நோய் உலுக்கி வரும் வேளையில், குறிப்பிட்ட சில நிறுவனங்கள் பயனீட்டாளர்களிடமிருந்து கொள்ளை லாபம் அடிப்பதை தடுத்து நிறுத்தும் முயற்சியில் அரசு தீவிரம் காட்ட வேண்டும் என மலேசிய நண்பன் இப்புதிய அரசாங்கத்தை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
நாட்டு மக்கள் எதிர்நோக்கியுள்ள இந்த இக்கட்டான நேரத்தில் பல்வேறு தரப்பினர் தங்களின் சக்திக்கு ஏற்றவாறு மக்களுக்கு பல்வேறு வகையில் உதவிகளைச் செய்து வருகின்றனர்.
ஆனால், லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் மூலமாக கோடிக்கணக்கான வெள்ளி வருமானம் பெறும் ஆஸ்ட்ரோ கட்டண தொலைக்காட்சி நிறுவனம் உட்பட மெக்சிஸ், டிஜி, செல்கோம் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எந்த வகையில் மக்களின் சுமையைக் குறைப்பதற்கு தங்களின் பங்கினை ஆற்றி வருகிறது என்றால், ஒன்றுமே இல்லை என்ற பதில்தான் கிடைக்கும்.
பயனீட்டாளர்களிடமிருந்து பல கோடி வெள்ளியை லாபமாகப் பெறும் மேற்கண்ட நிறுவனங்கள் இதுபோன்ற நெருக்கடியான காலகட்டத்தில் பெரும் நிதிச்சுமையை எதிர்நோக்கி வரும் மலேசியர்களுக்கு தங்களால் முடிந்த அளவில் கட்டணக் கழிவுகள் வழங்குவதே நியாயம்.
அரசாங்கம் பிறப்பித்துள்ள மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவினால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் இந்நேரத்தில் ஆஸ்ட்ரோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு தரமான நிகழ்ச்சிகளைப் படைக்க முடியாவிட்டாலும்கூட, தனது வாடிக்கையாளர்களுக்கு மாதாந்திர கட்டணத்தில் கழிவு வழங்கு வதற்காவது முன்வர வேண்டும்.
அதேபோல், நாட்டிலுள்ள மெக்சிஸ், டிஜி, செல்கோம் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறப்புக் கழிவுகளை வழங்க முன்வர வேண்டும்.
நாடு முழுவதும் மக்கள் நடமாட்டக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களின் வாழ்வாதாரம் எல்லா நிலைகளிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தொலைத் தொடர்புக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் தங்களின் கைப்பேசி கட்டணங்களைச் செலுத்த முடியாமல் மக்கள் தடுமாறி நிற்கும் அவலநிலையை இந்நிறுவனங்கள் கொஞ்சம் சிந்தித்து பார்க்க வேண்டும்.
இவ்விவகாரத்தில் அரசாங்கம் நேரடியாக தலையிட்டு ஆஸ்ட்ரோ கட்டண தொலைக்காட்சி உட்பட மேற்குறிப்பிட்ட தொலைத் தொடர்பு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
நாட்டு மக்கள் நிதி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள இந்நேரத்தில் தாங்கள் அதிக லாபம் சம்பாதிக்க இது நேரமில்லை என்பதை மேற்குறிப்பிட்ட நிறுவனங்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்!
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்